மாணவிகளின் உயிரைகாவு வாங்கும் Stஜோசப் பள்ளி

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, வடுகர்பேட்டையில் இருக்கிறது St.ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

இந்தப் பள்ளியின் மீது பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் முக்கியமானக் குற்றச்சாட்டு, அந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளின் தொடர் தற்கொலைகள்!

2019-20 கல்வியாண்டில் மட்டும் ஆறு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குகின்றன.

ஆனால், அவற்றைக் களையும் முயற்சிகள் எதிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபடவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது!

மேலும், நடந்துவிட்ட தற்கொலைகளுக்கு எந்தவிதத் தார்மீகப் பொறுப்பும் ஏற்காமல், தங்களது பணபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவிகளின் தற்கொலைகளை மூடி மறைத்து வருகிறது பள்ளி நிர்வாகம்…! இது வன்மையானக் கண்டனத்திற்குரியது!

கடைசியாக நடந்த மாணவியின் தற்கொலை என்பது என்னையும், எனது சொந்தங்களையும் மிகவும் பாதித்த தற்கொலை!

அரியலூர் மாவட்டத்தின் அயன்சுத்தல்லியைச் சேர்ந்த ரேகா எனும் மாணவி வடுகர்பேட்டை St.ஜோசப் பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்து வந்தார். பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் தங்கிப் பயின்று வந்தார்.

பள்ளியிலோ, விடுதியிலோ ஏதோ பிரச்சினை. அதன் காரணமாக, அந்த மாணவி மிகுந்த மனவுளைச்சலில் இருந்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி காலை 7.30 மணியளவில் விடுதி நிர்வாகத்திடமிருந்து மாணவியின் குடும்பத்தாருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. மாணவியைக் காணவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்!

பதறிப்போன மாணவியின் குடும்பத்தார், அடித்துப்பிடித்துக்கொண்டு பள்ளிக்குப் போயிருக்கிறார்கள். சரியானப் பதில்கள் எதுவும் சொல்லப்படவில்லை. அந்த ஊரின் பல பகுதிகளிலும் தேடியலைந்து சோர்ந்துபோன குடும்பத்தினர், அருகிலிருந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இரவு 7 மணியளவில் காவல் நிலையத்திலிருந்து போன் வருகிறது. ரயிலில் விழுந்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடல் பல சிறு துண்டுகளாகக் கிடப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது!

அந்த சொல்லொணாத் துயரத்தைத் தாங்க முடியாத உறவினர், இறுதி சடங்கு செய்வதற்காக உடலின் பாகங்களை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

பேரதிர்ச்சியாக, மாணவியின் தொடை பகுதியில் அடித்துத் துன்புறுத்தியிருப்பதற்கானத் தடயங்கள் தென்பட்டிருக்கின்றன! OMG!

மாணவியின் தற்கொலை சம்பந்தமாகப் பல கேள்விகள் எழுகின்றன…

*விடுதி காப்பாளரின் அனுமதியின்றி மாணவி எப்படி வெளியே சென்றிருக்க முடியும்?

*வெளியேறும் வழியைத் தவிர்த்து வேறு வழியாக மாணவி சென்றிருக்கலாம் என்றால், அவ்வளவு பாதுகாப்பற்ற சூழலிலா மாணவிகள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்? அதுபோன்ற வழிகளில் சமூக விரோதிகள் உள்ளே வந்தால்
வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்னவாகும்?

*காணாமல் போன மாணவியைக் கண்டுபிடிக்கப் பள்ளி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? மாணவியைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தாரிடம் தெரிவிப்பதோடு முடிந்துவிட்டதா பள்ளியின் கடமை?

*மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி தெரிந்தவுடன், அவரின் இறுதி சடங்கில் பள்ளியின் நிர்வாகத்தினர் கலந்துகொண்டிருக்க வேண்டாமா? அந்தத் தார்மீகம் கூட தெரியாத மிருகங்களா பள்ளி நிர்வாகத்தினர்? அவர்களுக்கெல்லாம் மனசாட்சி என்பது மருந்துக்குக் கூட இல்லையா?

*சரி, இறுதி சடங்கில் தான் கலந்துகொள்ளவில்லை; அதற்குப் பின்னராவது ஏதாவது ஒருநாள் மாணவியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா?

*மாணவி இறந்து 20 நாட்கள் ஆகியும்
பள்ளி நிர்வாகத்திடமிருந்து இன்னும் ஒரு ஆறுதல் செய்தியோ,
பள்ளியில்/விடுதியில் நடந்தவைப் பற்றியோ மாணவியின் குடும்பத்திற்குத் தெரிவிக்கப்படாதது ஏன்?

*பள்ளி நிர்வாகம் தான் இப்படி இருக்கிறது என்றால், புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையும்
இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பள்ளி நிர்வாகத்தால் கவனிக்கப்பட்டுவிட்டார்களா?

*மாணவியின் குடும்பத்தார், உறவினர்கள், ஊர்க்காரர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் இன்று (09-03-2020) காலை, விளக்கம் கேட்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியக் காவல்துறை அவர்களைத் தடுத்துக் கைது செய்திருக்கிறது! இது எந்த வகையில் நியாயம்?

இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, “கிறிஸ்தவக் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை” என்று கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது தான் ஞாபகம் வருகிறது. இருந்தும் என்ன செய்ய? இழந்த எங்கள் பிள்ளையை இனி எந்த தேவ குமாரனும் தரப் போவதில்லை!

பொதுவாகவே, கிறிஸ்த நிறுவனங்களில் நடக்கும் அட்டூழியங்கள் பெரும்பாலும் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. இந்தத் தற்கொலைக்கானக் காரணத்தையாவது முறையாக விசாரணை செய்து, குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்! மேலும், இதுபோன்ற துன்பியல் நிகழ்வுகள் இனி ஒருபோதும் நிகழாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சாத்தான்கள் காவு வாங்கிய
கடைசி உயிராக
எங்கள் தேவதை இருந்துவிட்டுப் போகட்டும்!

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் வீர திருநாவுக்கரசு.

Exit mobile version