நல்லா கேட்டுக்கங்க தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்! அமைச்சர் அறிவிப்பு!

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் nta.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் நீட் தேர்வு நடக்குமா என்ற குழப்பத்தில் இடுந்த மாணவர்களுக்கு ஆனால் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிததார். இதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என கூறி ஆட்சியினை பிடித்த திமுக தற்போது நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருங்கள் என கூறியுள்ளது

இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான மையங்கள் அதிகரிக்கப்படும் என்று ஏற்கனவே தேசிய தேர்வு மூலமே தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக மேலும் 4 மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு விருதுநகர் திண்டுக்கல் திருப்பூர் ஆகிய நான்கு நகரங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் மற்ற மையங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version