ஆந்திர அரசியல் களை கட்ட ஆரம்பித்துஇருக்கிறது. இது வரை ஒய்எஸ்ஆர் காங்கிரசின் மோனோபோலி அரசியலில் பிடிபட்டு இருக்கும் ஆந்திராவை வருகின்றஅக்டோபர் 30 ம் தேதி நடைபெற இருக்கு ம் பேட்வெல் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு மாற்றுமா? என்கிற எதிர்பார்ப்பு இப்பொழுது ஆந்திர அரசியலில் தென்ப ட தொடங்கி விட்டது.
ஏனென்றால் வருகின்ற பேட்வெல் சட்டம ன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் போட்டியிடாமல்ஒதுங்கி இருக்கிறது.இது ஆந்திர அரசியலை கைப்பற்ற காத்திருக்கும் பாஜகவிற்கு
கிடைத்து இருக்கும் நல்ல வாய்ப்பாகும்.
இந்த வாய்ப்பை பாஜக எப்படி பயன்படுத்த போகிறது? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
பேட்வெல் ஒரு ரிசர்வ் தொகுதி. காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்கு செல்வா க்கு உள்ள தொகுதிகளில் பேட்வெல்லும் ஒன்று.
ஆந்திராவில் காங்கிரஸ் காணாமல் போய் விட்ட பிறகு பேட்வெல் இப்பொழுது ஒய்எஸ்ஆர் காங்கிரசின் கோட்டையாக இருக்கிறது.வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பேட்வெல்லில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை
தெலுங்கு தேசத்தினால் வீழ்த்த முடியாது என்கிற உண்மையை உணர்ந்து கொண்ட சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம்பேட்வெல் இடைத்தேர்தலில் போட்டியிடா து என்று கூறி விட்டார்.
இதனால் பாஜக படு குஷியில் இருக்கிறது.வெற்றி பெறுகிறோமோ இல்லை யோ இரண்டாவது இடத்தை பிடித்தால் கூட அதை வைத்தே ஆந்திர அரசியலில் இனி வரும் காலங்களில் துடிப்புடன் செயல் பட முடியும் என்று களம் காண இருக்கிறது.
அனேகமாக பாஜகவின் வேட்பாளராக முன்னாள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ திரிவேதி ஜெயராமுலு போட்டியிடக்கூ டும் என்று தெரிகிறது. ஒரு வேளை திரிவேதி ஜெயராமுலு பாஜகவின் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டால்பாஜக ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால் 2014 ல் ஒய்எஸ்ஆர் கட்சியி ன் சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏவான ஜெயராமுலு 2016 ல் தெலுங்கு தேசத்தி ற்கு சென்று விட்டு 2019 ல் பிஜேபிக்கு வந்து விட்டார்.அதனால் ஜெயராமுலுவு க்கு தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளில் ஆதரவு தளம் இருக்கிறது
இந்த ஆதரவு தளத்துடன் முக்கிய எதிர்க் கட்சியான தெலுங்கு தேசத்தின் மறைமுக ஆதரவும் பிஜேபிக்கு கிடைப்பதால்பாஜக ஒய்எஸ்ஆர் காங்கிரசிற்கு கடுமையான போட்டியை உருவாக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
தொடர் தோல்வியினால் துவண்டு இருக் கும் சந்திர பாபு நாயுடு இனி ஒய்எஸ்ஆர் காங்கிரசை வீழ்த்த பாஜக துணைஇருந்தால் மட்டுமே முடியும் என்கிற நி லைக்கு வந்து விட்டார்.அதனால் பாஜகவை வளர வைக்கும் வகையில் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலில் இருந்துஒதுங்கி விட்டார்.
பாஜக இந்த பேட்வெல் இடைத்தேர்தலி ல் செயல்படும் விதத்தினை வைத்து தான் ஆந்திர அரசியலில் பாஜகவின் எதிர் காலம் தீரமாணிக்கப்படும்.தெலுங்கானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டுபா
க்கா சட்டமன்ற இடைத்தேர்தலில் கர்நாடகவுக்கு கிடைத்த வெற்றி தான் தெலுங்கானாவில் பிஜேபியின் வளர்ச்சியை உறுதி செய்தது.
அது போலவே பேட்வெல்லில் பிஜேபிதீவிரமாக செயல்பட்டு வேலை செய்தால் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ ஒய்எஸ்ஆர் காங்கிரசிற்கு கடுமையான போட்டியை அளித்து குறைந்த வாக்குகள்
வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தி னை பிடித்தாலே போதும். ஆந்திர அரசியல் மெல்ல மெல்ல பாஜகவின் பிடிக்குள் வந்து விடும்.
ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்த வேண்டும் என்றால் பிஜேபியின் துணை இன்றி நடைபெற முடியாது என்கிற உண்மையை உணர்ந்து கொண்ட சந்திரபாபுநாயுடு இனி வருகின்ற காலங்களில் பிஜேபி வளர வழி விட்டு ஒதுங்கி நிற்பார் என்றே தெரிகிறது.