2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்

தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்

உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது

பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகம்

மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு சிறிதளவு அதிகரித்துள்ளது

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்

ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன

சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை.

2021-2022 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்

தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி

சுகாதாரத்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 863 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் நிலுவைக்கடன் 21.83 சதவீதம்

தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடி

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு

கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மேலும் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற திட்டம்

உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு

மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.789 சதவீதமாக உயர்வு

கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு

சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்

சென்னை – கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு

பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு

பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு

தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு

அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி

சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு

திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு

வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு

அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1450 கோடி ஒதுக்கீடு

வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன்

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு

கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு

துணை முதலமைச்சர் ஓபி பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

Exit mobile version