மோடி அரசு கொரோனா சூழ்நிலைக்கு இடையே தொழில்துறையினரிடம் இருந்து பெற்ற 585 பிரச்சினைகளில் 581-க்கு தீர்வு கண்டது.

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் குறைகேட்புப் பிரிவு, தீவிரச் செயல்பாட்டு அணுகுமுறை மற்றும் உரிய நேரத் தீர்வு ஆகியவற்றின் மூலம், பெறப்பட்ட 585 பிரச்சினைகளில் 581-க்கு தீர்வு கண்டு பைசல் செய்துள்ளது. பணிக்குழு, இந்தப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட இதர தொடர்புடைய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று தீர்வு கண்டு வருகிறது. உணவு மற்றும் அது சார்ந்த தொழில்துறை அதிகபட்சத் திறனுடன் இயங்குவதற்கு , அவை சந்தித்து வரும் சவால்கள், பிரச்சினைகளைச் சமாளிக்க , பணிக்குழு முன்னணி மாநிலங்களில் உள்ள தொழில் சங்கங்கள், உணவு பதப்படுத்துவோருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. நாடு தழுவிய கொவிட்-19 ஊரடங்கு காலத்தில், உற்பத்தி அல்லது விநியோகச் சங்கிலியில் இடையூறு உள்பட உணவு பதப்படுத்தும் துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்குத் தீர்வு காண அவற்றை  covidgrievance-mofpi@gov.in. என்ற முகவரிக்கு அஞ்சல் செய்யலாம்.

அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் முதலீடு இந்தியா உறுப்பினர்களைக் கொண்டு , அமைச்சகத்தின்  அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணிக்குழு மற்றும் குறை கேட்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் குறை கேட்புப் பிரிவை நேரடியாகவோ அல்லது பல்வேறு தொழில் சங்கங்கள் மூலமாகவோ அணுகலாம். குறை கேட்புப் பிரிவுக்கு வந்த முக்கிய பிரச்சினைகள் வருமாறு; 1. ஊரடங்கால் தொழிற்சாலை மூடல், 2. போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள், சேமிப்பு கிடங்கு மூடல், 3. தொழிலாளர்கள் இல்லாமை, 4. பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் நடமாட்டம் .

Exit mobile version