ட்விட்டர் நிர்வாகிகளுக்கு கெட்டகாலம் ஆரம்பம் ? அடுத்த அதிரடியில் இறங்கிய மோடி அரசு !

ட்விட்டர் நிர்வாகிகளுக்கு கெட்டகாலம் ஆரம்பம் ? 2020இல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமா உட்பட பல பிரபங்களின் ட்விட்டர் கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு, அவற்றிலிருந்து தங்களுக்கு பிட்காய்ன் அனுப்ப சொல்லி ட்வீட் செய்யப்பட்டன. அந்த ட்வீட்டுகளை நம்பி பலரும் பிட்காய்ன்களை ‘நன்கொடையாக’ அனுப்பி வைத்தனர்.அந்த விவகாரத்தை அடுத்து… அப்போதைய ட்விட்டர் சி.இ.ஓ & இந்தியா விரோதி ஜேக் டோர்சி சில நிபுணர்களை நியமித்து ட்விட்டரை தணிக்கை (ஆடிட்) செய்ய வைத்தான். அதில் முக்கியமான நிபுணர் பீட்டர் ஜாட்கோ (Peiter “Mudge” Zatko). ட்விட்டரில் நிறைய தவறுகள் நடந்ததை சுட்டிக் காட்டிய பீட்டரை இந்த ஆண்டு ஆரம்பத்தில் ட்விட்டர் நீக்கியது. இதற்கிடையில், ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்த டெஸ்லா சி.இ.ஓ ஈலான் மஸ்க் (Elon Musk), “ட்விட்டரில் நிறைய போலி கணக்குகள் உள்ளன. அவற்றை ட்விட்டர் நிர்வாகம் என்னிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டது.

எனவே ட்விட்டரை நான் வாங்கப் போவதில்லை” என்றார். “ட்விட்டரை நீ வாங்கித்தான் ஆக வேண்டும்” என ட்விட்டர் நிர்வாகம் முரண்டு பிடிக்க, “அதெல்லாம் முடியாது” என்று மஸ்க் பதிலளிக்க, “மஸ்க்கை வாங்கச் செய்யவும்” என்று நீதிமன்றம் நாடியது ட்விட்டர்.நீதிமன்றத்தில் மஸ்க், “ட்விட்டர் வெளிப்படைத் தன்மையான நிறுவனமில்லை. நிறைய மறைக்கிறார்கள். இந்தியா உட்பட பல நாடுகளில் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது ட்விட்டர். இது நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதோடு, பீட்டர் ஜாட்கோ ட்விட்டரின் பலஹீனங்களை (weakness) எக்ஸ்போஸ் செய்த அறிக்கைகள் அச்சுறுத்தும் விதமாக உள்ளன. இப்பேற்பட்ட (டுபாக்கூர்) ட்விட்டரை வாங்குவது எனக்கு நல்ல முதலீடில்லை” என தன் தரப்பை சமர்ப்பித்திருக்கிறார்.ட்விட்டரை நீதிமன்றத்தில் எக்ஸ்போஸ் செய்திருக்கிறார் மஸ்க்.

இதில் ‘இந்தியாவுடனான மோதல் போக்கு’ பற்றியும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.விவரம் வெளியானதும் அமெரிக்க செனட் பீட்டரை அழைத்து விசாரணை நடத்தியது நேற்று. அதில் செனட்டின் கேள்விகளுக்கு பதிலளித்தார் பீட்டர். கிட்டத்தட்ட 4,000 ட்விட்டர் ஊழியர்களுக்கு முழு access உள்ளது – பயனாளிகளின் விவரங்களை அறிய. அவர்களால் பயனாளிகளின் தொலைபேசி எண் உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும், யாரையும் ப்ளாக் செய்ய முடியும், கணக்கை நீக்கவும் முடியும்!எல்லாவற்றுக்கும் மேலாக, சீன உளவு நிறுவன நபர்கள் ட்விட்டரில் பணியிலமர்த்தப் பட்ட விவரத்தையும் பகிர்ந்திருக்கிறார் பீட்டர். அதை ரீட்விட் செய்திருக்கும் இந்திய Information Technology அமைச்சர் சந்திரசேகர், “இது மிகவும் கவலைக்குறிய விஷயம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.இதே பீட்டர், “இந்திய அரசு தன் ‘ஆட்களை’ ட்விட்டரில் சேர்க்க சொல்லி வற்புறுத்தி”யதாக ஆரம்பத்தில் செய்திகள் ( https://tinyurl.com/5yzvkc24 ) வந்தன.

அது பற்றி காங்கிரஸ் – தீயசக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, இந்திய ஆர்.எஸ்.பி ஊடகங்களோ, முற்போக்குகளோ பெரிதாக ஊளையிடவில்லை என்பதிலிருந்து – அது யுபிஏ காலத்தில் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க இடமிருக்கிறது. பீட்டர் அறிக்கை பற்றி சஷி தரூர் தலைமையிலான இந்திய பாராளுமன்றக் குழு ட்விட்டர் இண்டியாவை அழைத்து பேசியதில்லை, “பீட்டர் சொல்வதில் உண்மை ஏதுமில்லை. இந்திய அரசு அம்மாதிரி எங்களை ஏதும் கேட்கவில்லை” என்று கூறியிருக்கிறது. ( https://tinyurl.com/yjz36eru ) *** ஜேக் டார்சி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் சிறை செல்லலாம். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மேலும் ‘தணிக்கை’ சட்டங்கள் வரலாம். அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இது பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறார்.

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version