தப்லிக்ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட மேலும் 70 வெளிநாட்டினர் பீகாரில் கண்டுபிடிப்பு !

இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

இந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது டில்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிக் ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் வெளிநாட்டு இசுலாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 இஸ்லாமியர்கள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு பலியானார்கள். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனால், நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அங்கு தங்கியிருந்தவர்களை தனிமைபடுத்தினர். அதில் 70% பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் அங்கிருந்து வெளியேறி பதுங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பலர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், அதில் சிலர் மட்டுமே அடையாளம் காண முடிந்தது எனவும், பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இதுவரை அந்த மாநாட்டுடன் தொடர்பில் இருந்த 9 ஆயிரம் பேர் மற்றும் 1300 வெளிநாட்டவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை பீகாரை சேர்ந்த 86 பேர் டில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பீகாரிலும் வெளிநாட்டவர்களை தேடும் பணி மிக தீவிரமாக்கப்பட்டது.

இதனையடுத்து தில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 70 வெளிநாட்டு மதகுருக்களை பீகாரில் கண்டுபிடித்துள்ளனர். பின் அவர்களை அங்கு தனிமைப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 3 மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் எங்கெங்கு பயணம் செய்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனால், அவர்கள் பயணித்த பகுதிகளில் எல்லாம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

Exit mobile version