ரஜினியின் பின் வாங்கல் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? யார் காரணம்?

இப்போது கொழுந்துவிட்டு எரியும் பிரச்சாரம் பாஜகவுக்கு நஷ்டம் என்றும்
நடக்கும் விவாதம் பாஜக தூண்டியது என்பதும்

எது உண்மை?

ரஜினியை தூண்டியது பாஜக என்றால்
ரஜினியின் withdrawal முடிவை
பாஜகவால் தடுத்திருக்க முடியாதா?

நிச்சயம் முடிந்திருக்கும்

பாஜக ஆரம்பித்திருந்தால் இந்த விளையாட்டு தேர்தல் முடியும் வரை தொடர்ந்திருக்கும் – இது… அரசியல் அறிவு …LKG அளவு உள்ளவனுக்கு கூட …தெரியும்.

பின் ஏன் ரஜினி “முடிவை அறிவித்தார்.?

திமுகவின் தூண் – “நிதி”க்கள்

அண்ணாத்தே – பட தயாரிப்பாளர் யார்?

கலாநிதிமாறன்

ஐதராபாத்துக்கு அழைத்து 5 நாள் “நாடகம்” நடத்தி
Blood Pressure காரணம் சொல்லி
முதல் எபிசோடு திமுகவால் முடித்து வைக்கப்பட்டது.

இம்முறை ஜெயிக்காவிட்டால் அதோகதிதான் என்னும் நிலையிலுள்ள திமுக- ரஜினி வரவை-விரும்பவில்லை.

இம்முறை “கணிப்புகள்”
தொங்கு சட்டசபை” என சொன்னது.
தொங்கு சட்டசபை – advantage – பாஜக தானே!

இந்த ஆபத்தை தடுக்க – ரஜினிக்கு சூனியம்(மிரட்டல்) வைக்கப்பட்டு திமுக அண்ட் கோ வெற்றி அடைந்தது.

ஆனால் உண்மையில் தன் தலையில்தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது

ஆம் ரஜினி ஆதரவு ஓட்டுக்கள் யாருடையது.?

அவை திமுக எதிர்ப்பு ஓட்டு!

திமுக எதிர்ப்பு ஓட்டின் குத்தகைதார் யார்? யார்?
அதிமுக- பாஜக

ரஜினி நின்றிருக்தால் பாதிப்பு யாருக்கு?
ADMK-BJP

அப்படி ஒட்டு பிரிந்தால் லாபம் யாருக்கு?
திமுகவுக்கு

அப்படியாயின் ரஜினியின் withdrawal யாருக்கு நஷ்டம்?
திமுகவுக்கு

தனக்கு நட்டம் வரும் என்று தெரிந்தே திமுக இம்முடிவு எடுக்குமா? என நீங்கள் கேட்பது புரிகிறது.

வன்மமும். பதவி ஆசை வெறியும்.. பாஜகவை அவமானப்படுத்த வேண்டும் என்னும் பொறாமையும்.. திமுகவின் கண்ணை மறைத்தது.

விளைவு ரஜினி மீது உடல்நிலை அழுத்தம் (ரத்த அழுத்தம் – மன அழுத்தம் வேறு) கொடுக்கப்பட்டு திமுக வெற்றிபெற்றது.

இப்போது advantage BJP-ADMK
ஏன்?

ரஜினி நின்றிருந்தால மேற்சொன்னவர்களின் ஒட்டு தான் பிரிந்திருக்கும் அதாவது BJP – ADMK

ஆனால் தற்போது அவை Intact- பாதுகாக்கப்பட்டது.

அதை விட ஆடிட்டர் குருமூர்த்தி – மந்திரி ஜெயகுமார் ஸ்டேட்மெண்ட் படி ரஜினி இக்கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கலாம். அதனால் பொதுஜனம் இவர்களை ஆதரிக்கலாம்.

இதுதான் Climax twist ஆன புதுக்கதை |

தற்போது பரப்பப்படும் Rajni – Exit – BJP க்கு நட்டம் என்பது அல்லது BJP முகத்தில் கரிபூசல் என்னும் திமுக கூடார பிரச்சாரம் பாஜகவுக்கு எந்த நஷ்டமுமில்லை

மாறாக பாஜகவிற்கு செலவில்லாமல் கிடைக்கும் விளம்பரம்

ஆக ஒரு ஆன்மீகவாதி
அவரை அறியாமலே
ஒரு தேசீயவாதியை பலப்படுத்தி
ஒரு நாத்திக- தேவிரோத கும்பலை
பலகீனப் படுத்திவிட்டு
சென்றுள்ளார்.

இந்த உண்மையை
இப்போது புரிந்ததா?

SR சேகர்
மாநிலப் பொருளாளர்
பாஜக

Exit mobile version