கேரள மாநிலத்தில் , முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. கேரளாவை உலுக்கி வரும் பிரச்சனை என்று பார்த்தால் சொப்னாவும் தங்கக் கடத்தல் விவகாரமும் தான்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் சிலரின் உதவியுடன் தங்கக் கடத்தல் நடந்து வருவது சுங்கத்துறைக்கு தெரியவந்தது. சுதாரித்து கொண்ட சுங்கத்துறை விமான நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டது. அமீரகத்தில் இருந்து தூதரக அலுவலகத்திற்கு வந்த தூதரக சரக்கு(டிப்ளமேட்டிக் லக்கேஜ்) சோதனையை மேற்கொண்டது சுங்கத்துறை. அந்த சோதனையில் தங்க கட்டிகள்பிடிபட்டது இவை சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் பல பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் கசிந்தவுடன் விசாரணை பொறுப்பு அதிகாரியாக NIA வின் DIG ஆக திருமதி KB.வந்தனா ஐபிஎஸ் அவா்கள் நியமனம் செய்தது மோடி அரசு.
யார் இந்த வந்தனா ஐபிஎஸ்..?
தமிழகத்தை சேர்ந்த இவர் 2004 ல் ஐபிஎஸ் ஆன இவா் ராஜஸ்தான் பேட்சில் இருந்து தேர்வாகிறார். பின்னர் ஜெய்பூா் SP ஆக பணியில் அமா்கிறார். பின்னா் 2017ல் மோடி அரசில் மே மாதம் 10ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டு பணி அமர்த்தப் படுகிறார். திறமைகளை தேடி தேர்ந்தெடுப்பதில் மோடி அரசாங்கத்தின் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னுமொரு நியமனம் என்று அன்றே சில டெல்லி பத்திரிகைகள் பாராட்டின. ஆனால் திடல் வழக்கப் படி சீனி சக்கர சித்தப்பா புகழ் பாடும் தமிழக ஊடகங்கள் இவரை கண்டு கொள்ளவில்லை.
மேலும் அமெரிக்காவில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியிக்கு சென்று முதலிடத்தை பெற்று தாய் நாடு திரும்பிய ஒரே பெண்மணியும் இவரே. ஒருவரை பத்து நிமிடம் சாதாரணமாக விசாரணை செய்தாலே அவா் எப்படி பட்டவர் என்று சொல்லும் அதீத அறிவின் சொந்தக்காரா் என்றெல்லாம் மலையாள பத்திரிகைகள் இவரை கொண்டாடுகின்றனர். அவ்வளவு திறமை வாந்தவர் என்கிறார்கள். மேலும் அடுத்த என்ஐஏவின் தலைவராக வருவதற்கான வாய்ப்பும் இவருக்கு இருக்கிறது என்று பேச்சும் அடிபடுகிறது.
தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருந்த சொப்னாவும், முன்னாள் பிரின்ஸிபிள் செக்ரெட்டரியான எம்.சிவசங்கரனும் விண்வெளி ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றிருக்கலாம் என்று ஒரு சந்தேகம் கிளம்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன் ISRO தலைமையகத்திற்கு ஸ்வப்னாவும் சிவசங்கரனும் எதற்காகவோ போய் வந்திருக்கிறார்கள். அது தொடர்பான சதியை தற்போது NIA விசாரணையில் கண்டு பிடித்து விட்டது. இதே இருவரும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சில மிக முக்கியமான விஞ்ஞானிகளுடனும் பேச்சு வார்த்தையும் நடத்தியுள்ளனர். தற்போது RAW அமைப்பும் களத்தில் இறங்கியுள்ளது. மத்திய உளவுத்துறையும் இது தொடர்பான செய்திகளைச் சேகரித்து விசாரணைக்காக துபாய் செல்லும் NIA விடம் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
தங்க கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா தலை மறைவானார். அப்போது கேரளாவில் தேடப்பட்டு கொண்டிருந்த நிலையில் அதுவும் அப்போது இருந்த கடுமையான லாக்டவுன் நேரத்தில் ஸ்வப்னா பெங்களூருக்கு ஓடிவந்தார். அங்கே தான் ஒரு ஹோட்டலில் சிக்கினார். அவர் தங்க கடத்தலில் மட்டுமே ஈடு பட்டு கொண்டிருந்ததால் அப்போது சேப்டிக்காக பெங்களுக்கு சென்றிருக்கலாம் என்று இருந்த நிலையில் இந்த விண்வெளி ஆராய்ச்சி ரகசியங்களையும் சேகரித்துள்ளார் என்று திடுக்கிடும் தகவல்கள் வெளிவர துவங்கியுள்ளது.
தற்போது இதையும் தீவிரமாக ஆராய்ந்து விசாரணை நடத்துகிறார்கள். இரண்டு நாட்கள் முன்பு காம்ரேட் மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று சொன்னதையும் கவனிக்க வேண்டும்.
NIA, RAW, CBI, Customs, என்று அனைத்து வித முக்கிய அமைப்புகளும் கூட்டு சேர்ந்து ஒவ்வொரு நிகழ்வையும் தோண்டி துருவ ஆரம்பித்து விட்டனர். பல சூழ்ச்சிகளில் கேரளா சிக்கியுள்ளது தெரிகிறது.
ஆனால் வழக்கம் போலவே இங்குள்ள ஊடகங்களும், அறிவாலய தோழர்களும் கேரளாவில் எதுவுமே நடக்காதது போல அனைத்தையும் மவுனமாக கடந்து போய் அண்ணாமலைக்கு எதிராக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.