சேகர்பாபுவால் “அடி மேல் அடி வெளியேறுகிறதா அறநிலைய துறை?” பாண்டே பார்வையில்.

அதில், “பெசண்ட் நகர் வரசித்தி விநாயகர் கோவிலை அக்கோவில் சங்கத்திடம் அறம்கெட்ட துறை எடுத்ததை எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் (சி ராமன்) கொடுத்த தீர்ப்பு சிறப்பானது. ‘உண்டியல் வைத்தாலே கோவிலை அறம்கெட்ட துறை எடுத்துக் கொள்ளலாம்’ என்பது தவறானது என்ற ரீதியில் தீர்ப்பு வந்துள்ளது. இது தவிர, ‘கோவில் நகைகளை உருக்க தடை’ என்ற தீர்ப்பும் அறம்கெட்ட துறையின் கைகளை கட்டிப்போட்டுள்ளது.

” என்பதை குறிப்பிடுகிறார் பாண்டே. இது தவிர, சிதம்பரம் கோவில் வழக்கு (டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி) தீர்ப்பில், “கோவிலில் பிரச்சினையை நீக்கியதோடு அறம்கெட்ட துறை வெளியேற வேண்டும். அங்கேயே உட்கார அறம்கெட்ட துறைக்கு உரிமை இல்லை” போன்றவற்றையும் குறிப்பிடுகிறார் பாண்டே.

“இ.ஓ நியமனம், அர்ச்சகர் நியமனம் எல்லாம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் அது அறநிலைய துறையின் அதிகார விதி மீறல். இது தொடர்பான திரு டி ஆர் ரமேஷ் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது” என்ற தகவலையும் தருகிறார் பாண்டே.

“பிரச்சினையை தீர்த்ததும் வெளியேறாமல் அறம்கெட்ட துறை காலவரையறையின்றி உட்கார முடியாது. அடுத்தவர் உரிமையில் நிரந்தரமாக தலையிட முடியாது” – உ.நீ.ஒரு வீட்டில் தவறு ஏற்பட்டால அதை சரி செய்வதை விட்டு, அந்த வீட்டை ஆக்கிரமிக்க முடியாது என்கிறார் பாண்டே.அன்புமார்க்க அமைதிமார்க்க வழிகாட்டலில் சநாதனத்தை ஒழிக்க இயங்கும் விடியலின் முயற்சி தோல்வியை நோக்கி செல்கிறது!கோவில் விவகாரங்களுக்காக போராடிய அத்தனை பேருக்கும் நன்றி. (

Exit mobile version