தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆடுமேய்ப்பவரின் மகன் #NEET தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடம்!

ஆடுமேய்ப்பவரின் மகனான தேனி சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், 2020 #NEET தேர்வில் 664/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில், அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.#NEET எதிர்ப்பு போராளிகளின் மொத்த பித்தலாட்டத்தையும் உடைத்து தூக்கி வீசியுள்ளார். வாழ்த்துக்கள் தம்பி.

மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வில், தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், 664 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாணவர், 720க்கு, 710 மதிப்பெண் எடுத்து, அகில இந்திய அளவில், எட்டாம் இடம் பெற்றுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களால், நீட் தேர்வில் சாதிக்க முடியாது என்று கூறி வந்த அரசியல்வாதிகள், இனி வாயை மூடுவதே நல்லது.கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், செப்டம்பர், 13 மற்றும் அக்., 14ல், நீட் தேர்வு நடந்தது. நாடு முழுவதும், 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில், 99 ஆயிரத்து, 610 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நேற்று வெளியிட்டது. இதில், 7.71 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நாட்டில் அதிகபட்சமாக, திரிபுராவில், 88 ஆயிரத்து, 889 பேரும், மஹாராஷ்டிராவில், 79 ஆயிரத்து, 974 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், 57 ஆயிரத்து, 215 பேர், அதாவது, 57.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்; இது, 2019ம் ஆண்டை விட, அதிகம். தமிழகத்தில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் தேர்வில், 720க்கு, 664 மதிப்பெண் பெற்று, புதிய சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவில், 1,823ம் இடம் பிடித்துள்ளார். தேசிய அளவில், அரசு பள்ளி மாணவர்களில், அதிக மதிப்பெண் எடுத்த வர்களில், ஜீவித் குமார் முன்னிலை பெற்றுள்ளார். இவரது தந்தை நாராயணசாமி, ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இவரது தாய் மகேஸ்வரி, நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்கிறார்.

நாமக்கல்லை சேர்ந்த மோகன பிரபா என்ற மாணவி, 705 மதிப்பெண் பெற்று, தமிழகத்தில், இரண்டாம் இடம் பெற்றுள்ளார். தமிழக மாணவர்களால், அதிலும் குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது, அவர்களால் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ படிப்பில் சேர முடியாது என, தமிழக கட்சிகளும், சில அரசியல்வாதிகளும் கூறி வந்தனர். அவர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில், அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார், அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.அரசியல்வாதிகள், இனிமேல் வாயை மூடிக் கொள்வதே நல்லது என, ஆசிரியர்களும், பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version