தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் தொண்டர்களுக்கு சுற்றறிக்கை

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு கேசவ விநாயகன் மாநில அமைப்பு பொது செயலாளர் சுற்றறிக்கை:

  1. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலிமையாக வளர்ந்து வரும் நேரத்தில் கட்சியின் கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவதோடு , கார்யகர்த்தாக்கள் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படாவிடில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டும் முறையை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
  2. தங்களது மாவட்டத்தில் மாவட்ட மற்றும் மண்டல் பொறுப்பில் உள்ள எந்தவொரு நிர்வாகிகளையும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பெருங்கோட்ட பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று மாவட்ட மையக்குழுவினை கூட்டி விவாதிக்கப்பட வேண்டும் . 3.மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு ( கோட்ட அமைப்பு செயலாளர் , மாவட்ட பிரபாரி , மாவட்ட தலைவர் ) பெருங்கோட்ட பொறுப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் . 4.பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் மாநில தலைமைக்கு அனுப்பி மாநில தலைமையின் ஒப்புதல் பெற்று தேவையேற்படும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ , மாற்றம் செய்யவோ அனுமதிக்கப்படும் 5.புதிய நியமனங்களும் இதே வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

6.இந்த வழிமுறையை பின்பற்றாமல் மாவட்ட மற்றும் மண்டல் பொறுப்பில் உள்ள எந்தவொரு நிர்வாகியையும் , நீக்கப்பட்டால் அல்லது நியமிக்கப்பட்டால் அதிகாரபூர்வமற்றதாக கருதப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .

தமிழக பாரதிய கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் தேசிய விநாயகம் தொண்டர்களுக்கு சுற்றறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

Exit mobile version