ஸ்டெர்லைட் போராளி .. ஒரு திருடன் ! ரஜினியை யார் என்று கேட்ட ஸ்டெர்லைட் போராளி திருட்டு சம்பவத்தில் கைது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது அப்போது காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்தை அவமதிப்பதற்காக, நீங்கள் யார்? சந்தோஷ் என்ற நபர் கேட்டார்.

உடனே நம் தமிழக ஊடகங்கள் ரஜினியையார் என்று கேட்ட தமிழன் போராளி பச்சை தமிழன் என விளம்பரபடுத்தியது அந்த போராளியை. அந்த போராள தன்னை மாணவர் அமைப்பின் நிர்வாகி என வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளார்.

ரஜினியை அசிங்கப்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்டதால் இந்திய அளவில் டிவிட்டரிலும், ஆங்கில ஊடகங்களிலும் பிரபலமான போராளி
சந்தோஷ் தனது அறிவாற்றலால் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

அந்த அமைப்பிற்கு சீமான் ஆதரவு தருவார் என நினைத்த. ஆனால் சீமான் நம்மளை விட பெரிய ஆளாக வந்துவிடுவார் என நினைத்து அமைப்புக்கு தலைவர் , செயலாளர், பொருளாளர் என அனைத்துப் பதவிகளை அவரேஒருத்தரே கவனித்து ஒன்மேன் ஆர்மியாக செயல்பட்டுள்ளார்,

இந்த நிலையில் எந்த போராட்டத்திற்கும் போராளி சந்தோஸை அழைக்காததால் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனை பூர்த்தி செய்ய மணிகண்டன், சரவணன் ஆகியோருடன் இணைந்து இரு சக்கர வாகனங்களைத் திருடி போலி ஆவணங்களை தயார் செய்து ஓ.எல்.எக்ஸ் மூலம் விற்று வந்துள்ளார் போராளி சந்தோஷ்..!

இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷியாம் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை எட்டையபுரம் சாலையில் நிறுத்தி இருந்தார். அதனை திருடிச்சென்ற கொள்ளையர்கள், அந்த வாகனம் விற்பனைக்கு இருப்பதாக ஓ.எல்.எக்சில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர்.

இதனை பார்த்த ஷியாம், ஓ.எல்.எக்சில் தனது வாகனத்தை விற்பனை செய்ய தயாராக இருந்த நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். கால்டுவெல் காலனிக்கு வரச்சொன்ன அந்த திருட்டு பாய்ஸ், ஷியாமிடம் திருடிச் சென்ற வண்டிக்கு, அவரிடமே கறாராக பேரம் பேசியுள்ளனர்.

பணம் எடுத்து வந்து வாங்கிக் கொள்வதாக கூறிச்சென்ற ஷியாம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். பணத்துடன், வாகனக் கொள்ளையர்களை பிடிக்க சாதாரண உடையில் போலீசாரையும் ஷியாம் அழைத்துச்சென்றார்.

அப்போது ஷியாமிடம் திருடிய வாகனத்தைப் போன்ற மற்றொரு பழைய வாகனத்தை இருட்டில் வைத்து மோசடியாக கைமாற்றிவிட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.

அவனைப் பிடித்து விசாரித்தபோது, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்ட போராளி பச்சை தமிழன் வீரத்தமிழன் சந்தோஷ் என்பது தெரியவந்தது

இந்த நிலையில் தான் வாகனத்தை பறிகொடுத்தவரிடமே, திருடிய வாகனத்தை மோசடியாக விற்க முயன்றதால் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளார் போராளி சந்தோஷ் என்கின்றனர் காவல்துறையினர்.

இதையடுத்து போராளித் திருடர் சந்தோஷையும், அவர் அளித்த தகவலின் பேரில் கூட்டாளிகளான மணிகண்டன் மற்றும் சரவணன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் சந்தோஷ் ..!

Exit mobile version