உபியி்ல் பிஜேபிக்கு வெற்றியா? இல்லை அமோக வெற்றியா? உத்தரபிரதேச தேர்தல் பற்றிய டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் பிஜேபிக்கு மெஜாரிட்டியுடன் கூடிய வெற்றி வாய்ப்பு உறுதியாக தெரிகிறது.வருகின்ற கருத்து கணிப்புகள் அனைத்தும் பிஜேபிக்கு தான் வெற்றி என்று உறுதியாக கூறினாலும் வெற்றி பெறும் தொகுதிகள் விசயத்தில் வேறுபடுகின்றன.
உத்தரபிரதேச தேர்தல் பற்றி அதிலும் பிஜேபிக்கு கிடைக்க இருக்கும் வெற்றி பற்றி கருத்து கணிப்புகள் எப்பொழுதும் சரியாகவே இருந்தது இல்லை.பிஜேபிக்கு வெற்றி கிடைக்கும் என்பார்கள் ஆனால் பிஜேபிக்கு அமோக வெற்றி கிடைத்து விடுகிறது.காரணம் அங்கே இரு முனை போட்டியாக தேர்தல் நடைபெறுவதில்லை.
பிஜேபி,சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ் மற்றும் காங் ங்கிரஸ் என்று நான்கு முனைப் போட்டியாக தேர்தல் நடைபெறுகிறது.இதனால் பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் 3 வழிகளில் பிரிகிறது. இவர்கள் பிரிக்கும்வாக்குகளின் எண்ணிக்கை தான் பிஜேபி வெற்றி பெற இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.இப்போதைக்கு உத்தரபிரதேச தேர்தல் பிஜேபி,சமாஜ்வாடி கூட்டணி இடையே நேரடி போட்டி இருப்பது மாதிரி தோன்றினாலும் தேர்தல் முடிவில் பிஜேபி 300+தொகுதிகளை பெற்று சமாஜ்வாடி கூட்டணியை படுதோல்வி அடைய வைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
இதற்கு காரணம் உத்தரப்பிரதேசத்தில் பிஜேபிக்கு உயர்சாதியினர் மற்றும் ஓபிசிக்களின் ஓட்டுக்கள் ஒருங்கிணைந்த கோர் ஓட்டர்களாக உருவாகி விட்டது.உயர்சாதியினர் ஓபிசி ஓட்டுக்கள் இரண்டுமே பிஜேபியை >40% வாக்குகளை எட்டவைத்து விடும்.உத்தரபிரதேசத்தில் பிராமணர்கள்-12%ராஜ்புத்கள்-7•5% வைசியர்கள்-3•5ஆக மொத்தமாக 23 சதவீதம் உயர் சாதியினர் வாக்குகள் இருக்கிறது..
இதில் 18% -20% வாக்குகள் பிஜேபிக்கு உறுதியாக கிடைக்கும்.உத்தரபிரதேசத்தில் சுமார்40-42% ஓபிசிக்கள் இருக்கிறார்கள். இதில் யாதவர்கள்9% இருக்கிறார்கள். யாதவர்கள் சமாஜ்வாடி கட்சியின் கோர் ஒட்டர்கள். இந்த 9சதவீத யாதவர் ஓட்டுக்களில் சுமார் 8%சமாஜ் வாடிக்கு தான் கிடைக்கும்.ஏனைய ஓபிசிக்களான குர்மிக்கள்-5%ராஜ்பார்-4%நிசாத்-4%லோத்-4%மௌரியாகொரிஸ் & குஷவாலா-8% ஜாட்கள்-2•5 குஜ்ஜார்கள்-1% டெலி&சாகு-3%என்று 31சதவீத ஓபிசிக்களில் சுமார் 20 சதவீதம்ஓபிசிக்கள் பிஜேபிக்கு தான வாக்களிப்ப வர்களாக இருக்கிறார்கள்.இதனால் பிஜேபி மிக சுலபமாக 40 சதவீ த வாக்குகளை எட்டி விடும்.
இவர்களுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள 21%தலித் ஓட்டுக்களில் ஜாடவ் தலித்கள் 13% இரு க்கிறார்கள் .ஜாடவ் தலித்களில் 90% பகு ஜன் சமாஜ் கட்சியின் தீவிரவாமான ஆதரவாளர்கள்.இவர்கள் அல்லாத பாசிமற்றும் தோபி தலித்களின் 8 சதவீத வாக்குகளில் பி ஜேபிக்கு சுமார் 4% சதவீதம் வாக்குகள் உறுதியாக கிடைக்கிறது.இது வரை கிடைத்தும் இருக்கிறது.எனவே பிஜேபிக்கு வருகின்ற உத்திர பிரதேச தேர்தலில் அதிகபட்சமாக 44 சதவீத வாக்குகள் உறுதியாக கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.குறைந்த பட்சமாக 42%வாக்குகள் பிஜேபிக்கு உறுதியாக இருக்கிறது..சமாஜ்வாடி கட்சிக்கு 9 சதவீதம் உள்ள யாதவர்களில் 8% ஓட்டுக்கள் உறுதியாக இருக்கிறது.
இவர்களுடன் 19% சதவீதம் உள்ள முஸ்லிம்களில் சுமார் 16% ஓட்டு க்கள் சமாஜ் வாடிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.எனவே சுமார் 24% ஓட்டு க்கள் சமாஜ்வாடி கட்சிக்கு மட்டுமே உறு தியாக இருக்கிறது.இவற்றுடன் ஒபிசிக்களில் ஜாட்களின் ரா ஷ்டிரிய லோக்தளம் ராஜ்பார்களின் சுகல் தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டி குர்மிக்களின் அப்னாதளம் (கிருஷ்ணா பட்டேல் பிரி வு)மௌரியாரிக்களின் மஹன்தள் இவர்களுடன் தலித்களான லுனியாக்களின் ஜன்வாடி பார்ட்டி என்று பல சாதிக்கட்சிகளின் துணையுடன் ஒரு 10%வாக்குகளை பெற்று ஒட்டுமொத்தமாக 34 சதவீத வாக்குகளை சமாஜ்வாடி கட்சி பெற முடி யும்.
இதில் முக்கியமான விசயம் என்னவெனில் சமாஜ்வாடி கட்சியுடன் ஜாட்கள் குர்மிக்கள் ராஜ்பார்கள் மௌரியாக்களின் தலைவர்கள் கூட்டணி வைத்து இருந்தாலும் அந்த சாதி மக்கள் யாதவர்களின் அரசியல் அதிகாரத்திற்கு என்றுமே எதிரானவர்கள்.எனவே ஜாட்கள் குர்மிக்கள்,ராஜ்பார்கள் மௌரியாக்களின் ஓட்டுக்க ள் சமாஜ்வாடி கட்சியை விட பிஜேபிக்குதான் அதிகமாக கிடைக்கும்.இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் பகுஜன் சமாஜ் கட்சி வலுவாக இருக்க முக்கிய காரணமாக இருக்கும் ஜாடவ் தலித்களும் பகுஜன் சமாஜ் கட்சியின் வீழ்ச்சியினால் திசை மாற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இவர்களும் யாதவ எதிர்ப்பு மன நிலையில் உள்ளவர்கள் என்பதால் அவர்களின் ஓட்டுக்களும் பிஜேபிக்கு இந்த முறை அதிகமாக கிடைக்கும்.எனவே பிஜேபிக்கு 42-44% வாக்குகள் சமாஜ்வாடி கூட்டணிக்கு 32-34 வாக்குகள்பகுஜன் சமாஜ் 12-14% காங்கிரஸ் 5-7% என்கிற அளவிலேயே கட்சிகள் பெற இருக்கும் வாக்கு சதவீதம் இருக்கும். இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் தேர்தல் அன்று வாக்குப்பதிவின் பொழுது பகுஜன் சமாஜ் கட்சி தேறாது என்று அதனுடைய ஆதரவாளர்களில் சுமார் 2% பேர் பிஜேபிக்கு வாக்களிக்க கூடும் இதனால் பிஜேபிக்கு 46% வாக்குகள் கிடைக்கவும் முடியும்.
அதே மாதிரி காங்கிரஸ் தேறாது என்று நினைத்து அதன் ஆதரவாளர்களில் சுமார் 2% சமாஜ் வாடிக்கு வாக்களிக்க கூடும்.எனவே சமாஜ்வாடி கூட்டணியின் வாக்கு சதவீதம் 36 சதவீதத்தை ஒரு பொழுதும் தாண்ட முடியாது.ஆக எப்படி இருந்தாலும் பிஜேபிக்கும் சமாஜ்வாடிக்கும் இடையே 10% வாக்குகள் வித்தியாசம் உறுதியாக இருக்கும் இந்த 10% வாக்கு வித்தியாசம் பிஜேபிக்கு மிக அதிக அளவில் தொகுதிகளை அள்ளிக்கொடுத்தாலும் ஆச்சரியம் அல்ல.
ஏனென்றால் உத்தரபிரதேசத்தில் நான்குமுனைப் போட்டி உறுதியாகி விட்டதால் பிஜேபி எதிர்ப்பு வாக்குகளான முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகளை சமாஜ் வாடி,பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிக ள் பிரித்து கொள்வதால் பிஜேபி VS சமாஜ் வாடி இடையே கடுமையான போட்டி இருக்கும் தொகுதிகளில் கூட பிஜேபி மிக சுலபமாக வெற்றி பெற்று விடும்.
எனவே கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணிக்கு கிடைத்த 325 தொகுதிகள் இந்த முறையும் கிடைக்கலாம்யோகி அடிக்கடி 350+ தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். பிஜேபிக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே 10 % வாக்குவித்தியாசம் இருந்தால் பிஜேபிக்கு யோகியின் கணிப்புப்படி 350+ தொகுதிகள் உறுதியாக கிடைக்கலாம்.எனவே உத்தரபிரதேச தேர்தலில் பிஜேபிக்கு வெற்றி கிடைப்பது உறுதியென்றாலும் அமோக வெற்றி கிடைத்து மீண்டும் உத்தர பிரதேச தேர்தல் வரலாற்றில் ஒருவரலாற்று சாதனையை படைத்தாலும் ஆச்சரியம் அல்ல.
கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.