பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் கட்சி சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷக்கீல் அகமது போட்டு உடைத்துள்ளார்.
பீஹார் காங்கிராஸ் தோற்றதால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை நான் எடுக்கவில்லை.ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த நான் 3 மாதமாக மேலும் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏற்கனவே எடுத்த முடிவு தான்.
ஆனால்,தற்போது தான் அதனை அறிவிக்கிறேன்.ஏனெனில் என்னால் ஒரு 5 ஓட்டுகள் கூட குறைந்து விடக் கூடாது என்பதால் தான் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கவில்லை. ஆனாலும் அதற்குரிய காரணத்தையும் நான் சொல்லிதான் ஆக வேண்டும்
பீஹார் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட யுக்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தன.
ஓட்டு திருட்டு என்ற கூற்றை மக்கள் ஏற்று கொள்ளும்படியாக இல்லை. மேலும் ராகுலின் ஓட்டு அதிகார யாத்திரையில் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் மட்டுமே கலந்து கொண்டனர். உண்மையான வாக்காளர்கள் யாரும் பங்கேற்கவே இல்லை. இதுவரை எந்த வாக்காளரும் என் ஒட்டை காணவில்லை என்று புகாரளிக்க வரவில்லை.
அடுத்தது பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஏற்கனவே தேர்தல் ஆணையம் மும்பையில் 90 தொகுதிகளுக்கு வாக்காளர் போட்ட கையெழுத்திற்க்கும் EVM மிஷினில் பதிவான ஒட்டுக்கும் எந்த குழப்பமும் இல்லை என்று நிருபித்து காட்டி விட்டது.
மறுபடியும் பீகாரில் அதையே சொல்லி பிரச்சாரம் செய்தது மக்கள் விரும்பவில்லை அதேபோல, வாக்காளர் பட்டியல் SIR தீவிர திருத்தத்தை எதிர்க்கும் காங்கிரஸின் அணுகுமுறைக்கு மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லை.
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது கட்சியின் தலைமையிடம் தரமான தேர்தல் யுக்தி இல்லை. அதாவது தேர்தல் வியூகம் வகுப்பதில் மிகவும் பின் தங்கியுள்ளது தலமை. இது நெடுங்கால அரசியலுக்கு பயன் தராது அதனால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன்.
மேலும் இந்த முடிவை எடுக்கக் முக்கிய காரணம், தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட் வழங்குவதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இது ஒவ்வொரு தேர்தலிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதை கட்சி தலைமை கண்டுகொள்வதே இல்லை என்பது என் மிகப்பெரிய ஆதங்கம்.
நான் வேறு எந்த கட்சியிலோ அல்லது அமைப்பிலோ சேரப்போவதில்லை.அந்த எண்ணமும் எனக்கு இல்லை. எனது முன்னோர்களைப் போலவே,காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கூறினார்.
