தீவிரவாதிகளை பழிக்கு பழி வாங்குவோம் அமெரிக்க அதிபர் பைடன் ! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்கரம் எதுக்கு!

Afghanistan Kabul

Afghanistan Kabul

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின், அந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து இருந்து மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு ரஷ்ய ராணுவம் செல்லாது என அறிவித்துவிட்டார் புடீன், 1980 களில் சோவியத் ஆப்கானில் செய்த தவறுகளை இனி செய்யாது என அறிவித்த அவர் அடுத்து சொன்னதுதான் ஹைலைட்

“ஆப்கானுக்குள் அவர்கள் என்னமும் செய்யட்டும் அதை மீறி எங்கள் பாதுகாப்பில் உள்ள முன்னாள் சோவியத் நாடுகளிலோ வாலாட்டினால் அவ்வளவுதான். மேலும் உலக அமைதிக்கோ தாலிபன் மிரட்டல்விட்டால் நடப்பதே வேறு” என கூறிவிட்டது.

இந்தியா இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றது, அதாவது இந்திய நிலைப்பாடும் இதுதான் அவர்கள் நாட்டுக்குள் எதையும் செய்யட்டும், எல்லை மீறினால் விளைவு மோசமாக இருக்கும் என்கின்றது

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள விமான நிலையத்தின் ‘அபய் கேட்’ என்ற வாயில் மற்றும் அருகே உள்ள ‘பாரோன்’ என்ற ஓட்டல் ஆகிய இடங்களில் தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இரண்டு பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய சில பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதில் அமெரிக்க வீரர்கள் 13 க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதும் இனி அமெரிக்கர்களை மீட்பது சிரமாமனது என்பதும் அமெரிக்க அதிபர் பைடனுக்கு பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது

இன்று இஸ்ரேல் பிரதமர் நெப்தலியுடன் நடக்கவிருந்த சந்திப்பை தள்ளி போட்டுவிட்டு அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருகின்றார் பைடன்

இது குறித்து அமெரிக்க அதிபர் கூறுகையில் இந்த தாக்குதலை மறக்க மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அவர்கள் எங்கிருந்தாலும் தேடி வந்து வேட்டையாடுவோம். பழிக்கு பழி வாங்குவோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., பயங்கரவாத தலைவர்கள், அவர்களின் இருப்பிடங்கள், சொத்துக்களை கண்டறிந்து அழிக்க, அமெரிக்க கமாண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் அவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும். அதிலிருந்து அவர்கள் மீளவே முடியாது. ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கும். இம்மாதம், 31க்குள் அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்படும்.

ஆனால் ஆப்கானிஸ்தான் இந்த நிலைமைக்கு காரணம் அமெரிக்க தான் அதுவும் சீன சப்போட்டார் பைடன் வந்த பிறகுதான் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. என அமெரிக்கர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்கரம் எதற்கு!

.

Exit mobile version