தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் ஒரு கிறுஸ்தவர் Dr.VK ஜான் ! இதுதான் பா.ஜ.க!

உலகத்தின் அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க இன்று நாடு முழுவதும் மிகப்பெரும் வலிமை கொண்ட அரசியல் இயக்கமாக உள்ளது. இந்தியாவில் அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தும் கட்சி என்ற பெருமையைப் கொண்டுள்ளது . ஆனால் இன்றைய பா.ஜ.க.வுக்கான விதை சுதந்திரத்துக்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது.

சியாம் பிரசாத் முகர்ஜி. சுதந்திரத்துக்குப் பிறகு நேருவின் இடைக்கால அரசில் அமைச்சராக இருந்த அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதிய ஜனசங்கத்தைத் தொடங்கினார்.அப்போதைய இளம் தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி போன்றோரும் ஜனசங்கத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்று கட்சியை வழி நடத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன கட்சி ஜன சங்கத்தின் சென்னை மாகாணத்தின் முதல் தலைவராக Dr.VK ஜான் 03.10.1958 அன்று நியமிக்கப்பட்டார். Dr.VK ஜான், ஜன சங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் வகுப்பு தோழர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் “ஒரு கிறுஸ்தவரான நீங்கள் எப்படி இந்து அடிப்படைவாத கட்சியின் தலைவராக இருக்க ஒப்புக்கொண்டீர்கள்?” என கேட்டார். அதற்கு ஜான் அவர்கள் அளித்த பதில் “எனக்கு சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களை நன்கு தெரியும், நிச்சயம் அவர் ஒரு அடிப்படைவாத கட்சியின் தலைவராக இருக்க வாய்ப்பே இல்லை” என பதிலளித்தார்.

சென்னை மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினராகவும், எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பதவி வகித்த Dr.VK ஜான் அவர்களின் 128-வது பிறந்த தினம் இன்று. அவரது சேவையை போற்றி, நினைவு கூர்கிறோம். தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் SG. சூர்யா அவரின் முகநூல் பக்கத்திலிருந்து!

Exit mobile version