சீனாவில் தோல்வியடைந்த விவசாய பட்ஜெட்டை அப்படியே தாக்கல் செய்துள்ள தமிழக அமைச்சர் !

தமிழகத்தில் முதன் முறையாக விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யபட்டிருகின்றது, சீனாவில் மா சேதுங்கின் மிக பெரிய தோல்வி திட்டமான “கலாச்சார புரட்சி”யினை அப்படியே காப்பியடிக்கின்றார்கள்.

பட்ஜெட் தாக்கல் செய்கின்றார் அமைச்சர், அதில் வள்ளுவன் சொன்ன உழவன் எனும் வார்த்தையினை கூட அவர் பயன்படுத்தவில்லை, விவசாயி என வசனம் பேசுகின்றார், விவசாயம் என்பது ஒரிய மொழி வார்த்தை என்பது கூட அவருக்கு தெரியவில்லை, கருணாநிதியின் தமிழ் சீடர் அப்படித்தான் இருப்பார்.

பட்ஜெட் என்பது தமிழ்வார்த்தை என ஒப்புகொண்ட தமிழ் பூங்கா கோஷ்டி அது, அவர்களின் தமிழ்பற்று அத்நோ வொண்டர்,இந்த விவசாய பட்ஜெட் இருக்கும் விவசாயிகளை காக்க ஒரு வழியும் சொன்னதாக தெரியவில்லை, விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றிய அவர்கள் தேர்தல் வாக்குறுதி பற்றி மூச்சே இல்லை.

அப்படி இருக்கும் விவசாயிகளின் மிகபெரிய பிரச்சினையான ஆட் பற்றாக்குறை, விளைபொருள் விலையின்மை என எந்த சிக்கலையும் பற்றி பேசவே இல்லை.

மாறாக ஏதோ விவசாயம் பொன்கொழிக்கும் தொழில் போல கூடுதல் விவசாய பூமிகளை உருவாக்க போகின்றாராம், “இயற்கை விவசயாம்” வளர்க்க போகின்றார்களாம்.களை வெட்ட ஆளில்லா நிலையில் களை கொல்லி தெளித்து விவசாயம் பார்க்கும் அவல நிலையில் இவர் இயற்கை விவசாயத்தை எப்படி காப்பாரோ தெரியாது.

இருக்கும் விவசாய நிலமே அரைகுறை உயிரில் இருக்கும் பொழுது 75% நிலத்தை விவசாய பூமியாக்கி அதற்கு வேலையாட்கள், நீராதாரம் என எங்கிருந்து கொண்டுவருவார்களோ தெரியாது, யார் அதில் விவசாயம் செய்வார் என்பதும் தெரியாது.

சும்மா இப்பொழுது விளையும் தக்காளி 10 பைசாவுக்கு விற்கும் நிலையில் மொத்த தமிழகமும் விளைந்தால் விவசாய விளைபொருள் நிலை என்ன விலை என்ன? அந்த விலை உறுதிக்கு என்ன திட்டம் வைத்திருக்கின்றார்கள் என எவனாவது கேட்டால் அவன் சங்கி.

பட்ஜெட்டின் உச்சகட்ட காமெடி காட்சி படித்த இளைஞர்களுக்கு விவசாய தொழில் ஊக்குவிப்பு செய்வார்களாம், சீனாவில் மாவோ இதை செய்துதான் தோற்றார்.

சரி, தமிழகத்தின் பட்டதாரிகள் யார்? பெரும்பாலும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், அவர்களை மறுபடி விவசயாம் செய்ய சொல்வது “குல தொழில்” ஆகாதா?

ஆக குலகல்வி, குலதொழிலை இந்த அரசு ஊக்குவிக்கின்றது, இனி ராஜாஜிக்கும் சிலை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் வந்துவிட்டார்கள்.அமைச்சர் விவசாய பட்ஜெட்டை கருணாநிதி சமாதியிலும், கோபாலபுர வீட்டிலும் வைத்து ஆசிபெற்ற பொழுது வழமையான ஒன்றாக இருந்தது.

ஆனால் அறிவிப்பில் 36 லட்சம் ஹெக்டர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக்குவோம் என அமைச்சர் என்றவுடன் கருணாநிதியினை அமைச்சர் வகையாக கலாய்த்திருக்கின்றார் என்பது புரிந்தது.

ஆம், தரிசு நிலத்தையெல்லாம் ஆளுக்கு இரு ஏக்கர் கொடுப்போம் என அறிவித்து ரியல் எஸ்ட்டேட்டை ஊக்குவித்த ” கருணாநிதியினை இங்கே நினைவுபடுத்துகின்றார்கள்.

ஆக தந்தை தரிசு நிலங்களை எல்லாம் கூறு போட்டு விற்ற நிலையில் மகன் அதை விவசாயபூமியாக மாற்ற பார்க்கின்றார் என்கின்றார் அமைச்சர்.ஆக விவசாயிகள் பட்ஜெட் இப்பொழுது விவசாயி எப்படி வாழ்வான் என்பதற்கு வழிசொல்லாமலே படிக்கபட்டாயிற்று

இனி மீனவர் பட்ஜெட், வியாபாரி பட்ஜெட், கல்வி பட்ஜெட், ஆசாரி பட்ஜெட், சலூன் கடை பட்ஜெட் என பல பட்ஜெட்டுகள் நாளுக்கொன்று வெளிவரலாம்,அப்படியே சினிமா பட்ஜெட், சின்னதிரை பட்ஜெட், ஊடக பட்ஜெட் என வந்தாலும் ஆச்சரியமில்லை.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version