தலிபான்களே அடித்து கொள்வார்கள்- தலிபான்களில் பல குரூப்கள் இருக்கின்றன!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி சரண் அடைந்து, அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும்படி, அந்த நாட்டு அரசுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தலிபான்களில் பல குரூப்கள் இருக்கின்றன இதில் மூன்று முக்கியமான குரூப் இருக்கிறது.ஒன்று ஆப்கன் தலிபான்கள்.இரண்டாவது குவெட்டா சூரா மூன்றாவது பாகிஸ்தான் தலிபான் இதன் பெயர் டிடிபி அதாவது டெரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்பதாகும்.

இந்த டிடிபி தான் மிக தீவிரமான தலிபான்களாகும் இவர்கள் தான் அமெரிக்கா வின் தீவிரமானன் எதிரிகள்.இதனை உரு வாக்கியவர் பெய்துல்லா மெகசூத். சுமார் எட்டு சிறிய தலிபான் குரூப்களை ஒன்றிணைத்து அதற்கு டெரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்று பெயரிட்டு ஆப்க னில் இருந்து அமெரிக்க படைகளைவெளியேற்ற தீவிரவாத தாக்குதல்களை நடத்தியவர்.

2009 ல் அமெரிக்க ராணுவம் ட.ரோன் அட்டாக் மூலமாக கொன்று விட்டது. அடு த்து டிடிபியின் தலைவர்களாக வந்த ஹ கிமுல்லா மெகசூத்,மௌலானா, பசுல்லா ஆகிய தலைவர்களையும் அமெரிக்க ராணுவம் ட்ரோன் அட்டாக் மூலமாக கொன்று விட்டது.

இப்பொழுது பாகிஸ்தான் தலிபான்களி ன் தலைவராக இருக்கும் முப்தி நூர் வாலி மெகசூத்க்கும் ஆப்கன் தலிபான்களி ன் தலைவராக இருக்கும் பராடருக்கும் சித்தாந்த ரீதியாக இப்பொழுது ஆகாது. படத்தில் இருப்பவர் தான் முல்லா அப்துல் கானி பராடர் ..ஆப்கன் தலிபான் இய க்கத்தை ஒற்றை க்கண்முல்லா முகம்மது ஓமர் உருவாக்கி ய பொழுது துணை நி ன்று தலிபான்களின் துணைத்தலைவ ராக இருந்தவர்

ஓமர் மரணத்திற்குப் பிறகு இவர் தான் தலிபான் அமைப்பை நடத்தி வருகிறார்இப்பொழுது ஆப்கானில் நடைபெற்று வரும் உள் நாட்டு போரை பராடர் தான் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.பராடரை 2010 ல் கராச்சியில் அமெரிக்கா பாகிஸ்தான் இணைந்த டீம் கைது செ ய்து சிறையில் அடைத்தது. ஆச்சரியம்
என்னவென்றால் பராடரை கைது செய்த அமெரிக்காவே பாகிஸ்தான் அரசை மிரட்டி 2018 ல் பராடரை விடுதலை செய்ய வைத்தது.

அடுத்து 2020 ல் அமெரிக்கா பராடரிடம் நீங்களே ஆப்கானிஸ்தானை அமைதியாக பார்த்து கொள்ளுங்கள் அமெரிக்கா ராணுவம் 2021 ல் ஆப்கானிஸ்தானை விட்டு விலகி விடும். அதற்கு பிறகு ஆப்கான் உங்கள் வசம் நாங்கள் தலையிட மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டது அதன் படி இப்பொழுது அமெரிக்க ராணு
வம் ஆப்கானிஸ்தானை விட்டு விலகிகொண்டு இருக்கிறது.

தலிபான்கள் கைகளில் ஆப்கானிஸ்தான் விழுந்து கொண்டு இருக்கிறது. ஆக எல்லாமே செட்டப் தான். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத்யூனியனை விரட்ட தலிபான்களை உருவாக்கி பின் லேடனை உருவாக்கியது மாதிரி இப்பொழுது பராடரை அமெரிக்கா உருவாக்கி இருக்கிறது

பராடரும் பின் லேடன் மாதிரி கொஞ்சம் புத்திசாலி தான்.இருந்தாலும் பராடரை அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்த பொழுது பராடருக்கு அடுத்த இடத்தில் இருந்த அப்துல் கயாம் ஜாகிர் தான் தலிபான் இயக்கத்தை நடத்தி வந்தார்

இவர் தலைமையில் தலிபான்கள் இருந்த பொழுது தான் ஆப்கனிஸ்தானில் இருந்த அமெரிக்க பிரிட்டிஷ் படைகளுக்கு வலுவான அடி கிடைத்தது.2014 ல் ஜாகிருக்கும் பராடருக்கும் ஏதோ பஞ்சாயத்து ஏற்பட ஜாகிரை தலிபான்க ளின் தலைமை பொறுப்பில் இருந்து தூ க்கிவிட்டார் பராடர்.ஒரு வேளை அமெரிக்க படைகளை ஜாகிர் தலைமையில் இருந்த தலிபான்கள் கதற விட்டதற்காகவே பராடர் ஜாகிரை நீக்கி இருக்கலாம்.

ஜாகிர் இப்பொழுது குவெட்டா சூரா எனகிற தலிபான் அமைப்பில் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த குவெட்டா சூரா அமைப்பு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான கு வெட்டாவில் இருந்து உருவாக்கப்பட்டது.2001 ல் அமெரிக்கா ஆப்கனிஸ்தான் ஆ ட்சியில் இருந்து தலிபான்களை விரட்டியபிறகு அவர்கள் ஆப்கனில் இருந்து தப்பி பலுசிஸ்தானில் உள்ள குவெட்டாவில் செட்டிலானார்கள்.

அப்பொழுது அவர்களை வைத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உருவாக்கியது தான் குவெட்டாசூரா என்கிற தலிபான் அமைப்பு.இதில் இப்பொழுது இருப்பவர்கள் ஆப்கன் தலிபான் அமைப்பில் இருந்தவர் கள்தான்.ஆனால் அமெரிக்க எதிர்ப்பு நிலையில் உள்ளவர்கள்.பின் லேடன் முல்லா ஓமரை அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்க காத்திருக்கிறார்கள்.

இதே மாதிரி தான் பாகிஸ்தான் தலிபான்களும் அவர்களுடைய மூன்று தலைவர்களை கொன்றஅமெரிக்காவை பழி தீர்க்க காத்து இருக்கிறார்கள். இதனால் தான் அமெரிக்கா ஆப்கான் தலிபான் களின் தலைவராக இருக்கும் முல்லா அப்துல் கானி பராடரை சிறையில் இருந்து விடுதலை செய்து அவர் கைகளில் ஆப்கானை கொண்டு செல்லும் விதமாக காய் நகர்த்தி விட்டு ஆப்கானை விட்டு வெளியேறி வருகிறது.

கொஞ்சம் யோசித்து பாருங்கள்..ஆப்கா ன் தலிபான் தலைவராக இருந்த முல் லா ஓமரையும் ஆப்கான் தலிபான்களுக்கு ஆதரவாகவும் இருந்த பின் லேடனையும் போட்டு தள்ளியது அமெரிக்கா தான்இப்பொழுது அதே அமெரிக்கா அதே ஆப்கன் தலிபான் அமைப்பின் இரண்டு வது தலைவராக இருந்த முல்லா அப்துல்கானி பராடருடன் டோகாவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கானை அவரிடம் விட்டு செல்கிறது என்றால் ஏதோஇருக்கிறது.

எதுவாக இருந்தாலும் பின் லேடன் முல்லா ஓமரை வேட்டையாடிய அமெரிக்காவின் ஆதரவுடன் ஆப்கன் தலிபான் தலைவராக இப்பொழுது இருக்கும் பராடர் ஆப்கானிஸ்தானை ஆள மற்ற தலிபான்கள் விட்டு விடுவார்களா? நிச்சயமாக விட மாட்டார்கள்.எனவே அமெரிக்க எதிர்ப்பு தலிபான்களான கு வெட்டா சூரா மற்றும் பாகிஸ்தான் தலைபான்கள் இணைந்து பராடர் தலைமையிலான ஆப்கான் தலிபான்களிடம் மல்லுக்கு நிற்க ஆரம்பிப்பார்கள்.

அதிலும் குவெட்டா சூராவில் உள்ள பராடரின் பழைய கூட்டாளியான ஜாகிரும்பாகிஸ்தான் தலிபான்களின்
தலைவரான முக்தி நூர்வாலி மெக்சூத்தும் அமெரி க்க ஆதரவுடன் இருக்கும் பராடரை ஆப்கானை ஆள விட்டு விடுவார்களா?நிச்சயமாக விட மாட்டார்கள அவர்களே அடித்து கொண்டு சாகட்டும்என்று அமெ ரிக்கா முடிவெடுத்து ஆப்கானை விட்டு விலகி இருப்பதாகவே நினைக்க த ன்றுகிறது..
.

Exit mobile version