பா.ஜ.க இளைஞரணியின் வாகனங்களை மறித்த எஸ்பி.வருண் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் !

உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு மற்றும் வீட்டின் பக்கத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தியானது கொண்டப்பட்டது. சிறிய கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. குறைந்த இடைவெளியுடன் சிலைகள் கரைக்கப்பட்டது.

இந்த நிலையில் ராமநாதப்புரத்தில் இளைஞர்கள் இருவரை மர்ம நபர்கள் கொடூரமாக முறையில் தாக்கியுள்ளார்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் கள்ளர் தெரு வசந்த நகரை சேர்ந்த அருண் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வயது 21 .மேலும் யோகேஷ் வயது (22) என்ற இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தின் மீது கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், இரு கும்பலுக்குள் நடந்த சண்டை என தெரிவித்தார்கள் அதில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கில் ‘லெப்ட்’ ஷேக் என்பவன் தலைமையில் 9 பேர் கொண்ட ரவுடி கும்பல் தான் அருண் குமாரை வெட்டியதாக கூறப்படுகிறது. முக்கிய குற்றவாளியாக SDPI கட்சியின் மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஜவாஹிருல்லா இதை மத பிரச்சனையாக உருவாக்க பார்க்கிறார்கள் என அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காமல் இஸலாமியர்களுக்கு ஆதரவு நிலையை கடைபிடித்து அறிக்கையை வெளியிட்டார்.

இதற்கிடையில் பாஜகவின் இளைஞரணித் தலைவர் வினோஜ் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் செப்டம்பர் 3 ஆம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மதுரையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வினோஜ் தலைமையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கார்களில் பாஜகவினர் ராமநாதபுரம் நோக்கி விரைந்தனர்.அவர் கொலைசெய்யப்பட்ட அருண் பிரகாஷ் வீட்டிற்கு செல்வதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் வரும்போது கரிசல் குளம் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் மறித்தனர். எல்லைக்குள் இத்தனை வாகனங்களையும் அனுமதிக்க முடியாது என்று காவல்துறை கூற ,சுமார் அரைமணிநேரம் காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் பின்னர் சில கார்களுடன் வினோஜ் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அருண் கொலையில் பா.ஜ.கவினர் எஸ்.பி. மீது கோபத்திலிருக்க, நேற்று மாவட்ட எல்லையில் பாஜகவினரை வழிமறித்த சம்பவமும் நடந்த நிலையில் தான் எஸ்பி. வருண் நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

ஆனால் ராமநாதபுரம் எஸ்பி வருண் மீது மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் காவல்துறை மேலிடத்துக்கு ஏற்கனவே சென்றிருக்கின்றன. கடந்த வாரம் கமுதி அருகே அபிராமம் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு ஜேசிபி, டாரஸ், ஏழு டிராக்டர்கள் உள்ளிட்ட 14 வாகனங்கள் பிடிக்கப்பட்டன. இதில் மாலைக்குள் 8 வாகனங்கள் விடுவிக்கப்பட்டது. அதிமுக முக்கியப் புள்ளிகள் தலையீட்டில் எஸ்பி மூலமாக இந்த விவகாரத்தில் சிலர் காப்பாற்றப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஏற்கனவே வருண் சமுதாய ரீதியாக செயல்படுவதாக கருணாஸ் எம்.எல்.ஏ. வும் புகார் கூறியிருந்தார். இத்தனை புகார்களோடு பாஜகவினரின் அழுத்தமும் சேர்ந்து வருண் குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கின்றன”

Exit mobile version