ஜீ தமிழ் தொலைக்காட்சி நடவடிக்கை எடுக்குமா! கரு.பழனியப்பனால் ஜீ தமிழ் நிர்வாகத்திற்கு நெருக்கடி!

திரு.மா வெங்கடேசன் அவர்களின் பதிவு! முகநூல் பக்கத்திலிருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி குறித்து !

இம்மாதம் 6ம்தேதி டி.அமர்நாத் என்பவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து பேசுவதாக சொன்னார். அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் வெளியிட இருப்பதாகவும் அண்ணல் அம்பேத்கர் பற்றி தமிழா தமிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடல் இருப்பதாகவும் என்னை கலந்துகொள்ள முடியுமா என்று கேட்டார்.

அந்நிகழ்ச்சி விவாதமா? யார் யார் வருகிறார்கள்? என்ன தேதி? என்று கேட்டேன். வரும் 20ம்தேதி சூட்டிங். அது விவாதமல்ல. அண்ணல் அம்பேத்கர் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக இருக்கும். யார் யார் என்று முடிவு செய்யவில்லை. பலரிடம் பேசப் போவதாக சொன்னார். எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று கேட்டேன். 20 நிமிடம் பேசலாம் என்று அவர் சொன்னார். நான் கலந்துகொள்கிறேன் என்று சொன்னேன். மறுபடியும் உங்களை தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னார்.

இன்று அந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டதைப் பார்த்தேன். இந்நிகழ்ச்சியில் திருமாவளவன், திருமுருகன்காந்தி, தமிழன் பிரசன்னா, சுந்தரவள்ளி, நியூஸ் 18லிருந்து வெளியேற்றப்பட்ட செந்தில், ஷாநவாஸ் போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.ஆச்சர்யம் என்னவென்றால் கடைசிவரை இஸ்லாமியரை எதிர்த்து வந்த அண்ணல் அம்பேத்கர் பற்றிய நிகழ்ச்சிக்கு ஒரு இஸ்லாமியரை அழைக்கிறார்கள்.

ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? இந்துத்துவ அம்பேத்கர் போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிற என்னை புறக்கணித்துவிட்டார்கள்.என்னை அழைத்த டி.அமர்நாத் அவர்களை இன்று அழைத்தேன். தொலைபேசியை அவர் எடுக்கவில்லை. பின்பு எனக்குத் தெரிந்தவர்களிடம் என்னை அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏன் அழைக்கவில்லை என்று விசாரித்தேன்.

ம.வெங்கடேசன் வந்தால் அண்ணல் அம்பேத்கரின் இந்துத்துவ முகம், அண்ணல் அம்பேத்கர் எதிர்த்த கிறிஸ்தவம், இஸ்லாம், தேசிய ஒருமைப்பாடு, இந்தி, சமஸ்கிருதம் பற்றிய அம்பேத்கரின் கருத்துக்களை சொல்வார். அது நாம் சொல்ல வருகிற சித்தாந்தத்திற்கு ஒத்துவராது. அதனால் அவரை அழைக்க வேண்டாம் என்று கரு.பழனியப்பன் முதற்கொண்டு கலந்துகொண்டவர்கள் பலருடைய கருத்தாக இருந்ததாம். ம.வெங்கடேசன் கலந்துகொள்வதாக இருந்தால் எங்களில் பலர் வரமாட்டோம் என்று சொன்னார்களாம்.

அதனால் என்னை அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்களாம்.அண்ணல் அம்பேத்கரின் உண்மையான பல கருத்துகள் மக்களிடம் போய் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் இந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்? நான் கரு.பழனியப்பனை சொல்லவில்லை. அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல. சில தொலைக்காட்சிகளைப் போல ஜீ தமிழிலும் திராவிட சித்தாந்தம் கொண்ட களைகள் வளர்ந்திருக்கின்றன. அந்த களைகளையும் நாம் அங்கிருந்து பிடுங்கி எறிய வேண்டும்.

மேலும் கரு பழனியப்பன் திமுகவை சார்ந்தவர் இவர் எப்படி நடுநிலையோடு விவாதம் நடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அதன் தலைமை நிர்வாகத்திற்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் அடிக்கல் நாட்டிய போது . அப்போது அவர் அம்பேத்கர் இல்லையென்றால் நான் பிரதமராக ஆகியிருக்க முடியாது என்றும் டாக்டர் அம்பேத்கர் சாதித்த சாதனைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்

மேலும் டாக்டர் அம்பேத்கர்அவர்களுக்கு பல பெருமைகளை சேர்த்தது பாஜக தான் ஆனால் பாஜகவை எதிர்க்கும் சிந்தனை உடைய இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது நிகழ்ச்சியின் முகத்திரையை காண்பித்துள்ளது.

Exit mobile version