Tag: rain

மழைக்காலத்துக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைகளை நல்ல நிலையில் வைத்திருக்கத் தயாராகும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

மழைக்காலத்துக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைகளை நல்ல நிலையில் வைத்திருக்கத் தயாராகும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

வரவிருக்கும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளைப் பழுதில்லாமலும், போக்குவரத்துக்கு உகந்த வகையிலும் வைத்திருக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை செய்யுமாறு அதன் மண்டல அதிகாரிகளையும், திட்ட இயக்குநர்களையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மழைக்காலத்துக்கு முன்னதாக, அதாவது 30 ஜூன், 2020க்குள், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலைகளை  போக்குவரத்துக்கு உகந்த வகையில் வைப்பதே இதன் நோக்கமாகும். தனது மண்டல அதிகாரிகளுக்கும், திட்ட இயக்குநர்களுக்கும் திட்டமிடுதலிலும், செயல்களை முன்னுரிமைப் படுத்துவதிலும் உதவி, எதிர்ப்பார்த்த வகையில் நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியைத் துரிதப்படுத்த ஏதுவாக புதிய கொள்கை வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது.  தேவைப்படும் நடவடிக்கைகளின் சிறப்பான திட்டமிடல் மற்றும் குறித்த நேரத்தில் அவற்றின் செயலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதே இலக்காகும். பராமரிப்புப் பணிகள் தொடர்பாக துரிதமாக முடிவுகளை எடுக்க ஏதுவாக, போதுமான நிதி அதிகாரமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  காரின் மீது பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவி/ஆளில்லா சிறிய விமானம்/பாதைகளை ஆய்வு செய்யும் வாகனம் ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் துணையோடு பல்வேறு நெடுஞ்சாலை இடர்பாடுகளைக் (அழுத்தம், தேய்மானம் மற்றும் விரிசல் போன்றவை) கண்டறிந்து அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு திட்ட இயக்குநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் வான் மூலம் பார்வையிட்டார் மாநிலத்தின் உடனடி நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியாக பிரதமர் ரூ.1000 கோடி அறிவிப்பு.

மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் வான் மூலம் பார்வையிட்டார் மாநிலத்தின் உடனடி நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியாக பிரதமர் ரூ.1000 கோடி அறிவிப்பு.

அம்பன் புயல் பாதிப்பு நிலைமையைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்கம் சென்றார். அவருடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர்கள் ...

அம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை.

அம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை.

மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுப்பதற்காக அம்பான் புயலின்போது நாட்டின் கிழக்குப் பகுதிகளில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை மிக ஆயத்தமான நிலையில் உள்ளது. இப்பணிகளுக்காக நிலையான இறக்கைகள் (fixed ...

மேற்கு மத்திய வங்களா விரிகுடா பகுதியில் உம்பன் சூப்பர் புயல் காற்று: மேற்கு வங்கம் மற்றும் வட ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை.

மேற்கு மத்திய வங்களா விரிகுடா பகுதியில் உம்பன் சூப்பர் புயல் காற்று: மேற்கு வங்கம் மற்றும் வட ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை.

இந்திய வானிலை ஆய்வு துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் /  புயல் எச்சரிக்கை பிரிவின் தற்போதைய ( 10.00 மணி அளவில் ஐஎஸ்டி) நிலவர அறிக்கையின் படி கீழ் கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் காற்று இப்போது வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்துள்ளது.  இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில்  மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் உள்ளது. இது இப்போது 08.30 மணி வாக்கில் வடமேற்கு வங்களா வி்ரிகுடா பகுதியில் நிலைக் கொண்டுள்ளது.  இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் உள்ளது. இது ஏறக்குறைய  பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு –தென்கிழக்கில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.  இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்)  மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்)இன்று மதியம் அல்லது மாலை (20ம் தேதி மே, 2020)  கரையை கடக்கும் எனத் தெரிகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக இருக்கும். வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரலாம்.  இன்று மதியம் முதல் நிலச்சரிவு முறைகள் தொடங்கும். பின்னர் இது படிப்படியாக வடக்கு-வடகிழக்கில் கொல்கத்தாவை  நோக்கி நகர வாய்ப்புள்ளது.  டோப்ளர் ரேடார் முறையில் ( டிடபிள்யுஆர்) முறையில் தொடர்ச்சியாக விசாகப்பட்டினம் ( ஆந்திர மாநிலம்) பாராதீப் (ஒடிஸா) மற்றும் கோபால்பூர் ( ஒடிஸா) ஆகிய இடங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னறிவிப்பு: அடுத்த 25 மணி நேரத்தில் ஒடிஸாவின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக ( ஆங்காங்கே)  கன மழை முதல் அதிககன மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் கடலோர பகுதியில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.  ஒடிஸா மற்றும் கடலோர மாவட்ட பகுதிகளில் இது மணிக்கு 125 கிலோ மீட்டர் சூறாவளி காற்று வேகத்தை எட்டவும் கூடும். ஒடிஸா மற்றும் தெற்கு கடலோர மாவட்ட உள்பகுதிகளில் இது மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.

Page 2 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x