இந்த நாட்களில் டாஸ்மாக் செயல்பாடாது டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 6 வது முறையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் எந்த தளர்வும் இல்லாமல் முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை திருவள்ளூர் மதுரை செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தமிழக அரசு மதுபான கடைகள் திறக்கவில்லை. மற்ற பகுதிகளில் செயல்பட்டது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட மேலாளர்களும் ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளத்து .மாநிலத்தில் உள்ள மொத்த 5,300 மதுபான விற்பனை நிலையங்களில், கிட்டத்தட்ட 4,500 இப்போது செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா அதிகம் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் தற்போது திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version