இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பல புதுமைகள், விவரம் இதோ….

ந்தியர்களாகிய நாம் இன்று நாட்டின் 73வது குடியரசு தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கம்பீரமான ராஜ்பத்தில் பிரமாண்ட அணிவகுப்புடன் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். 

இந்த ஆண்டு குடியரசு தினத்தில் பல புதிய விஷயங்களை நாம் காணவுள்ளோம். உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1,000 ட்ரோன்கள் மூலம் ட்ரோன் ஷோ முதல் இந்திய விமானப்படையின் 75 விமானங்கள் மூலம் கிராண்ட் ஃப்ளைபாஸ்ட் வரை, விஜய் சௌக்கில் நடைபெறும் குடியரசு தின நிகழ்வு மற்றும் ‘பீட்டிங் தி ரிட்ரீட்’ விழாக்களுக்காக பாதுகாப்பு அமைச்சகம் புதிய நிகழ்வுகளை உருவாக்கியுள்ளது. 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டில் இருப்பதால், ‘சுதந்திற்றத்தின் அம்ருத மஹோத்சவம்’ இந்த ஆண்டு கொண்டாடப்படுகின்றது. ஆகையால் இந்த ஆண்டின் குடியரசு தின நிகழ்வுகளும் சிறப்பம்சம் பெற்றவையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 முதல் 30 வரை, ஒரு வாரத்திற்கு இனி குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என அரசாங்கம் கூறியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய கொண்டாட்டங்கள் ஜனவரி 30ஆம் தேதி (தியாகிகள் தினம்) நிறைவடைகிறது. 

குடியரசு தின நிகழ்வில் இந்த ஆண்டு முதன் முறையாக நடிபெறும் நிகழ்வுகள் 

– முதன்முறையாக, இந்திய விமானப்படை (IAF) 75 விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்கள் மூலம் கிராண்ட் ஃப்ளைபாஸ்ட்டை காண்பிக்கும்.

– அணிவகுப்பில் கலாச்சார நிகழ்ச்சியின் போது நடனமாடவுள்ள 480 நடனக் கலைஞர்கள் நாடு தழுவிய வந்தே பாரதம் நடனப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். – உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1,000 ஆளில்லா விமானங்கள் மூலம் ஒரு ட்ரோன் ஷோவும் ‘பீட்டிங் தி ரிட்ரீட்’ விழாவிற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதனுடன் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் முதல் முறையாக காண்பிக்கப்படும்.

– பிரதான அணிவகுப்பில் தேசிய கேடட் மூலம் ‘ஷாஹீதோன் கோ ஷத் ஷத் நமன்’ (தியாகிகளுக்கு வீர வணக்கம்)  என்ற நிகழ்ச்சியும் தொடங்கப்படும்.

– ‘கலா கும்ப்’ நிகழ்வின் போது தயாரிக்கப்பட்ட 75 மீட்டர் நீளம் கொண்ட சுருள்களின் காட்சி காண்பிக்கப்படும். பார்வையாளர்களின் சிறந்த காட்சி அனுபவத்திற்காக 10 பெரிய LED திரைகள் நிறுவப்படும்.- அணிவகுப்பில் சிறந்த காட்சி அனுபவத்திற்காக, 10 பெரிய LED திரைகள் இருக்கும்- ராஜ்பத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து திரைகள் நிறுவப்பட்டுள்ளன.

குடியரசு தின அணிவகுப்பு

பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்தை பார்வையிட்டவுடன் குடியரசு தின விழா தொடங்குகிறது. இந்த ஆண்டு, ராஜ்பத்தில் அணிவகுப்பு காலை 10 மணிக்குப் பதிலாக 10:30 மணிக்குத் தொடங்கும். பாரம்பரியத்தின் படி, தேசியக் கொடி ஏற்றப்படும், அதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி வணக்கத்துடன் தேசிய கீதம் இசைக்கப்படும். 

கோவிட்-19-ஐ அடுத்து பார்வையாளர்களுக்கான இருக்கைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் நேரடி கொண்டாட்டங்களைக் காண ஆன்லைனில் பதிவு செய்ய மக்களை ஊக்குவிக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவிர, இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்கள்/ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே அணிவகுப்பில் அனுமதிக்கப்படுவார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Exit mobile version