இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது,இந்தியாவில் விற்பனையானது கச்சதீவு ஒன்றுதான்.

இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது, அதே நேரம் அக்கால சோவியத் யூனியன் எல்லா தொழிலையும் தானே நடத்தி வரி வருமானமின்றி நஷ்டபட்டு உடைந்தது போல் நாசமாகவும் முடியா.

துஅரசுக்கு தேவை வரியே அன்றி தொழில் நடத்தும் சிரமம் அல்ல‌ இதனால் எல்லா நாடுகளும் எப்படி தனியார் தொழில்களில் வரி பெறுமோ அப்படி இந்திய அரசும் இந்தியாவில் தனியார்களை ஊக்குவித்து வரி வருமானம் பெற முயற்சிக்கின்றது.

இதில் தவறொன்றும் இருப்பதாக சொல்லமுடியாது, தனியார் மயமே உற்பத்தி முதல் சேவை வரை சரியானது அரசின் வரி வசூலுக்கும் அதுதான் சரிதெளிவாக சொல்லவேண்டும் என்றால் சன்டிவிக்கு ஒரு உரிமம் வழங்கபட்டுள்ளது, இப்படி திமுகவினரின் தொழிலுக்கெல்லாம் உரிமம் வழங்கபட்டிருக்கின்றதுஇவர்கள் என்ன செய்கின்றார்கள்?

மக்களுக்கு கலைச்சேவை, செய்திசேவை செய்கின்றார்கள், அரசுக்கு வரி கட்டுகின்றார்கள்நாளையே இவர்கள் அட்டகாசம் எல்லை மீறினால் லைசென்ஸ் ரத்து செய்யபட சட்டத்தில் இடம் உண்டு.

இதனால் ஊடகதுறையினை சன்டிவிக்கு விற்றுவிட்டார்கள் என்றாகுமா? சொல்லமுடியுமா? இப்படி ஒவ்வொரு தொழிலும் அரச அனுமதியில்தான் உண்டு, அந்த அனுமதி நிரந்தமல்ல அடிக்கடி புதுபிக்கபடவும் வேண்டும்.

இன்னும் தெளிவாக சொல்லலாம் இதோ திமுக ஒரு அரசியல் கட்சியாக தமிழகத்தில் உள்ளது, அது மக்கள் சேவை கட்சியாக தன்னை பதிவு செய்கின்றதுஅதற்காக அவர்களிடம் தமிழகத்தை விற்பனை செய்தாகிவிட்டது என பொருளா? சொல்ல முடியுமா?இங்கு எதுவும் விற்பனை அல்ல, அப்படி முடியவும் முடியாது அரசு தனியார் தொழில் செய்ய வாய்பளிக்கின்றது, அவர்களால் முடியாவிட்டாலோ இல்லை மிகபெரிய சிக்கலை அவர்கள் எற்படுத்தினாலோ அரசு அதை திரும்ப பெறும் அவ்வளவுதான் விஷயம்.

நஷ்டபட்ட விவசாயி தன் நிலத்தை குத்தகைக்குவிடுதல் போன்றதுதான் இது சாலையோரத்தில் நிலமிருக்கும் விவசாயி விவசாயம் நலிந்த நிலையில் சில கட்டங்களை கட்டி வாடகைக்கு விட்டால் வருமானம் வரும் என யோசிக்கும் அதே நிலைதான் இது விற்பனை எனும் வகையில் வரவே வராது எமக்கு தெரிந்து இந்தியாவில் விற்பனையானது கச்சதீவு ஒன்றுதான், அதையும் ஒரு யானைகுட்டிக்கு விற்று ஏமாந்தார் இந்திரா காந்தி அரசு.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version