அயோத்யாவில் ராமர் கோவில் திறப்பு விழா நெருங்கும் நேரத்தில்…காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் கரசேவகர்கள் கைது…

Karasevakars Arrested

Karasevakars Arrested

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த 60 வயது உடைய ராமர் கோயில் கரசேவகர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இங்கு ராமர்கோயில் கட்ட வேண்டி நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைந்து வரும் 22ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் பா.ஜ.வினர் இருவரை பழைய வழக்கு ஒன்றில் ஹூப்பாளி போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் கரசேவர்களாக இருந்தனர் என்பது தெரியவந்தது. 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.வினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் 60 வயதை கடந்துவிட்டனர்.

இது அரசியல் பழிவாங்கும் நோக்கில் கர்நாடகா காங்கிரஸ் அரசு செயல்படுவதாக புகார் கூறியுள்ளனர்.மேலும் பல இந்து அமைப்புகள் இதற்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றன.

Exit mobile version