தரமான சம்பவம் செய்த யோகி அரசு ! பைஸாபாத் இனி அயோத்தியா கன்ட் என மாற்றம்.

உதிர்ப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் செய்துவருகின்றது.அதேபோல் தற்பொழுதும் ஒரு தரமான செயலை செய்துள்ளது.

லக்னோ, உத்தர பிரதேசத்தில் உள்ள பைசாபாத் ரயில் நிலையத்தை, ‘அயோத்தி கன்ட்’ என பெயர் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. கடந்த 2018ல் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என மாற்றப்பட்டது. இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி விரைவில் உத்தர பிரதேசத்துக்கு வர உள்ளார். அதற்காக அயோத்தியில் பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், அயோத்தியின் பெயர் பைசாபாத் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த போஸ்டர்களை அகற்ற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் பைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரை அயோத்தி கன்ட் என மாற்றுவதற்கு, யோகி ஆதித்யநாத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படும் என தெரிகிறது.

அயோத்திக்கு ரயிலில் செல்பவர்கள் பைஸாபாத் ரயில் நிலையத்தில் இறங்கி அயோத்தியா செல்ல வேண்டும். இனிமேல் இந்த ரயில் நிலையம் அயோத்தியா கண்டோன் மெண்ட் ரயில் நிலையம் என்று அழைக்கப்படும். இந்த அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

Exit mobile version