நடிகர் சூர்யாவை உதைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு… பாமக மாவட்ட செயலாளர் அதிரடி.. . தியேட்டரில் சூர்யாவின் திரைப்படத்தை நிறுத்தி தரமான சம்பவம்!

Jai Bhim vs Vanniyar

ஜெய்பீம் திரைப்படம் தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆரம்பத்தில் எந்த அளவிற்கு தூக்கி கொண்டாடப்பட்டதோ தற்போது அதே அளவிற்கு மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. உண்மையை மறைத்து திருத்தி எடுக்கப்பட்டபட்ட படம் எனவும் வன்னியர் மற்றும் இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

உண்மையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் உண்மை சம்பவத்தில் அந்தோணி சாமி என்ற கேரக்டரை பெயரை ஏன் குரு என சித்தரித்தும் அவர் வீட்டில் வன்னியர்கள் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றது போல் ஒரு காட்சி வைரலாக பரவியது. இது வன்னியர் மக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது

படம் உள்ள கருத்துக்கள் நன்றாக இருந்தாலும் அதை எடுத்த விதம் தவறான நோக்கத்தை கொண்டுள்ளது. பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. வரவேற்புகளுக்கு மத்தியில் திரைப்படத்துக்கு எதிரான கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் வரிசை கட்டி நிற்கின்றது. அண்மையில் அன்புமணி ராமதாஸ் – சூர்யா இடையே பிரச்சனை வெடித்தது.

திரைப்படத்தில் வன்னியர் அடையாளங்கள் மற்றும் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் பெயரை சித்தரித்தது போன்றவை இந்த சர்ச்சையின் மையமாக இருந்தன. அன்புமணியின் நீண்ட அறிக்கைக்கு நடிகர் சூர்யா சுருக்கமான பதிலைத் தந்தார். ஆனபோதும் பாமகவினர் மத்தியில் வன்னியர்களை தவறாக சித்தரித்தது ஆறாத ரணமாக, வன்னியர்கள் சூர்யா எதிர்ப்பில் மேலும் தீவிரமாக தங்களின் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளரான சித்தமல்லி பழனிச்சாமி, நடிகர் சூர்யாவை உதைப்பவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இவர், ”வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வந்தால், அவரை எட்டி உதைப்பவருக்கு மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்” என்றார். மேலும் ”மயிலாடுதுறை மட்டுமல்ல தமிழகத்தில் வேறு எங்கும் இனி சூர்யா நடமாட முடியாது” என எச்சரித்தார்.

முன்னதாக இவரது தலைமையிலான பாமகவினர், உள்ளூரில் சூர்யாவின் ‘வேல்’ திரைப்படம் ஓடும் திரையரங்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

அடுத்த நாள் வேறு படத்தை திரையிடுவதாக திரையரங்கு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, பாமகவினர் கலைந்து சென்றனர். பின்னர் மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங்கை சந்தித்து, ’வன்னியர் சமுதாயத்துக்கும் பிற சமூகங்களுக்கு இடையே இணக்கத்தை கெடுக்கும் வகையில் திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர்கள் சூர்யா,ஜோதிகா மற்றும் இயக்கிய த.செ.ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு’ மனு அளித்தனர்.

Exit mobile version