வசந்தகுமார் மறைவுக்கு பாரதப் பிரதமர் மோடி,பொன்னார்,Hராஜா,தமிழிசை, மற்றும் தலைவர்கள் அஞ்சலி.

வசந்தகுமார் மறைவுக்கு பாரதப் பிரதமர் மோடி, தமிழிசை, மற்றும் தலைவர்கள் அஞ்சலி.கன்னியாகுமாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் சற்று முன் காலமானார். 

உழைப்பால் உயர்ந்தவர், வெற்றிகரமான தொழிலதிபர் வசந்தகுமார் அவர்கள் மறைவுக்கு தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் முக்கிய ஒருவராக உயர்ந்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உழைத்த திரு. வசந்தகுமார் அவர்களின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் இழப்பாகும்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று பணிபுரிந்த நிலையில் அவருடைய மரணம் பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

காமராஜரின் தொண்டராக, தொழிலதிபராக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட திரு. ஹெச். வசந்த குமார் அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்-பொன். இராதாகிருஷ்ணன்.

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் என்னுடைய நீண்ட நாள் நண்பருமான திரு.H.வசந்தகுமார் அவர்கள் மறைந்துவிட்டார் என்பது வருத்தமளிக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று H Raja அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உருக்கமான இரங்கல் செய்தியில்..”சித்தப்பா !நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது…என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்…அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்… 

இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு,தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்.

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது..

வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணி கொடுத்த தருமம் கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது..

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் …கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது…

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்…

அரசியல் பயணம் வேறு வேறாக இருந்தாலும்   ரத்த சொந்தம் அல்லவா; மிக உருக்கமான இரங்கல் செய்தி.அனுதினமும் தனது வசந்த் தொலைக்காட்சியில் காலையும் மாலையும் தவறாமல் சஷ்டி கவசம் ஒளிபரப்பும் மிக சிறந்த ஆன்மீகவாதியான வசந்தகுமார் அவர்களிறன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யவோம் .

Exit mobile version