தமிழகத்தில் Mission 45 என்ற புதிய திட்டத்துடன் திமுகவை குறிவைக்கின்றதா பாஜக.

பாஜக தலைவரை சந்தித்தேன்!! ஆனால் இணையவில்லை: அந்தர் பல்டி அடித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் காரணம் என்ன ?

நான் பாஜகவில் இணையவில்லை அதேநேரத்தில் தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்-  கே.கே.செல்வம் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டாவை சந்தித்த பின் பேட்டியளித்தார்.

ஒருவேளை திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம் பாஜக-வில் இணைந்தால், கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் எடுக்கலாம் என திமுக தலைமை நினைத்திருந்தது. ஆனால் அவரின் அறிக்கையை அடுத்து, இதுவரை திமுக தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கை குறித்தும் தகவல் இல்லை. 

அதேபோல அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், திமுக தலைமை தன் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் போட்டியிடுவதில் சிரமம் ஏற்படும் என நினைத்து தான் திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம் பாஜக-வில் இணையவில்லை எனவும் கூறப்படுகிறது.  எப்படி இருந்தாலும், விரைவில் KK செல்வம் மீது திமுக நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கால்பதிக்க பாஜக புதிய திட்டமாக Mission 45 என்ற திட்டதை கையில் எடுத்துள்ளது.திட்டத்தின் நோக்கம் கடந்த சில ஆண்டுகளாக மணிப்பூர்,மேற்குவங்கம் உள்ளிட மாநிலங்களில் கட்சி வளர்ச்சிககாக மாற்று அரசியல் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிளிகளை தங்கள் பக்கம் இணைப்பதுபோல் இனித்தமிழகத்தில் நடக்கும்.

TN Mission 45

TN Mission 45 விளக்கம் என்னவென்றால் திமுகவில் இருந்து 16 சட்டமன்ற உறுப்பினர்கள்,15 மாவட்ட செயலாளர்கள்,14 முக்கிய நிர்வாகிகள் என்று விளக்கம் என்கின்றார் பாஜக தேசிய நிர்வாகி ஒருவர்.

என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version