Tag: MODI

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்… 20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க ...

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, அடுத்த ஆண்டு நடக்க உள்ள, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., தன் ...

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

சென்னையில் உள்ள நான்காவது காலாட்படை மையத்தில் 10 படுக்கை வசதிகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையும் தனிமைப்படுத்துதல் மையமும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று இவற்றைத் தொடங்கி வைத்தார். அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் இந்த தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது.           நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "கொவிட்- 19 போன்ற சவாலான சூழ்நிலைகளிலும் புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்- கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி) ஆகியவற்றின் விஞ்ஞானிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். "சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்காவது காலாட்படை மையத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை பாதுகாப்பான மற்றும் சௌகரியமான சூழலில் மக்களுக்கு ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குவதுடன் 20 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் திறன் கொண்டது," என்று அவர் கூறினார். நவீன, விரைவாக நிறுவக் கூடிய வகையில், பாதுகாப்பான, அனைத்து வானிலை மாற்றங்களுக்கும் ஏற்றவாறு, அவசரகால சூழ்நிலைகளிலும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று விரைவில் அமைக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய அம்சங்களை இந்த மையங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எளிதில் மடக்கக் கூடியதும், ஒருவர் தமது தோளில் சுலபமாக சுமந்து சென்று மற்றொரு இடத்தில் எளிதில் நிறுவக்கூடிய வகையிலுமாக சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி ஆராய்ச்சிக் கூடங்கள் இதனை வடிவமைத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைகள், சத்தான நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய துரித உணவுகள், எளிதில் வடிவமைக்கக்கூடிய கூரைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு புதுமையான தீர்வுகளை சிஎஸ்ஐஆர் கண்டறிந்து வருவதை அவர் பாராட்டினார். "விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படைவீரர்கள் போன்றோரது அயராத உழைப்பினால் இந்தியாவில் இன்று கொரோனா நோயிலிருந்து 92 சதவீதம் பேர் குணமடைந்து இருக்கிறார்கள்", என்று அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-இன் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநர் திரு எஸ் என் பிரதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி, சென்னை, தலைமை விஞ்ஞானி டாக்டர் பழனி,  எஸ்ஈஆர்சி, சென்னை, இயக்குநர் பேராசிரியர் கபூரியா  மற்றும்  சிஎஸ்ஐஆர், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை, சிஎஸ்ஐஆர்- எஸ்ஈஆர்சி-யின் ஒருங்கிணைப் போடு ரூபாய் 37.67 லட்சம் மதிப்பில் சென்னையில் இந்த தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது. இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவிகள், பிராணவாயு வழங்கும் சிலிண்டர்கள், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அளவை கணக்கிடும் கருவிகள் போன்றவை அரக்கோணத்தில் உள்ள மையத்தில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கொவிட்-19 நோயால் பாதிக்கப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இந்த மையங்கள் அமையும்.

சீனாவின் எல்லைகுள்ளே  சென்று மிரட்டிய இந்திய ராணுவம் !கதறும் சீனா!

சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு.

சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த அப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு. மோடியரசு தொடந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்திவருக்கென்றது. இதன் தொடர்ச்சியாக ...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

மோடியரசின் அடுத்த வெற்றி சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைவராக இந்தியா தேர்வு.

சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின்(ISA) 3வது கூட்டத்தில், 34 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 53 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 5 வருங்கால உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து ...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

பட்டா வழங்கும் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்து, இந்தத் திட்டம் குறித்து  பயனாளிகளுடன் உரையாடினார். சொத்து விவர அட்டைகள் கிடைக்கப்பெற்ற பயனாளிகளுக்குப் பிரதமர்  வாழ்த்து தெரிவித்தார். அவர்களது வீடு அவர்களுக்கு சொந்தமானது என்பதை சட்டபூர்வமான ஆவணத்துடன் நிரூபிக்கும் உரிமையை, பயனாளிகள் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் நமது கிராமங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில், கிராமங்களைத் தன்னிறைவு அடையச் செய்யும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக  அவர் கூறினார். ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு அவர்களது வீடுகளுக்கான சொத்து விவர அட்டை இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த  மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இந்த அட்டை வழங்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். திரு ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் திரு நானா ஜி தேஷ்முக் ஆகிய இருபெரும் தலைவர்களின் பிறந்த நாளான இன்று இந்த திட்டம் தொடங்கப்படுவது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்த இரு தலைவர்களின் பிறந்த நாட்கள் மட்டும் ஒன்றாகக்  கொண்டாடப்படவில்லை என்று தெரிவித்த பிரதமர், அவர்களது போராட்டங்களும் கொள்கைகளும் கூட ஒத்து இருந்தது என்று கூறினார். திரு ஜெயப்பிரகாஷ் நாராயணும்,  திரு நானா ஜி தேஷ்முக்கும்,  ஏழை மற்றும் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடியதைப் பிரதமர் எடுத்துக் கூறினார். கிராமங்களில் வாழும் மக்களுக்குள் பூசல்கள் ஏற்படும் போது அவர்களால் தங்களையும் தங்களது சமூகத்தையும் வளர்த்துக் கொள்ள இயலாது என்ற திரு நானா ஜியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இது போன்ற வேறுபாடுகளைக் களைய உடைமைத் திட்டம் உதவியாக இருக்கும்  என்று தாம் பெரிதும் நம்புவதாகக் குறிப்பிட்டார். நிலம் மற்றும் வீடுகளின் உரிமை, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார். தங்களது சொத்திற்கு அடையாளம் கிடைக்கும் போது, குடிமக்களின் தன்னம்பிக்கை உயர்வதுடன், முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். சொத்தின் ஆவணங்களின் பேரில் வங்கியிலிருந்து கடன் எளிதாகக் கிடைக்கும் என்றும், வேலைவாய்ப்புக்கான வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். இன்றைய காலகட்டத்தில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்களது சொத்துக்களை முறையாக ஆவணப்படுத்தி  உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கிராம மக்கள் தங்கள் சொத்துக்களை எளிதில் வாங்கவோ விற்கவோ இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும்தெரிவித்தார்.  இன்று நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தாங்களே சொந்தமாக பணம் ஈட்ட விரும்புவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இது போன்ற இளைஞர்களுக்கு சொத்து அட்டை வழங்கப்பட்டவுடன் அதனைப் பயன்படுத்தி, அவர்கள் வங்கிகளில் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் உறுதி அளித்தார். ட்ரோன் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிலங்கள் குறித்து துல்லியமான விவரங்களைப் பெற முடியும் என்று அவர்  நம்பிக்கை தெரிவித்தார். துல்லியமான ஆதாரங்களின் உதவியுடன் கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த முடியும் என்றும், இது இந்தத் திட்டத்தின் மற்றொரு பயன் என்றும் அவர் கூறினார். கடந்த ஆறு வருடங்களாக பஞ்சாயத்து முறையை மேம்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை இந்த ஸ்வாமித்வா திட்டம் மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். கிராமப் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், நகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு இணையாக கிராமங்களையும் மேம்படுத்த இந்த ஸ்வாமித்வா  திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில், கிராமங்களில் நீண்ட நாட்களாக நிலவிவந்த  தட்டுப்பாடுகளைக் களையவும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர். சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆறு வருடங்களில் கிராமங்களின் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். வங்கி சேமிப்புக் கணக்கு, மின் இணைப்பு, கழிவறை வசதி, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்புடன் வீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கடந்த 6  வருடங்களில் கிராம மக்களுக்கு செய்து தரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் கண்ணாடி ஒளியிழை என்று அழைக்கப்படும் ஆப்டிகல் பைபர் இணைப்பின் மூலம் இணைக்கும் முயற்சி துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வேளாண் சீர்திருத்தங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் வாதத்தை மறுத்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நம் விவசாயிகள் தன்னிறைவு அடைவதில் விருப்பம் இல்லாதவர்கள்தான் இந்தச் சீர்திருத்தங்களை எதிர்க்கின்றனர் என்றார். சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இடையர்களுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டையின் மூலம் இடைத்தரகர்களின் சட்டவிரோதமான வருமானம் தடைப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். உரத்திற்கு வேம்பு பூச்சு, விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு உரித்தான பணத்தை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துதல் போன்ற முடிவுகளை, விரயமாவதை  பெருமளவில் தடுக்கும் முயற்சிகளாக பட்டியலிட்ட பிரதமர்,  இவ்வாறு குறைபாடுகளை நீக்குவதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தான் வேளாண் சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர் என்று கூறினார். நாட்டின் முன்னேற்றம் இத்தகைய நபர்களால் தடைபடாது.  கிராமங்களையும் ஏழை மக்களையும் தன்னிறைவு அடைய செய்யும் அரசின் முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  இந்த இலக்கை அடைய ஸ்வாமித்வா திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.

10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் நீளமான சுரங்கம் அமைத்து இந்தியா சாதனை! அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !

10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் நீளமான சுரங்கம் அமைத்து இந்தியா சாதனை! அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !

உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ...

எடப்பாடி அரசின் மன மாற்றத்துக்கு காரணமென்னவோ…?

"ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்" இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க மத்திய அரசு ஒரே நாடு, ...

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு  மோடியரசு ஆப்பு

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு

தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நீண்ட காலமாக ...

Page 27 of 39 1 26 27 28 39

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x