திருமாவின் பேட்டி ஒன்று கேட்க நேர்ந்தது அன்னார் இந்நாட்டில் தாழ்த்தபட்டவன், கிறிஸ்தவன், இஸ்லாமியன் பிரதமராக முடியாது என சொல்லி கொண்டே இருந்தார்.

திருமாவின் பேட்டி ஒன்று கேட்க நேர்ந்தது அன்னார் இந்நாட்டில் தாழ்த்தபட்டவன், கிறிஸ்தவன், இஸ்லாமியன் பிரதமராக முடியாது என சொல்லி கொண்டே இருந்தார்.

இக்கோஷ்டிகள் அக்காலம் முதல் அப்படித்தான் சொல்லும் முதலில் ஜனாதிபதியாக தாழ்த்தபட்டவனோ வரமுடியாது என்றார்கள்.

K.R.நாராயணன் முதல் கலாம் வரை பலர் வந்தார்கள், அதன் பின் இக்கோஷ்டி அது தேர்வு செய்யபடுவது மற்றபடி பிரதமராக முடியாது ஹிஹிஹீ என சொல்லி கொண்டே இருக்கின்றது.

நாம் இங்கு ஒரு விஷயத்தை கவனித்து பார்க்கலாம் நேரு என்பவர் பிராமணன் என்பதற்காகவோ இல்லை மதமற்றவர் என்பதற்காகவோ யாரும் வாக்களிக்கவில்லை, சுதந்திர போராட்டத்து ஆசாமி என்பதே அவருக்கு அடையாளமாய் இருந்தது.

இந்த இந்திராவோ ராஜிவோ தங்களை மத ரீதியாக ஜாதிரீதியாக அடையாளபடுத்தியவர்கள் அல்ல‌ அதன் பின் வந்த பிரதமர்களிலும் மத சார்பற்ற பிரதமர்கள்தான் இருந்தார்களே தவிர யாரும் மதவாதிகள் என சொல்லபட கூடியவர்கள் அல்ல‌.

இந்நாட்டில் மாயாவதி, கன்ஷிராம் ஏன் திருமா கூட அகில இந்திய அளவில் வென்றால் பிரதமகராகலாம் யார் தடுத்தார்கள்?

சோனியா ஒரு கிறிஸ்தவர் இன்னும் இந்துமதத்தை முழுதும் ஏற்காதவர், அவர் பிரதமராகும் வாய்ப்பும் இருந்ததே எப்படி?

தமிழகத்தினை எடுத்தாலும் காமராஜர் ஒரு தாழ்த்தபட்ட சாதி, கக்கன் ஒரு தாழ்த்தபட்ட சாதி தமிழ்நாட்டின் அரசியலில் முக்கியமானவரான கருணாநிதி என்ன சாதி என்றே தெரியா சாதி, அவருக்கும் மதம் கிடையாது.

இங்கு இஸ்லாமியன் பிரதமராக முடியாது, கிறிஸ்தவன் ஆக முடியாது என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம் சரி கடந்த தேர்தலில் இவர் காங்கிரஸோடு கூட்டணி வைத்தாரே , அப்பொழுது ஒரு தலித்,ஒரு இஸ்லாமியன் அல்லது கிறிஸ்தவன் பிரதமாக எமக்கு உறுதியளிக்க வேண்டும் என கேட்டாரா?

கேட்கவே மாட்டார் அவரும் அவரு புளிச்சி போன எழுச்சியும்.

Exit mobile version