டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திமுக.!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை கடைபிடித்ததால் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என 2010-ம் ஆண்டு மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய். அறிக்கை தாக்கல் செய்தார் இது நாடு முழுவதும் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது.

2011-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கைது செய்யப்பட்டனர். மே மாதம் திமுகவின் கனிமொழியும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக, கனிமொழி இயக்குநராக இருந்த கலைஞர் டிவிக்கு பணம் பெறப்பட்டது என்பது குற்றச்சாட்டு.



‘2ஜி’ ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, ராஜா, கனிமொழி மற்றும், 17 பேரை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிச., 21ல் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, 2018, மார்ச், 19ல், அமலாக்கத் துறை, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மறுநாள், சி.பி.ஐ.,யும் மேல்முறையீடு செய்தது. 

இந்நிலையில், ‘மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.இந்த மனு 10.09.2010 அன்று, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் கூறியதாவது:

இந்த வழக்கை விசாரித்து வரும், நீதிபதி சேதி, நவ., 30ல் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் விசாரணையை முடிக்க வேண்டும். இல்லையெனில், புதிய அமர்வு துவக்கத்தில் இருந்து விசாரிக்க நேரும். எனவே, மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும். என  அவர் கூறினார்.தற்போது அக்டோபர் 5- ம் தேதியில் இருந்து தினமும் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருப்பது திமுக தலைமையை கடும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.  

கட்டுரை :- எழுத்தாளர் குமரி சுந்தர்.

Exit mobile version