சித்து விளையாட்டால் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி டமால் !

வெற்றியை தோல்வியாக மாற்றும் ரகசியம் – காங்கிரஸ் மட்டுமே அறியும்

!1, கேரளாவில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் என மாறி மாறி ஆட்சி வரும் வழக்கத்தை மாற்றி பிணறாயியையே மீண்டும் ஆட்சியில் அமரச் செய்யுமளவுக்கு கேரள காங்கிரஸில் குழப்பம் ஏற்படுத்தி, பெற வேண்டிய வெற்றியை தோல்வியாக மாற்றியது காங்.

2, ராஜஸ்தானில் இன்னும் அஷோக் கெஹலாட் – சச்சின் பைலட் சண்டை முடிந்தபாடில்லை.3, மத்திய பிரதேசத்தில் சிந்தியாவை பாஜகவுக்கு இழந்து, அதோடு ஆட்சியையும் பாஜகவிடம் இழந்தது காங்.4, உத்தராகண்டில் பாஜக ஆட்சிக்கு எதிராக anti incumbancy உருவாகும் வேளையில், அந்த மாநில காங்கிரஸையும் சொதப்பியுள்ளது காங்.

5, அமரீந்தர் சிங்கை தவிர வேறு ஆளில்லை பஞ்சாபில் என்றிருந்த நிலையை சொதப்பி, நவ்ஜோத் சிதுவை மேலே கொண்டு வந்து, குளறுபடிகள் செய்தது காங்கிரஸ். இந்த இழுபறியால் அங்கே காலிஸ்தானிகள் உதவியால் ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக வளரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் வேளையில் அதை எல்லாம் சரி செய்ய அமரீந்தர் சிங்குக்கு வாய்ப்பிருந்தாலும், இன்று மேலும் சொதப்பி அமரீந்தரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது காங்கிரஸ்.

கட்சியை விட்டு வெளியேறுவாரா அமரீந்தர் என்பது தெரியவில்லை. என்றாலும்….. தோல்விகளை வெற்றிகளாக மாற்றத் தெரியாத காங்கிரஸ் இப்போது வெற்றிகளை தோல்விகளாக மாற்றிக் கொண்டுள்ளது. கர்நாடகா, உத்தராகண்ட், அஸ்ஸாம், குஜராத் என பல மாநிலங்களிலும் முதல்வரைகளை மாற்றியது பாஜக. எந்த மாநிலத்திலும் பெரிதாக சலசலப்பில்லை. அஸ்ஸாமில் தேர்தலுக்கு பின் மாற்றியது பாஜக .

மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு நிறைய அவகாசம் இருக்கும் போதே மாற்றிவிட்டது. காரணம்: anti incumbancy . குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சி. மற்ற மாநிலங்களிலும் ஆளும் பாஜக முதல்வருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக உருவாகும் எதிர்ப்பை சமாளிக்க, இப்போதே மாற்றங்களை கொண்டு வருகிறது பாஜக. பழைய சட்டமன்ற உறுப்பினர்களில் சிறப்பாக செயல்படாதவர்கள் தவிர மற்றவர்களுக்கு மறுவாய்ப்பு மறுக்கப்படுகிறது. குஜராத்தில் இப்போது வந்திருப்பவர் பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் கவனிக்க வேண்டியது. காங்கிரஸை போல இம்முடிவுகள் டில்லியில் எடுக்கப்படுவதில்லை பாஜகவில். மாநில தலைவர்கள் முடிவெடுக்கிறார்கள். எனவே அதிக சலசலப்பில்லை.

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version