சிவசேனாவின் காலம் முடிவடையும் நேரம் வந்துவிட்டது .

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்றுஒரு பழமொழி உண்டு.

அப்படித்தான் அற்பன் உத்தவ் தாக்கரே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.ஐயோ பாவம் அர்னாப் இப்படி கைதுசெய்யப் படுவோம் என்று நினைத்து இருக்கமாட்டார்.உத்தவ் தாக்கரே ஒருகிறுக்கன்.அவனிடம் மகாராஷ்டிரா அரசு குரங்கு கையில் கொடுத்த பூமாலை மாதிரி சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது.மகாராஷ்டிரா மக்கள் என்றுமே சிவசேனாவின் ஆட்சியை விரும்பியது இல்லை ஏதோ குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தகதையாக பிஜேபியின் தயவினால் ஜெயித்து வந்து அதன் எதிரிகளோடு இணைந்து ஆட்சிக்கு வந்து விட்டது.

பிஜேபி சிவசேனாவுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு பிஜேபி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநிலமே தண்டனை அனுபவித்து வருகிறார்கள்ஆனால் இந்த பாவத்திற்கு மக்களும் தண்டனை அளிப்பார்கள..அப்பொழுது சிவசேனா என்கிற கட்சியே காணாமல்போய்விடும்.

சிவசேனா தலைமையில 1995 -1999 வரை ஒரே ஒரு முறை தான் பிஜேபி கூட்டணி ஆட்சியில் இருந்தது. அதற்கு பிறகு 15 வருசத்திற்கு பிஜேபி சிவசேனா கூட்டணி வெற்றி பெறவே முடியவில்லை.

பிஜேபி 2014 ல் சிவசேனா வை கழற்றி விட்டு தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு மெஜாரிட்டிக்கு சில சீட்கள் குறைவாக இருந்ததால் சிவசேனா உதவியுடன் ஆட்சி அமைத்தது.காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வந்த மஹாரஸ் டிராவில் ஜனசங்கமாக பிஜேபி இருந்த காலத்தில் இருந்தே பிஜேபி தனியாக பெயர் சொல்ல தக்க அளவில் வெற்றிபெற்று வந்துள்ளது ஆனால் சிவசேனாவால் அரசியல் ரீதியாக நாடாளுமன்ற தேர்தலிலோ சட்டமன்ற தேர்தலிலோ வெற்றிபெற முடியவில்லை..

பிஜேபி சிவசேனா இல்லாமல் 1980 சட்டமன்ற தேர்தலில் 14 சட்டமன்ற தொகுதிகளை யும் 1985 சட்டமன்ற தேர்தலில் 16 சட்டமன்றதொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது ஆனால் அப்பொழுது சிவசேனாவால் ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

1966ல் ஆரம்பமாகி கோமாநிலையில் இருந்த சிவசேனாவிற்கு கூட்டணி ஆக்சிசன் கொடுத்து 1989ல் நாடாளுமன்ற தேர்தலிலும் 1990ல் நடந்த சட்டமன்ற தேர்ததிலும் சிவசேனாவுக்கு முதன்முதலாக எம்பி எம்எல்ஏக்களை அளித்தது பிஜேபி தான் 1995ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து சிவசேனாவின் மனோகர் ஜோஷியை முதல்வராக்கியதும் பிஜேபி தான்.

ஆனால்ஆட்சிக்கு வந்த சிவசேனாவின் செயல்பாடுகளால் வெறுப்படைந்த மகாராஸ்டிரா மக்கள் அதற்கு பின் நடந்த 1999, 2004,2009ம் ஆண்டுகளில் சட்டம ன்ற தேர்தலில் பிஜேபி சிவசேனா கூட்டணியை தொடர்ந்து நிராகரித்தே வந்தனர்.தோல்வியடைந்த இந்த தேர்தல்களில் சிவசேனாவை விட பிஜேபிக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருந்துள்ளதை தேர்தல் முடிவுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பிஜேபி துணை இல்லாமல் சிவசேனாவினால் அரசியலில் வெற்றி பெறமுடியாது.இப்பொழுதே சிவசேனா வாக்காளர்கள் பிஜேபி பக்கமாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.அதே மாதிரி காங்கிரஸ் கதையும் மகாராஷ்டிராவில் அவ்வளவு தான் பிஜேபி தேசியவாத காங்கிரஸ் என்கிறஅளவிலே தான் அரசியல் போட்டி இருக்கும்.

சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்று ம் காங்கிரஸ் கூட்டணியை இன்னும் சிலவருடங்களுக்கு ஆள விட்டாலே போதும்அடுத்து 15 வருசத்திற்கு தேசியவாத காங்கிரஸ்,சிவசேனா,காங்கிரஸ் யாருமே ஆட்சிக்கு வர முடியாது.அந்த அளவிற்கு அராஜகமாக சிவசேனாஆட்சி இருக்கும்.அதற்காக ஆட்சியை அப்படியே விட்டு விடுவார்களா என்று பயந்து விட வேண்டாம். 2021ம் ஆண்டு பிற ந்த உடனே மகாராஷ்டிரா மக்களுக்கு புத்தாண்டு பரிசாக உத்தவ் தாக்கரே ஆட்சிகவிழ்ப்பு தான் இருக்கும்.

கட்டுரை:- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version