சட்டிஸ்கரில் நடக்கப்போகும் மாற்றம்! உடையும் சூழலில் காங்கிரஸ் கட்சி!

பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங்கிற்கு செக் வைக்க சித்துவை கொண்டு வந்து இப்பொழுது பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றிக்கு செக் வைத்து விட்டார் ராகுல் காந்தி.

ராகுலின் இதுபோன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சி அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அடுத்து சட்டிஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் பாக லும் கடந்த 2018 சட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தலின் பொழுது முதல்வராவார் என்று எதிர்பாக்கப்பட்ட சிங் டியோவும் இப்பொழுது முதல்வர் பதவிக்காக மல்லுக்கு
நிற்கிறார்கள்.

2018 சட்டமன்ற தேர்தலில் சட்டிஸ்கரில் பா.ஜ. யாருமே எதிர்பார்க்காத வண்ண ம் படுதோல்வி அடைந்தது. இதற்கு பிஜேபியின் ராமன் சிங் அவர்களின் 15 ஆண்டு கால தொடர் ஆட்சி தான் என்று கூறப்பட்டது.

அப்பொழுது சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த சிங் டியோ அவர்களின் மக்கள் செல்வாக்கு தான் பாஜக தோல்விக்கு முக்கியமான காரணமாக இருந்தது ஆனாலும் காங்கிரசில் பூபேஸ் பாகல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முக்கிய காரணம் சிங் டியோ ராஜபுத்திரர்.பூபேஸ் பாகல் குர்மி இனத்தை சார்ந்தவர். ராஜபுத்திர இனத்தை சார்ந்த பிஜேபி யின் ராமன் சிங்கை தோற்கடிக்க ராஜ புத்திரரான சிங்டியோவை பயன்படுத்திக்
கொண்ட காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்கு பிறகு ஓபிசி அரசியலை கையில் எடுத்து பூபேஸ் பாகலை முதல்வராக்கியது.

காங்கிரஸ் தலைமை பூபேஸ் பாகலை முதல்வராக்கியதோடு விட்டு இருக்கலாம் ஆனால் ராகுல்காந்தி தேவை இல்லாத அரசியலை செய்து விட்டார்.

முதல்வர் பதவி கிடைக்காமல் வருத்தமாக இருந்த சிங்டியோ வை சமாதானப்படுத்த முதல் இரண்டரை வருடங்களுக்கு பூபேஸ் பாகல் முதல்வராக இருப்பார்.அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு சிங்டியோ முதல்வராக இருக்கட்டும் என கூற சிங்டியோவும் அப்படியே இருக்கட்டும் என்று தலையாட்டி விட்டார்.

பூபேஸ் பாகலும் இரண்டரை வருடத்திற்கு பிறகு எப்படியாவது முதல்வர் பதவி யை தக்க வைத்து கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் ராகுலின் 2.5-2.5 முதல்வர் பதவி ஆலோசனைக்கு சம்மதம்
தெரிவித்து முதல்வராகி விட்டார்.

சிங்டியோவும் அப்போதைக்கு கிடைத்த சுகாதார துறையை பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார். சட்டிஸ்கர் அரசியலில் ராமன் சிங்கின் வீழ்ச்சி அஜித் ஜோகியின் மரணம் இரண்டும் இணைந்து
காங்கிரசை உச்சத்தில் கொண்டு செல்ல பூபேஸ் பாகல் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்றவராக மாறி விட்டார்.

சட்டிஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டது இது வரை பொறுமையாக இருந்த சிங்டியோ ராகுலிடம் உங்களுடைய வாக்குறுதி என்னவானது? எப்பொழுது என்னை முதல்வராக்க போகிறீர்கள்? என்று ராகுலை கேட்க ராகுலிம் பூபேஸ் பாகலிடம் கேட்டுள்ளார்.

சட்டிஸ்கரில் பிஜேபி காலி இனி காங்கிரஸ் ஆட்சி தான். இதற்கு நான் தான் காரணம் எனவே முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று டெல்லி சென்று ராகுலிடம் நெத்தியடியாக கூறி விட்டார்.

மறுபடியும் முதல்வர் பதவி கிடைக்காத சிங்டியோ ராகுலிடம் வாக்கு தவறுவது தலைவருக்கு நல்லதல்ல என்று கூறி வருகிறார் ராசிங்டியோ ராஜபுத்திர மன்னர் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். ராஜபுத்திரர்கள் எப்பொழுதும் நம்பிக்கை வாக்குறுதி இரண்டையும் தலையாய கடமையாக பின் பற்றுவது வழக்கம்.

இதில் தவறினால் கோபம் அடைந்து விடுவார்கள். சிங்டியோவும் காங்கிரஸ் தலைமை அதாவது ராகுல் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறார். பூபேஸ் பாதல் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முடி
யாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இவர்களுக்கு இடையில் நடைபெறும் முதல்வர் பதவிற போட்டியில் இந்த முறையாவது தனக்கு அதிர்ஸ்டம் அடிக்காதா? என்று பகல் கனவுடன் காத்து இருக்கிறார் தம்ராட் வாஜ் சாஹூகடந்த 2018 சட்டிஸ்கர் மாநில தேர்தலில் பிஜேபி படுதோல்வி அடைய தம்ராட் வாஜ் சாஹூவும் ஒரு காரணம். சாஹூ இன மக்கள் சட்டிஸ்கர் அரசியலில் செல்வா க்கு பெற்றவர்கள்.

காலம் காலமாக பிஜேபி ஆதரவாளர்களாக இருந்தவர்கள். வியாபாரத்தை ஆதாராமாக கொண்டு சட்டிஸ்கர் மாநிலத்தை கையில் வைத்து இருக்கும் சாஹூக்கள் மோடி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியினால் தங்களுக்கு
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியை வாபஸ் செய்யுங்கள் என்று பிஜேபியில் உள்ள சாஹூ தலைவர்கள் மூலமாக மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால் மத்திய அரசு இதைக்கண்டு கொள்ளாமல் போகவே மத்திய மாநிலபிஜேபி அரசுகளை எதிர்த்து 2018 ல் கடுமையான போராட்டம் நடத்தினார்கள் இதை காங்கிரசில் இருக்கும் தம்ராட்வாஜ் சாஹூ ஊதிவிட்டுக்கொண்டே இருந்தார்.

தம்ராட்வாஜ் சாஹூவின் முயற்சியினால் சாஹூ மக்கள் பிஜேபி ஆதரவு அரசிய லை கை விட்டு காங்கிரஸ் பக்கமாக திரும்பினார்கள்.இதனால் சட்டிஸ்கர் மாநில வரலாற்றில் காங்கிரஸ் அது வரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சட்டிஸ்கர் மக்கள் தொகையில் சாஹூ இன மக்கள் சுமார் 20 சதவீதம் வரை இருக்கிறார்கள்.குர்மி மக்களும் சுமார்20 சதவீதம் வரை இருக்கிறார்கள். ஆனால் ராஜபுத்தரர்கள் சுமார் 3 சதவீதம் தான்இருக்கிறார்கள்.

3 சதவீத ராஜபுத்திர ர்கள் உள்ள சட்டிஸ்கரில் ராமன் சிங் என்கிற ராஜபுத்திர முதல்வர் தொடர்ந்து ஆள சாஹூக்கள தான் துணை புரிந்து நின்றார்கள்.ஆனால் 2018 தேர்தலில் சாஹூக்கள் காங்கிரஸ்க்கு ஆதரவாக
மாறி விட்டார்கள்.

சாஹூ இன மக்கள் அதிகமாக உள்ள 22 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியே போக காங்கிரஸ் கட்சிக்கு 68 தொகுதிகள் கிடைத்தது. பிஜேபிக்கு 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

சாஹூ இன மக்களினால் தான் பிஜேபிக்கு படு தோல்வி கிடைத்தது இதனால் காங்கிரசில் உள்ள தம்ராட்வா ஜ் சாஹூ முதல்வர் பதவியை எதிர்பார்த்து காத்து இருந்தார்.ஆனால் கிடைக்கவில்லை.

உள்துறை அமைச்சர் பதவியை அளித்தார்கள். இப்பொழுது பூபேஸ் பா கல் சிங்டியோ போட்டியில் மாற்று ஏற்பா டாகதனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று காத்து இருக்கிறார்.

இப்போதைக்கு சட்டிஸ்கர் மாநில காங்கிரசில் பூபேஸ் பாகலுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதால் சிங்டியோவை ராகுல் முதல்வராக கொண்டு வரமாட்டார்.இதனால் சிங்டியோ காங்கிரசை உடைத்துக் கொண்டு வெளியேற வாய்ப்புகள் இருக்கிறது.

சிங்டியோவுக்கு சுமார் 25 காங்கி ரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது.தம்ராட்வாஜ் சாஹூம் குழப்பத்தில் இருக்கிறார்.இதுவரை இரண்டு கூட்டணி கட்சிகளிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள உடன்பாடு போட்டுகொள்வதைபார்த்து இருக்கிறோம்.

ஆனால் சொந்த கட்சியிலேயே உனக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி அவருக்கு இரண்டரை வருடம்
முதல்வர் பதவி என்று ஒப்பந்தம் போட்ட ஒரே கோமாளித்தலைவர் ராகுல் மட்டுமே இருப்பார்.

Exit mobile version