இந்து மதத்திற்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்! இந்த மாதம் இந்துக்களின் மாதம்!

வருடம் முழுவதும் விழாக்கள் உள்ள மதம் இந்து மதம். அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதம் தொடக்கம் வரை இந்துக்களின் விழாக்கள் நிறைந்திருக்கும்.உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழாக்கள் நிறைந்திருக்கும். தசரா, துர்கா பூஜை, நவராத்திரி, தீபாவளி என தொடர் விழாக்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும்.

இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் அக்டோபர் மாதம் ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள 20 க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் அமெரிக்க அரசுஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் உள்ள இந்துக்கள் தசராதுர்கா பூஜை நவராத்திரி தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை அக்டோபரில் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் ஹிந்துக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் டெக்சாஸ் நியூ ஜெர்சி ஜார்ஜியா புளோரிடா மிச்சிகன் உட்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டு உள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: யோகாவில் இருந்து உணவு வரை பண்டிகைகளில் இருந்து தொண்டு வரை நடனம் இசை அஹிம்சை தத்துவங்கள் என அமெரிக்கர்களின் வாழ்வில் ஹிந்து கலாசாரம் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது.

எனவே ஹிந்துக்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ல் கொண்டாடப்படுவதால் இந்த பாரம்பரிய மாத கொண்டாட்டத்தை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version