தமிழ்நாடு 2011 தேர்தலும் – உத்தரபிரதேசம் 2022 தேர்தலும்

தமிழ்நாடு 2011 தேர்தலும் – உத்தரபிரதேசம் தேர்தலும் 2022 சிறப்பு கட்டுரை – விஅஜய்குமார் அருணகிரி – உத்தரபிரதேச தேர்தல் பற்றி வெளியிட ப்படும் கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜக வெற்றி பெறும் என்று கூறுகின்றன.பத்து வருடத்திற்கு முன் உத்தரபிரதேசத்தில் பாஜக மூன்றாவது இட த்தில் இருந்தது,ஆனால் தற்போது முதலிடத்தில் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது.2014 லோக்சபா தேர்தல் 43% 2017 சட்டமன்றதேர்தல் 40% 2019 லோக்சபா தேர்தல் 50% என்று தொடர்ந்து பிஜேபி 40% வாக்குகளை தக்க வைத்துக்கொண்டு இருக்கிற து.இதுஇனி மேலும் தொடர்ந்து கொண் டே இருக்குமே தவிர பாஜக வாக்கு சதவீதம் இறங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று உறுதியாக கூறலாம்.

ஒரு வேளை பகுஜன் சமாஜ் கட்சி மீண்டு ம் உயிர்த்தெழுந்தால் மட்டுமே பிஜேபி க்கு உத்தர பிரதேசத்தில் இறங்கு முகம்ஆரம்பிக்கும்.அது வரை பிஜேபியை அசைக்க எந்த கூட்டணியாலும் முடியாது,பிஜேபிக்கு எப்படி இந்த வலிமை வந்தது? மோடியா? இல்லை யோகியா? இல்லை பிஜேபி அரசின் சாதனைகளா? என்று கேட்டால் இவற்றையெல்லாம் விட முக்கியமான காரணமாக இருப்பது உத்தரபிர தேசத்தில் உள்ள சாதிகள் தான்.

உத்தர பிரதேசத்தில் உள்ள சாதிகளை பற்றி பார்க்கும் முன் அதற்கு முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற 2011 சட்டமன்ற தேர்தலை பற்றி கொஞ்சம் பார்ப்போம். 2011தமிழக சட்டமன்ற தேர்தல் நடை பெ ற்ற பொழுது திமுக ஆட்சியில் இருந்தது.திமுக ஆட்சியில் இருந்த 2006 – 2011 வரை தமிழகத்தில் நடைபெற்ற எந்த ஒரு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற வில்லை.

அதிமுக இனி அவ்வளவு தான் என்று அதிமுக தலைவர்கள் பலர் திமுகவை நோக்கி ஓடினார்கள்.இனி திமுக தான் ஆட்சி யில் தொடர்ந்து இருக்கும் கருணாநிதி தான் நிரந்தர முதல்வர் என்று திமுகவின கூவிக்கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் வந்தது.எனக்கு பல காலமாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது.அதாவது கருணாநிதியை அரசியல் சாணக்கியர் மிகப்பெரிய ராஜ தந்திரி என்று பலர் அள்ளிவிடு வது உண்மையா? மிகைப்படுத்தலா? எ ன்று ஒரு குழப்பம் இருந்து கொண்டே வந்தது. ஏனென்றால் எனக்கு விவரம் தெரிந்து நடைபெற்ற பல தேர்தலிலும் கருணாநிதி ஜெயலலிதாவிடம் தோல்வி அடைந்து இருப்பதால் ஒரு நடிகையாக இருந்த ஜெயலலிதாவிடமே கருணாநிதியின் அரசியல் சாணக்கியம் வேலைக்கு ஆகவில்லை என்கிற பொழுது ராஜாஜி காமராஜர் காலத்தில் இவர் என்ன செய்து இருப்பார்

கருணாநிதியை விட ஜெயலலிதா தான் மிக சிறந்த அரசியல் சாணக்கியர் என்பதை 2011 சட்டமன்ற தேர்தலில் நிரூபித்து விட்டார்.தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமிழக மண்ணில் உள்ளசாதி பாகுபாடுகளை உணரவில்லை என்றால் அவர் எப்படி அரசியல் சாணக்கியராக இருந்து இருக்க முடியும்?தமிழகத்தில் பெரியார் சாதியை ஒழித்தார் என்று கூறிக்கொண்டு சாதி அரசியலை செய்து கொண்டு இருக்கும் அரசியல் கட்சிகள் இரண்டு தான்.ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. இன்னொன்று விடுத லை சிறுத்தைகள் கட்சி. இந்த இரண்டுகட்சிகளும் தான் அவர்கள் இனம் சார்ந்த மக்களிடையே செல்வாக்கு பெற்ற வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் கட்சிகள்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் இரண்டுமே வட மாவட்டங்களில் வலுவாக இருக்க காரணம் வன்னியர் தலித் சமூகங்களிடையே காலம் காலமாக இருந்து வருகின்ற மோதல் தான் என்று நாம் அனைவரும் அறிவோம்.வன்னியர் VS தலித் சாதிப்பகை தான் பாட்டாளி மக்கள் கட்சியையும் விடுதலை சிறுத்தைகளையும் வளர வைத்தது என்பதை அரசியல் அறிந்த அனைவரும் ஏற்று கொள்வார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணி என்றால் விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்க வேண்டும் இது எழுதப்படாத விதி இதை கருணாநிதி மாற்றி வட தமிழகத்தை மொத்தமாக கைப்பற்ற நினைத்து ராமதாஸ் திருமாவளவன் இரண்டு பேரையும் திமுக கூட்டணிக்கு கொண்டு வந்தார். கருணாநிதியின் கணக்கு சரி தான்.

ஏனென்றால் வட மாவட்டங்களில் உள்ள100 தொகுதிகளையும் வட மாவட்டங்களில் பெருமளவில் உள்ள வன்னியர் சுமார் 20% தலித் 12% என்று சுமார் 32% வாக்கு களில் பெரும்பான்மையான வாக்குகளும் திமுகவின் பாரம்பரிய வாக்குகளும் இணைந்து விட்டால் வட மாவட்டங்களில் உள்ள சுமார் 100 தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என்று கருணாநிதி கணக்கு போட்டது சரி தான்.

ஆனால் காலம் காலமாக வட மாவட்டங்களில் மோதிக் கொண்டு இருக்கும் வன்னியர்களும் தலித்களும் ஒன்று சேர்ந்து தனக்கு ஓட்டுப்போடுவார்கள் என்று கருதி கருணாநிதி ராமதாசையும் திருமாவளவனையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வந்த பொழுதே அவர் ஜெயலலிதாவை விட அரசியல் ஞானம் உடையவர்அல்ல என்று அனைவரும் அறிந்து கொண்டார்கள்.

காலம் காலமாக மோதிக் கொண்டு இருக்கும் இரு சாதி மக்கள் தங்கள் தலைவர்கள் பகைமை மறந்து அரசியல் சுய நலத்திற்காக கூட்டணி வைத்துக் கொண்டா லும் தாங்கள் பகைமை மறந்து ஒன்றிணைய மாட்டோம் என்று தமிழக அரசிய ல்வாதிகளுக்கு வன்னியர்களும் தலித்களும் புரிய வைத்தார்கள்.
2011 ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாமக விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம்லீக். என்று பலமான கட்சிகள் இருந்தும் திமுக கூட்டணி படு தோல்வி அடைய விடுதலை சிறுத்தைகள் பாமக இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தது தான் முக்கியமான காரணம்.

இப்பொழுது உத்தர பிரதேச தேர்தலுக்குள் நுழைவோம்.தமிழகத்தில் வன்னியர்VS தலித் மோதல் அரசியல் தான் இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் அனைத்து சாதிகளுக்கும் மோதல் இருக்கிறது.குறிப்பாக யாதவர்களை
ஏனைய சாதியினருக்கு பிடிக்காமல் போய் விட்டது. இதற்கு காரணம் முலாயம் சிங் யாதவ்.முலாயம் சிங் யாதவ் ஆட்சியில் யாதவர்கள் ஆடிய ஆட்டம் மற்ற சாதியினருக்கு யாதவர்கள் மீது ஒரு வெறுப்பை வர வைத்து அதுவே யாதவ எதிர்ப்பு அரசியலாகமற்ற சாதியினரை ஒன்றிணைய வைத்தது.

உத்தரபிரதேசத்தில் யாதவர்களுக்கும்பிராமணர்களுக்கும் ஆகாது யாதவர்களு க்கும் ராஜ்புத்களுக்கும் ஆகாது யாதவர்க ளுக்கும் ஆகாது.வைசியர்களுக்கும் ஆ காது உத்தர பிரதேசத்தில் பிராமணர் ரா ஜ்புத் வைசியர் ஆகியஉயர் சாதியினர் சுமார் 21 % இருக்கிறார்கள்.இந்த 21% உயர் சாதியினரின் வாக்குகள் சமாஜ்வாடிக்கு 1% கூட கிடைக்காதுஆனால் பிஜேபிக்கு சுமார் 20% வாக்குக ள் வரை கிடைக்கும். உத்தர பிரதேசத்தில் உள்ள சுமார் 21% தலித் மக்களில் 13% ஜாடவ் தலித்கள்எப்பொழுதும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தான் ஓட்டு போடுவார்கள். ஏனைய சாமர் பாசி தோல் இன தலித்களில் 5%பிஜேபிக்கு உறுதியாக கிடைக்கும் 2% தலித்கள் காங்கிரஸ்க்கு ஓட்டு போடுவார்கள். 1% தலித் வாக்குகள் கூட சமாஜ்வாடி கட்சிக்கு கிடைக்காது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சுமார் 40% ஓபிசிக்களில் சுமார் 10% உள்ள யாதவர்க ளை ஏனைய ஓபிசிக்களான குர்மிக்கள் ஜாட்கள் லோத்கள் ராஜ்பார்கள் நிசாத்க ள் மௌரியாக்கள் குஜ்ஜார்கள் குஷாவா க்கள் என்று எந்த ஒரு ஓபிசி சாதிக்கும்பிடிக்காது..யாதவர் அல்லாத ஓபிசிக்கள்சுமார் 30% இருக்கிறார்கள். 30%யாதவர் அல்லாத ஓபிசிக்களில் பிஜேபிக்கு சுமார் 20% வா க்குகள் உறுதியாக கிடைக்கும்.இதனால் தான் பிஜேபி இப்பொழுது 40% வாக்குகளை தொடர்ந்து தக்க வைத்து கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சியும் ஒபிசி சாதித்தலைவர்கள் நடத்தி வரும் ஜாட்களின் ராஷ்டிரிய லோக்தளம்,குர்மி க்களின் அப்னாதளம் (கிருஷ்ணாபட்டே ல் பிரிவு)மௌரியாக்களின் மஹன் தள ம்,ராஜ்பார்களின் சுகல்தேவ் பாரதிய சமா ஜ் பார்ட்டி நோனியாக்களின் ஜன் அதிகா ர் பார்ட்டி
( சோசலிஸ்ட்)கோண்ட்வானாக்களின் கோண்ட்வானா கனதந்திரி பார்ட்டி என்று பல ஓபிசி இனத்தை சார்ந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறது இந்த சாதிகளின் வாக்கு சதவீதம் சுமார் 15% இருக்கும். இந்த வாக்குகள் அப்படியே சமாஜ்வாடி கட்சிக்கு கிடைத்தால் யாதவர் 10% முஸ்லிம் 20% ஓபிசி 15%என்று சுமார் 45% வாக்குகளில் சுமார் 40% வாக்குகளை பெற்றாலே சமாஜ்வாடி
கட்சி ஆட்சிக்கு வந்து விடும்.

ஆனால் சமாஜ்வாடி கட்சிக்கு அது கூட்டணி வைத்து இருக்கும் சாதி கட்சிகளின்மூலமாக சுமார் 3% வாக்குகள் கிடைத்தாலே பெரிய விசயம். ஏனென்றால் சமாஜ்வாடி கட்சியுடன் இந்த ஓபிசி சாதி கட்சிதலைவர்கள் கூட்டணி வைத்தாலும் நீண்ட காலமாக யாதவர் எதிர்ப்பு மன நிலையில் இருக்கும் அந்த சாதி மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டு போடவே மாட்டார்கள்இதற்கு தான் 2011 தமிழக தேர்தலை உதாரணமாக கூறுகிறேன். இப்பொழுதுசமாஜ்வாடி கட்சிக்கு கிடைக்கும் பில்டப் மாதிரியே 2011 ல் திமுகவுக்கு கொடுத்தார்கள் வட மாவட்டங்களில் உள்ள சுமார் 30% வன்னியர் தலித் ஓட்டுக்களை பாமக விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மூலமாக அள்ளி விடலாம் என்று கனவு கண்டார்.

ஆனால் தேர்தல் முடிவில் கருணாநிதிக்கு பெரிய சட்டி தான் கிடைத்தது அதே சட்டி தான் அகிலேஷ் யாதவுக்கும் இந்தஉத்தர பிரதேச தேர்தலில் கிடைக்கும் என்று உறுதியாக கூறலாம்.ஏனென்றால் உத்தர பிரதேசத்தில் யாதவர் முஸ்லிம்களை தவிர வேறு யாரும் சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

ஆனால் பிஜேபிக்கு முஸ்லிமகளை தவிரஅனைவரும் ஓட்டு போடுவார்கள். இந்ததேர்தலில் பிஜேபி 40-45% வாக்குகளை நிச்சயமாக பெறும் சமாஜ்வாடி கட்சி 30% வாக்குகளை தாண்டவே முடியாது. ஆக 10-15%வாக்குகள் வித்தியாசம் என்றால் மீண்டும் பிஜேபி 325+ தொகுதிகளில் கண்டிப்பாக வெல்லும்.

விஜயகுமார் அருணகிரி- வலது சிந்தனையாளர் எழுத்தாளர்

Exit mobile version