உ.பி முதல்வர் யோகியை சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி! ரஜினியும் இல்ல.. விஜயும் இல்ல..புலம்பும் தி.மு.க

Rajinikanth Met Yogi

Rajinikanth Met Yogi

வரும் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா ரஜினிகாந்த்.. தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்த அடி கொடுக்க தயாராகிறதாபா.ஜ.க தேசிய தலைமை… அரசியலான ரஜினியின் சுற்றலா.. முதலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது உ.பி முதல்வர் யோகி ரஜினியின்அடுத்தடுத்த சந்திப்புகள்…விழிபிதுங்கும் சன் பிக்ச்சர்.. தேவை இல்லாம விஜயை பகைத்து கொண்டோமே…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது. இதனிடையே படம் வருவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார்.அதோடு தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்ததோடு, பத்ரிநாத் கோவிலிலும் வழிபாடு செய்தார். அதன்பிறகு அவர் இமயமலை பயணத்தை முடித்து திரும்பினார்.

இந்த நிலையில் ரஜினி திடீரென்று முன்னாள் பாஜக தலைவரும் ஜார்கண்ட் ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். இது அரசியலில் சிறு குலுக்கத்தை ஏற்படுத்தியது அதன் பின் ரஜினி மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறினார்.

ஆனால் அதன் தாக்கம் குறையவில்லை.அரசியல் விமர்சர்கள் மட்டும் அனைத்து கட்சியினரின் கண்கள் ரஜினி பக்கம் பாய்ந்துள்ளது. மேலும் ரஜினி காந்த் தொடர்ச்சியாக சுற்றுப்பயணத்தில் உள்ளார். இது ஆன்மீக சுற்றுலாவா இல்லை அரசியல் சுற்றுலாவா என்பதை கண்டறியும் முன் இன்று அவர் உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவுக்கு சென்றார்.அங்கு ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது அரசியல் சுற்றுலா தான் என முடிவுக்கு வந்துள்ளார்கள். இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்திடம் லக்னோ வருகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், முதல்வருடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்துவிட்டு சிரித்தபடி காரில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பத்திரிகையாளரிடம் நடிகர் ரஜினி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் நடிகர் ரஜினிகாந்த் எதற்காக யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்கிறார்?

இந்த சந்திப்பு என்பது திரைப்படத்துக்கானதா? இல்லாவிட்டால் பின்னணியில் அரசியல் சார்ந்த விஷயங்கள் உள்ளதா? நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளாரா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றது

இது ஒருபுறமிக்க ரஜினிகாந்த் ஆளுநராக வாய்ப்புகள் உள்ளதாகவும் புரளிகள் கிளம்பி வருகின்றது. உத்திர பிரதேச முதல்வர் யோகி யோகியாக ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ளவர். அதேபோல் ரஜினியும் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர் என்பதால் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. நாடளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினியின் இந்த சந்திப்புகள் அரசியலாகவே பார்க்கப்படுகிறது

மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை விரும்பாத திமுக ஜெயிலர் படம் ஆடியோ லஞ்சில் கலாநிதிமாறன் நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கி பேசினார். இதேபோல அங்கு வந்தவர்களும் நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கி பேச ஆரம்பித்தார்கள்

இதனால் திமுகவினர் சமூக வலைத்தளங்களின் ரஜினி ரசிகர்ளுடன் இணைந்து ஜெயிலர் படம் ப்ரோமோஷன் மற்றும் விஜயை தரம் தாழ்த்தி பேச ஆரம்பித்தார்கள். இது விஜயை மிகவும் கோபம் ஆடிய செய்தது. ரஜினி திமுக ஆதரவாளர் தான் எப்போதும் என கட்டமைக்க ஆரம்பித்தார்கள் இந்த நிலையில் தான் ரஜினி தொடர்ந்து ஆன்மிகம் பாஜக தலைவர்கள் சந்திப்பு என திமுகவுக்கு அடுத்தடுத்த இடியை இறங்கியுள்ளார்.

இதுஒருபுறமிக்க அஜித்தை யாருனு கேட்ட திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனுக்கு அஜித் ரசிகர்கள் தங்கள் பாணியில் பதில் சொன்னாங்க.. தற்போதைய சூழ்நிலையில் விஜயும் இல்ல ..ரஜினியும் இல்ல ..அஜித்தும் இல்ல என புலம்புகிறார்கள் திமுகவினர்.

Exit mobile version