சம்பந்தம் இல்லாமல் ஈரோடு ஏன் முடக்கப்பட்டது…

சனிக்கிழமையன்று, மூன்று நபர்களுக்கு கோவிட் -19 தோற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மிகவும் கவலையான அம்சம் மூன்று பேரில் இருவர் தாய்லாந்து நாட்டினர்.

இவ்விரு தாய்லாந்து நாட்டினர் தப்லீ ஜமாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய போதகர்கள் என்பதும், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திற்கு இஸ்லாமிய மதபோதனை செய்ய வந்த ஏழு பேர் குழுவில் இவர்கள் இருந்தனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

சுல்தான்பேட்டை மார்கஸ் மஸ்ஜித் மற்றும் கொல்லம்பாளயம் மஸ்ஜித்-இ-தக்வா ஆகிய மசூதிகளில் போதனை செய்ய வந்தனர்.

மார்ச் 6-ஆம் தேதி தாய் தப்லீக் குழு டெல்லியில் தரையிறங்கி மார்ச் 10 அன்று மில்லினியம் எக்ஸ்பிரஸ் மூலம் ஈரோட்டை அடைந்தனர். அவர்கள் மார்ச் 15 வரை கொல்லம்பாளயம், சுல்தான்பேட்டை உட்பட குறைந்தது மூன்று மசூதிகளில் நேரத்தை கழித்ததாகக் கூறப்படுகிறது.

குழுவில் மீதமுள்ள 6 பேர் ஈரோடு அருகிலுள்ள ஐ.ஆர்.டி பெருந்துரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். மார்ச் 17 அன்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சனிக்கிழமையன்று, சோதனைகள் கோவிட் -19 க்கு சாதகமானவை என்று தெரிவித்தன. தற்போது அந்த தாய்லாந்து நாட்டினர் வந்த இரண்டு மசூதிகளையும் மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தாய் நாட்டினர் பயணம் செய்த பயணிகள் குறித்த தகவல்களைத் தேடி தமிழக சுகாதாரத் துறை ரயில்வேயை அணுகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் ஏன் மத்திய அரசின் பட்டியலில் வந்தது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்,

ஈரோட்டுக்கு கடந்த 11-ம் தேதி -தாய்லாந்தை சேர்ந்த 7 பேர் வந்துள்ளனர். அவர்கள் கொல்லம்பாளையத்தில் தங்கியிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கடந்த 16-ம் தேதி ஊருக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆறு பேர் பற்றிய விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது அதைத் தொடர்ந்து அந்த 7 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

அவர்களுடைய இரத்த மாதிரிகள் ஆய்வு செய்ததில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரும் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்…

Exit mobile version