தேசப்பற்று என்றால் என்ன? சூர்யாவவை நிற்க வைத்து பாடம் எடுத்த விஜய் தேவரகொண்டா!! காட்டு தீயாக பரவிய வீடியோ! என்ன அடி!

vijay devarakonda surya

vijay devarakonda surya

தமிழகத்தை பொறுத்தவரையில் போராளிகள் போல் காட்டிக்கொள்ளும் சில சினிமா நடிகர்கள், இந்துக்கள் குறித்து மட்டும் இனம், மொழி, ஜாதி பற்றியெல்லாம் பேசி, அரசுகளை விமர்சிப்பது வழக்கம். அதிலும், இவர்களிடம் சிக்குவது அதிமுக, பாஜ அரசுகள் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் இவர்கள் எதற்கும் கருத்து சொல்லாமல் காணாமல் போய்விடுவர்.

குறிப்பாக தமிழக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சித்தார்த், விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், , கமல் ஆகியோர் கடந்த காலங்களில் ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை, இனவாதம், இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்கள். சபரிமலை பிரச்னை போன்ற நேரங்களில் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசினார்கள். அப்பட்டமாக திமுகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்கள்.

இந்த நிலையில் ஹைதராபாதில் நடைபெற்ற சூர்யாவின் ரெட்ரோ முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகிறது. அதுவும் சூர்யா முன்னிலையில் அவர் பேசிய பேச்சு நடிகர் சூர்யாவுக்கு பாடம் எடுத்தது போன்று அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறி இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்று வெளியாக இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நாசர், ஜோஜூ என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை புரோமோட் செய்ய நேற்று ஹைதராபாத்திற்கு சென்று இருந்தார்.

அங்கு நடந்த விழாவில் பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா பட்டும் படாமல் பேசினார் அதில் ‘பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இந்த இடத்தில் மரியாதையையும், பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த சம்பவத்தைக் கேட்டு நான் அப்படியே உடைந்து போய் விட்டேன். பயங்கரவாதம் எந்த வகையில் நடந்தாலும் அது நமக்கு இழப்பை கொண்டு வந்து சேர்க்கும்.என பேசினார்

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு பேசினார் ” சூர்யா அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்களில் ஒருவர். அவருடைய நடிப்பை பார்த்து நான் மிரண்டு போயிருக்கிறேன். அவரைப் போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய் ஆசை .
அவர் நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். ரெட்ரோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என்று பேசிய விஜய் தேவரகொண்டா தொடர்ந்து

பஹல்காம் தாக்குதல் குறித்து பேசினார். ” இந்த தீவிரவாதிகள் மூளை இல்லாதவர்கள். இவர்களுக்கு படிப்பு சொல்லிக் குடுக்க வேண்டும். பாகிஸ்தானில் அடிப்படை கட்டமைப்புகள் கூட இல்லை. தங்கள் நாட்டிற்குள் நடக்கும் பிரச்சனைகளையே அவர்களால் சரிசெய்ய முடியவில்லை ஆனால் காஷ்மீருக்காக இந்தியாவை தாக்குகிறார்கள். காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது.

காஷ்மீர் மக்கள் இந்தியாவில் முக்கிய அங்கத்தினர். இந்தியா பாகிஸ்தானுடன் போரிட தேவையில்லை. பாகிஸ்தானியர்கள் அவர்களின் புரட்சி அமைப்பு மற்றும் அரசால் சீக்கிரம் சலித்துவிடுவார்கள். ” என விஜய் தேவரகொண்டா பேசியுள்ள கருத்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . தேச பக்தி உள்ள நடிகராக பேசியுள்ளார் என ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகிறீர்கள் வருகிறார்கள். குறிப்பாக நடிகர் சூர்யாவை வைத்து விஜய் தேவரகொண்டா பாடம் எடுத்தது வேற லெவல் சம்பவம்.

Exit mobile version