போதை பொருள் பயன்படுத்திய ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு காங்கிரசின் சஷி தரூர் ஆதரவு !

பாலிவுட், மற்றும் கேரள திரையுலகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாகி உள்ளது. மேலும் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை வளராமல் தடுப்பதற்காகவே இந்த போதை பழக்கத்தை வளரும் நடிகர்களுக்கு ஏற்படுத்திவிடுவார்களாம்.

இதற்கு காரணம் பாலிவுட் திரையுலகம் எப்போதும் கான்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் . அதே போல் பல மாஃபியா கும்பல்கள்களின் கைகளில் தான் தற்போது வரை பாலிவுட் இருந்து வருகிறது.

பல நடிகர் நடிகை இறப்பில் போதை பொருட்கள் தான் முக்கிய காரணம். இதற்கு உதாரணம் சுஷாந்த்சிங்கின் மரணம். இவரின் இறப்புக்கு பின் போதை பொருட்கள் குறித்த சம்பவங்கள் பெரிய விவகாரமாயிற்று நாடெங்கும் அதிரடி சோதனைகள் தொடங்கின, சினிமா நட்சத்திரங்கள் முதல் பிரபலங்கள் வரை வளைக்கபட்டனர்.

லட்சதீவு முதல் குஜராத் கடற்கரை தமிழகம் என போதைபொருட்கள் அகபட்டு கொண்டே இருந்தன, இப்பொழுதும் அகப்படுகின்றன‌ மோடி அரசு மிகபெரிய அளவில் போதை ஒழிப்பில் இறங்கியிருக்கும் நேரம் இந்த நிலையில் பிரபல நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யாகான் போதைபொருள் விசாரணையில் சிக்கியிருக்கின்றான்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 7ஆம் தேதிவரை அவர் போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்யன் கான் தனது வழக்கறிஞர் மூலமாக ஜாமினில் வெளிவர தீவிர முயற்சி மேற்கொண்டும் பலன் இல்லாமல் போனது. இன்று சமூக வலைதளங்களில் இதுவே பேசு பொருளாகி உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதை பொருள் பயன்படுத்தியதற்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் நிற்பது அரசியலில் பெரும் விவாத பொருளாகி உள்ளது.

இதுகுறித்து சசி தரூர் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து –
‘போதைப்பொருல் பயன்பாட்டுக்கு நான் ஆதரவளிக்கவில்லை. என் வாழ்நாளில் நான் போதை மருந்தை பயன்படுத்தில்லை. ஆனால் ஆர்யன் செய்த தவறுக்கு ஷாருக்கானை தற்போது சிலர் விமர்சித்து அதன்மூலமாக மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். பிறரது துரதிஷ்டத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளாதீர்..! பாதிக்கப்பட்ட தந்தையின் மனநிலையிலிருந்து இவர்கள் பிரச்னையை உணரவேண்டும்.
இருபத்தி மூன்று வயது ஆகிய ஆர்யனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் காயப்படுத்துவதை நிறுத்தவேண்டும்.’ இவ்வாறு சசி தரூர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Exit mobile version