மேற்கு வங்கத்தில் மம்தாவிற்கு அடுத்த ஆப்பு வைக்கும் அமித்ஷா..

அதிகாரியை அடுத்து வரும் பானர்ஜி….

படத்தில் இருப்பவரை பார்த்தவுடன் 1983ல் உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றிய கபில் தேவ் நினைவு க்கு வருகிறார் அல்லவா.இவரும் ஒரு
விளையாட்டு வீரர் தான் பெயர் பிரசுன்பானர்ஜி என்பதாகும்.

மிட்னாப்பூர் மாவட்டங்களில் கொடி கட்டி பறக்கும் சுவேந்து அதிகாரியை பிஜேபி க்கு கொண்டு வந்த பிறகு அடுத்து ஹௌரா மாவட்டத்தில் செல்வாக்குடன் இருக்கும் பானர்ஜிகளை வளைக்க ஆரம்பித்து இருக்கிறது பிஜேபி.

அமித்ஷா அடுத்த மாதம் 12 ம் தேதி மறுபடியும் மேற்கு வங்காளம் செல்ல இருக்கிறார்.

அப்பொழுது பல திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் பிஜேபிக்கு தாவ இருக்கிறார்கள் என்று மேற்கு வங்காள செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை உறுதி செய்வது போல நேற்று மம்தா பானர்ஜி நடத்திய அமைச்சரவை கூட்டத்தில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.

சுற்றுலா துறை அமைச்சர் கௌ தம் தேப் வடக்கு பெங்கால் வளர்ச்சி து றை அமைச்சர் ரவீந்திர நாத் கோஷ் மீன் வளர்ச்சி துறை அமைச்சர் சந்திரகாந்த் சின்ஹா அடுத்து இன்னொரு அமைச்சர் ராஜீப் பானர்ஜி.

இதில் ராஜீப் பானர்ஜி பிஜேபியில் இ ணைய இருக்கிகிறார் என்கிற செய்திகள் ஏற்கனவே வந்தது தான்.

ஹௌரா மாவட்ட அமைச்சராக இருக்கும் ராஜீப் பான ர்ஜி வருகின்ற 12 ம் தேதி ஹௌராவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் அமித்ஷா முன்னிலையில் பிஜேபியில் இ
ணைவார் என்று கூறப்படுகிறது..

அவரோடு ஹௌரா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் பெருந்தலைவர்களும் பிஜேபியில் இணைவார்கள் என்று தெரிகிறது.

இவர்களில் ஒருவராக ஹௌரா லோக்சபா எம்பியான பிரசுன் பானர்ஜியும் இருப்பார் என்று சில செய்திகள் கூறுகின்றன

பிரசுன் பானர்ஜி ஒரு பாரம்பரிய அரசிய ல்வாதி அல்ல விளையாட்டு வீரர். கால்
பந்து விளையாட்டு வீரர். கொல்கத்தா வில் மக்களிடம் நன்கு அறியப்பட்ட முகம் அதோடு பிஜேபி வீக்காக இருக்கும் ஹௌரா மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு படைத்தவர்.

கொல்கத்தா தான் இந்தியாவின் புட்பால் கிரவுண்ட் என்று கூறலாம். பல நூறு புட்பால் கிளப்கள் இருக்கின்றன. இதில் கிழக்கு ரயில்வே புட்பால் கிளப் ஆர்யன்
புட்பால் கிளப் மோகன் பகான் அத்லெடி க்கிளப் என்று 100 வருடங்களை கடந்தும் சில புட்பால் கிளப்கள் இன்றும் இய ங்கி கொண்டு இருக்கிறது.

மோகன் பகான் கால்பந்து டீமை பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா.. ஒரு கால
த்தில் மேற்கு வங்காளத்திற்கு அடையா ளம் அளித்ததே இந்த மோகன் பகான் புட்
பால் டீம் தான்.இப்பொழுதும் இந்தியாவி ன் மிக சிறந்த புட்பால் டீம் மோகன் பகான் தான்.

இதில் மோகன் பகான் புட்பால் டீம் தான் டாப் என்று கூறலாம். இந்தியாவில் புட்பால் விளையாடும் வீரர்களுக்கு ஒரேகனவு மோகன் பகான் டீமில் விளையாடவேண்டும் என்பதே..

நம்ம சௌரவ் கங்குலி இருக்கிறார் அல்லவா. அவரும் கிரிக்கெட் மட்டையை தூக்கி போட்ட பிறகு இந்த மோகன் பகான் டீமின் பங்குகளை வாங்கி அதன் முதலாளிகளில் ஒருவரா கியதில் இருந்தே மோகன் பகான் டீமின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

இந்த மோகன் பகான் புட்பால் டீமின் சிறந்த வீரராக இருந்தவர் பிரசுன் பானர்ஜி.


இந்தியாவில் இருந்து ஆசிய புட்பால் டீமுக்காக தேர்வாகிய இருவரில் இவரும் ஒருவர். புட்பாலில் உலகின் சாம்பியன் டீமாக இருக்கும் பிரேசில் டீமுக்கு எதிரா க விளையாடிய இந்திய வீரர் பிரசுன் பானர்ஜி தான்.

பிரசுன் பானர்ஜியின் அண்ணன் பிரதீப்குமார் பானர்ஜியை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.. பிகே பானர்ஜி என்று அழைக்கப்படும் பிரதீப் குமார் பானர்ஜி இந்திய புட்பால் அணியின் கேப்டனாகவும் கோச்சாகவும் இருந்தவர்.

இந்தியாவின் பீலே என்று அழைக்கப்படு ம் பிகே பானர்ஜிக்கு உலக புட்பால் அமைப்பான பிபா அமைப்பு புட்பால் விளையா ட்டுப்கான உயர்ந்த விருதான பிபா விரு தினை 2004 ல் வழங்கியதில் இருந்தே பிகே பானர்ஜியை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்படி மேற்கு வங்காளத்தில் புகழ் பெ ற்ற புட்பால் பிளேயரான பிரசுன் பானர்ஜியை மம்தா பானர்ஜி 2013 ல் அரசியலு க்கு அழைத்து ஹௌரா லோக்சபா தொகுதி இடைத்தேர்லில் போட்டியிட வைக்க பிரசுன் பானர்ஜியும் அப்பொழுது இருந்து 2013,2014 ,2019 என்று தொடர்ந்து 3
வது முறையாக வெற்றி பெற்று வருகிறா ர்.

சரிப்பா இப்பொழுது எதற்கு பிரசுன் பானர்ஜி கதை என்கிறீர்களா.. பானர்ஜி முகர்ஜி சாட்டர்ஜி கங்குலி என்று மேற்கு வங்காலத்தில் பிராமண சமுதாயம் ஒவ்வொ ரு மாவட்ட அரசியலிலும் பவர்புல்லாக இருக்கிறார்கள்.பிராமணர்கள் வைத்யா கயஸ்தா என்று ஒட்டுமொத்தமாக மேற்கு
வங்காளத்தில் 18 சதவீதம் உயர் சாதியி னர் இருக்கிறார்கள்.

மேற்கு வங்காள அரசியலில் பவர்புல்லா க இருந்த சித்தார்த்த சங்கர் ராய் ஜோதி பாசு பிரணாப் முகர்ஜி புத்ததேவ் பட்டா சார்யா மம்தா பானர்ஜி என்று அனைவரும் பிராமணர்களே.சித்தார்த்த சங்கர் ராய் வைத்யா என்கிற பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்றால் ஜோதிபாசு கயஸ்த என்கிற பிராமண வகுப்பை சேர்ந்தவர்.

ஜோதிபாசில் பாசு என்பதும் புத்த தேவ்பட்டாசார்யாவில் பட்டாசார்யா என்பதும்bகம்யூனிஸ்ட் முதல்வர்களின் சாதி பெருமையின் அடையாளம் தான்.

ஏன் மாணிக் சர்க்காரின் சர்க்கார் பெயர் கூட சாதிப்பெருமையின் அனையாளமே .இவர்கள்
எப்படி சாதி மதமற்ற சமத்துவ அரசிய லை அளிக்க முடியும்?

இப்பொழுது பிஜேபியில் இணைந்து இருக்கிற சுவேந்து அதிகாரியும் கயாஸ்தா வகுப்பினை சேர்ந்தவர் தான்.நம்மு டைய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் இருக்கிறார் அல்லவா.. அவரும் கயாஸ்தா பிராமண வகுப்பை சேர்ந்தவர் தான்.

எனக்கு தெரிந்து மேற்கு வங்காளத்தில்
இருந்த முதல்வர்கள் அனைவருமே உயர்சாதியினர்தான்.

மேற்கு வங்காள அரசியலே அவர்களிடம் தான் இருக்கிறது பிஜேபி ராக்கெட் வேகத்தில் மேற்கு வங்காள த்தில் வளர்ச்சி அடைய இவர்கள் தான் முதல் காரணமாக இருக்கிறார்கள்

நகரங்களில் இவர்கள் தான் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.

மேற்கு வங்காள அரசியலில் பானர்ஜிகளும்,முகர்ஜிகளும்,சாட்டர்ஜிகளும் அதிகாரிகளும் தான் ஆளுமை செலுத்திவருகிறார்கள்.

இதனால் அடுத்து பிஜேபி ஆட்சி தான் என்று உறு தியான நிலையில் அது பானர்ஜியா இல்லை அதிகாரியா என்று தான் தெரியவில்லை.

எனி ஹவ் அமித்ஷாவின் ஹௌரா விசி ட்டில் பிஜேபியில் அடுத்து இணைய இரு ப்பதுஅமைச்சர் ராஜீப் பானர்ஜியா இல்
லை ஹௌரா எம்பி பிரசுன் பானர்ஜியா இல்லை இருவருமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்..

கட்டுரை விஜயகுமார் அருணகிரி

Exit mobile version