முதன் முதலில், ஸ்ரீநகரின் கடிகார கோபுரம் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.
ஒளிரும் கடிகார கோபுரத்தின் படங்களை ட்வீட் செய்த ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் மட்டு புதிய கடிகாரங்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தார். "சுதந்திர தினத்தை முன்னிட்டு லால் சவுக்கில் உள்ள ...
ஒளிரும் கடிகார கோபுரத்தின் படங்களை ட்வீட் செய்த ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் மட்டு புதிய கடிகாரங்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தார். "சுதந்திர தினத்தை முன்னிட்டு லால் சவுக்கில் உள்ள ...
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். வியாழக்கிழமை ஷியாமபிரசாத் முகர்ஜி லேனில் ...
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் ...
நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: ...
விருதுநகர், கிருஷ்னாபுரத்தில் மதிமுக சார்பில் நடைபெற்ற திராவிட இயக்க பயற்சிப்பாசறை கூட்டத்தில் பேசிய மதிமுக தலைவர் வைகோவின் மகன் துறை வையாபுரி, தனது 35 வயதில் தமிழகமெங்கும் லஞ்சம் தலைவிரித்து ஆடியதாகவும் எனவே தனது மனைவி, ...
தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னேற்றமான திரிக்கா-வின் (திருச்சி கார்பைன்) தொடர்ச்சியாக, 40 X 46 எம்எம் அன்டர் பேரல் கிரானைட் லான்ச்சர் (கையெறி குண்டு ஏவும் கருவி) மற்றும் ஏகே-47 துப்பாக்கி ...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன. ...
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கோயம்பத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த பூக்களைப் பெற்றது. மலர்கள், நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதற்காகத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் முறையை வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் வளர்ப்புத் துறை ஆதரவளித்தது. தரமான மலர்களைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தினர். இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இந்த ஏற்றுமதி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, துபாய் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர், நறுமணம் கமழும் மலர்களை பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின் போது தங்களது இல்லங்களில் உள்ள இறைவனுக்கும் ஆலயங்களிலும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கும். 2020-21-ஆம் ஆண்டில் ரூ. 66.28 கோடி மதிப்பிலான மல்லிகை பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் (மல்லிகை மற்றும் இதர பாரம்பரிய மலர்களை உள்ளடக்கியது) அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ரூ. 11.24 கோடி மதிப்பிலான மலர்கள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை விமான நிலையங்கள் வாயிலாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மலர்களுள் மதுரை மல்லிகையும் ஒன்று. அதன் நறுமணம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பேரழகுக்கு இணையான புகழைப் பெற்றது. மல்லிகையின் முக்கிய சந்தையாக உருவாகியுள்ள மதுரை, இந்தியாவின் ‘மல்லிகை தலைநகரமாகவும்' வளர்ந்துள்ளது.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.
