பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அந்த நாட்டுக்கே செல்லுங்கள்! இண்டி கூட்டணியை இறங்கி அடித்த பவன் கல்யாண்!

Pawn Kalyan

Pawn Kalyan

சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தினால், ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலடி கொடுத்தார். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​களால் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட அப்​பாவி மக்​களுக்கு நேற்று ஆந்​திர மாநிலம், மங்​களகிரி​யில் உள்ள ஓர் அரங்​கில் இரங்​கல் கூட்​டம் நடை​பெற்​றது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி தண்ணீர் விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ, சிந்து நதி பாகிஸ்தானுக்கு உரியது. அதில் தண்ணீர் பாய வேண்டும். இல்லையெனில் இந்தியர்களின் ரத்தம் பாயும் என கூறியிருந்தார்.

மேலும், “பாகிஸ்தானின் சிந்து மாகாணம் வாயிலாக சிந்து நதி பாய்கிறது. இதனால் மொகஞ்சதாரோ நாகரிகம் செழிப்படைந்தது. இதை அடிப்படையாக வைத்து இந்திய நாகரிகம் பழமையானது என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், அந்த நாகரிகம் மொகஞ்சதாரோ சார்ந்தது. அதற்கு நாங்கள்தான் உரிமையாளர்கள்” என பிலாவல் பூட்டோ பேசியிருந்தார்.அவரது இந்தக் கருத்து இந்தியாவில் கடும் கண்டனங்களுக்கு வித்திட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணிடம் ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்ததாவது:

கடந்த 3 போர்களிலும் பாகிஸ்தான் எப்படி தோற்றது என அவர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும். போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எப்படி சின்னாபின்னமாக்கப்பட்டனர் என்ற வீடியோவை நாம் அவர்களுக்கு அனுப்பிவைப்போம்.உயிர்த் தியாகம் செய்ய தயார்தேவை ஏற்பட்டால், ஒவ்வொரு இந்தியனும் பாகிஸ்தான் வந்து, தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம். கடந்த காலங்களை பாகிஸ்தான் மறக்கக் கூடாது என ஆவேசத்துடன் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறினார்.தொடர்ந்து காங்கிரஸை கண்டித்த அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

மேலும் துணை முதல்​வர் பவன்​ கல்​யாண் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: மதம் குறித்து எது​வும் பேசாத சுற்​றுலா சென்ற அப்​பாவி மக்​கள் 26 பேரை சுட்டுக்கொன்​றாலும், அந்த தீவிர​வா​தி​களுக்​கும், அவர்​களை ஊக்​கு​வித்த பாகிஸ்​தான் நாட்​டுக்​கும் இங்கு ஆதர​வாக பேசுவது மிக​வும் தவறு. ஆயினும் நாங்​கள் அப்​படித்​தான் பேசுவோம் என்று கூறு​பவர்​கள் அந்த நாட்​டுக்கே சென்றுவிடுங்​கள்.தீவிர​வாதத்​துக்கு எதி​ராக அனை​வரும் ஒரே மாதிரி நடந்து கொள்​வது அவசி​யம். காஷ்மீர் நமது நாட்​டின் ஓர் அங்​கம். ஆனால், ஓட்​டுக்​காக அரசி​யல் நாடகம் ஆடக்​கூ​டாது. பஹல்​காமில் தீவிர​வா​தி​களின் துப்​பாக்கிச் சூட்​டில் உயி​ரிழந்த நெல்​லூர் மாவட்​டத்தை சேர்ந்த மதுசூதன் ராவின் குடும்​பத்​தா​ருக்கு ஜனசேனா கட்சி சார்​பில் ரூ.50 லட்​சம் நிதி உதவி செய்​யப்​படு​கிறது. இதன் மூலம் ஜனசேனா கட்சி ஒரு சிறந்த நிர்​வாகியை இழந்​துள்​ளது.

இறந்துபோன மதுசூதன்​ராவ் யாருக்கு தீங்​கிழைத்​தார்? காஷ்மீரும் நமது நாட்​டின் ஒரு பகுதி என்​ப​தால் மதுசூதன் ராவின் மனைவி அங்கு சுற்​றுலா செல்​லலாமென வலி​யுறுத்​தி​ய​தால் மதுசூதன் ராவின் குடும்​பம் காஷ்மீர் சென்​றது. அங்கு அவர் தீவிர​வா​தி​களால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இந்​துக்​களுக்கு என இருக்​கும் ஒரே நாடு இந்​தியா மட்​டும்​தான். இங்கு கூட இந்​துக்​கள் வெளி​யில் செல்​லக்​கூ​டாது என்​றால் எப்​படி?

வன்முறையை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் சென்று குடியேறலாம் என்றும், இந்தியாவில் அவர்கள் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் பவன் கல்யாண் விமர்சித்தார். மேலும், “காஷ்மீர் நமக்கானது. அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதத்தை முன்னிறுத்தி பேசுவது வெட்கக்கேடானது. மதவாத சக்திகளை அடக்க தேச ஒற்றுமையும் இன்றியமையாதது” என அவர் கூறினார்

Exit mobile version