சத்தமில்லாமல் சாதித்த இந்திய ராணுவம்! ஜெயிக்கிறதுக்கு முன்னாடி கொண்டாடுறதும் ஜெயிச்சதுக்கு அப்பறம் ஆடுறதும் நம்ம அகராதிலயே கிடையாது!

ராஜதந்திரமாக கையாண்டு சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியை இந்தியா சத்தமில்லாமல் மீண்டும் நம் கைவசம் கொண்டு வந்துள்ளது.உலகம் முழுவதும் இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றியே பேசிக் கொண்டிருப்பதாக செய்தியை நடமாட விட்டு சத்தமில்லாமல் சீனா ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை நாம் நம் கைக்குள் கொண்டு வந்துள்ளோம்.

இதை சீனாவே எதிர்பார்த்து இருக்காது; இப்போது நாம் கூறும் எல்லைக் கட்டுப்பாடு கோடு என்பது சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள இடமாகும்.எளிதாக புரியும்படி சொல்ல வேண்டுமானால் அடுத்த வீட்டுக்காரன் அவனது இடத்தின் எல்லையை பத்தடி தள்ளி நமது இடத்தில் வைப்பதுபோன்றதாகும். இப்போது இது தான் எனது இடத்தின் இல்லை என்று அவன் கூறுவது போல!

இங்கேதான் இந்தியாவின் ராஜதந்திரம் நாமாகப் போய் என் எல்லை அங்கே வரை இருக்கிறது என்று 50வருடங்களுக்குப் பிறகு பிரச்சினை செய்தால் இந்தியா வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறது என்று உலக நாடுகள் பார்க்கும்.ஆனால் இந்தியாவோ இங்கு பாகிஸ்தானோடு ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தானாக வந்து சீனா மாட்டிக்கொண்டது.

இன்னும் சீனா மேலே ஊருடுவலாம் என்று செய்யும் பொழுது இந்தியா நம்முடைய ஒரிஜினல் எல்லைக் கட்டுப்பாடு கோடு ஆன பழைய 1962-ஆம் இடத்தை எல்லைக் கட்டுப்பாடு கோடு வரை சென்று விட்டது!!!!!
அதாவது பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சனை செய்ய ஆரம்பிக்கும் பொழுது நம்மளுடைய ஒரிஜினல் எல்லையான அவர் ஆக்கிரமிப்பு செய்த அந்தப் பத்து அடியைத் தாண்டி நம்முடைய ஒரிஜினல் இடத்தில் வந்து நாம் நிற்பது போன்றது.

இப்போது யார் கேட்டாலும் உங்களுடைய எல்லைக் கட்டுப்பாடு கோடு எது என்று கேட்கும் பொழுது 1962 ஆம் ஆண்டு உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு வரை படத்தைத்தான் காட்ட வேண்டியது இருக்கும்.அப்பொழுது இந்தியா நான் எனது இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறும் சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது

இதைவிட மிக மிக முக்கியம் இப்பொழுது கூட இந்தியா சீனாவை தாக்க முடியும் ஏன் என்றால் உயர்ந்த மலை குன்றுகளின் மேல் இந்தியா உள்ளது.சீனாவின் படைகளை மலை அடிவாரத்தில் தான் உள்ளன ஆனால் முதலில் யார் தாக்கியது என தெரிந்தால் இந்தியாவுக்கும் பிரச்சனைதான்…

அதனால்தான் இந்தியா அமைதி காக்கிறது

கண்டிப்பாக சீனா தாக்கும் அதற்காகத்தான் இந்தியா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
சீனா தாக்கி நமக்கு ஏதாவது உயிர் சேதம் ஆகும் பட்சத்தில் அடுத்த நிமிடங்களில் இந்தியாவின் தாக்குதல் மிகவும் பயங்கரமாக இருக்கும்.இதற்காகத்தான் இந்தியா காத்துக் கொண்டிருந்தது. சீனா தாக்கும் பட்சத்தில் இந்தியாவின் தாக்குதல் மிகவும் பயங்கரமாக இருக்கும். ஒரு சில பேர் சொல்லலாம் இந்தியாவை விட சீனா மிகவும் வலிமையான நாடு என்று? ???

ஆம் வலிமையான நாடு தான்.ஆனால் நிறைய விஷயங்களில் இந்தியா சீனாவை விட முன்னிலையில் உள்ளது.மிகமிக முக்கியம் உலகநாடுகளின் துணை இந்தியாவுக்கு மிகவும் உள்ளது! சாமி படத்தில் விக்ரம் சொல்வது போல் நீ ஏன் லிஸ்டிலேயே இல்லையே, நீயா வந்து ஏன் மாட்டிக்கிட்ட என்பது போல் உள்ளது.!இந்திய ராணுவத்தை பொறுத்தவரையில் இந்த சம்பவம் சத்தமில்லாமல் சாதித்த இந்திய ராணுவம்! ஜெயிக்கிறதுக்கு முன்னாடி கொண்டாடுறதும் ஜெயிச்சதுக்கு அப்பறம் ஆடுறதும் நம்ம அகராதிலயே கிடையாது! என்பது போல் அமைந்துள்ளது

.

Exit mobile version