அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி சாத்தியமாகுமா !

அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி-திமுக அப்ரண்டிஸ்கள் கடந்த 2019 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடை த்த மாபெரும் வெற்றியையும் 52 சதவீதவாக்கு சதவீதத்தையும் வைத்து சட்டமன் ற தேர்தலிலும் வெற்றி கிடைத்து திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்று கனவில்இருக்கிறார்கள்.

லோக்சபா தேர்தல் வேறு சட்டமன்ற தேர் தல் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தலில் மத்தியி ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்என்று தமிழக மக்கள் விரும்புவதால் காங்கிரஸ் கூட்டணிக்கே தமிழக மக்கள் இது வரை ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அ மையவே தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று அதிமுக ஆரம்பிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 10 சட்டமன்ற தேர்தல்களில் 7 சட்டமன்ற தேர்தல்களில் 1977, 1980,1984,1991,2001,2011,2016 ஆகியஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில்அதிமுக வெற்றி பெற்றதன் மூலமாகஅறிந்து கொள்ள முடியும்.

திமுக வெற்றி பெற்ற 1989 1996 மற்றும்2006 சட்டமன்ற தேர்தல்களிலும் மக்கள்வேறு வழியின்றியே திமுக கூட்டணியைவெற்றி பெற வைத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.1989 சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் ம றைந்த பிறகு அதிமுக ஜானகி அணி ஜெ யலலிதா அணி என்று இரண்டாக பிரிந்த போட்டியிட்டதால் இரட்டை இலை சின்னம் இல்லாததால் திமுகவினால் வெற்றிபெற முடிந்தது.

1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாசசிகலாவுடன் இணைந்து நடத்திய கோ மாளித்தனமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபம் கொண்டு வாக்களித்து இருந்தார்கள்.

அந்த தேர்தலில் ரஜினி மட்டும் தலையிடாமல் ஒதுங்கி இருந்தால் திமுக வெற்றி பெற்று இருக்கவே முடியா து2006 சட்டமன்ற தேர்தலிலும் 2001-2006 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அரசு கொ ண்டு வந்த மதமாற்ற தடைசட்டம் அரசு ஊழியர்களுக்கு எதிரான டெஸ்மா எஸ் மா சட்டங்கள் ஆடு கோழி பலியிட தடை சட்டம் பஸ் கட்டண உயர்வு மின் கட்டண உயர்வு என்று சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டதால் தான் அதிமுக தோல்வி அடைந்தது.அதுவும் திமுக காங்கிரஸ் பாமக இரண்டுகம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லிம் அமைப்புகள் என்று ஒரு மெகா கூட்டணி அமைந்த தால் மட்டுமே அதிமுக தோல்வி அடைந்தது.

2006 சட்டமன்ற தேர்தலில் பாமக மட்டு ம் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரு ந்தால் 2006 சட்டமன்ற தேர்தலிலும் திமுக. வெற்றி பெற்று இருக்க முடியாது2006 சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள்கூட்டணியுடன் திமுக போட்டியிட்டு கலர்டிவி 2 ஏக்கர் நிலம் என்று வண்டி வண்டியாக அள்ளி விட்டாலும் 96 தொகுதிகளில் மட்டுமே. வெற்றி பெற முடிந்தது.பெரிய கூட்டணி இல்லாமல் அதிமுக 61 தொ குதிகளில் வெற்றி பெற்றது.2006 சட்டமன்ற தேர்தலில் மதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையுடன்போட்டியிட்ட அதிமுக சுமார் 40 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த 40 சதவீதத்தில்அதிமுகவுக்கு மட்டும் 35 சதவீத வாக்கு கள் இருக்கும் என்று கூறலாம்.காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி இரண் டு கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லிம் லீக்என்று மிகப்பெரிய கூட்டணியை அமை த்து போட்டியிட்ட திமுக சுமார் 45 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது.

இதில் திமுகவுக்கு 30 சதவீத வாக்குகள்மட்டுமே இருக்க முடியும் .மற்ற 15 சதவீத வாக்குகளில் காங்கிரஸ் 5 % பாமக 4% இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்.முஸ்லிம் லீக் 2% இருக்கும். ஏனைய 4 சதவீத வாக்குகள் கடைசி நேரத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெற இருக்கிறார்கள் என்று மக் கள் நினைக்கிறார்களோ அந்த கூட்டணிக்கு ஆதரவாக தானாகவே விழுந்து விடு ம் வாக்குகள்.ஆக தமிழகத்தை பொறுத்த வரை அதி முக சுமார் 35 சதவீத வாக்குகளை உடை. ய முதல் பெரிய கட்சி திமுக சுமார் 30சதவீதம் உடைய இரண்டாவது பெரிய கட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது.

அதிமுக நம்பர் 1 கட்சியாக இருப்ப தால் தான் திமுகவுடன் மோதிய 10 தே ர்தல்களில் 7 தேர்தல்களில் வெற்றிபெற்று இருக்கிறது.இப்பொழுது மேட்டருக்கு வருகிறேன் 1980 லோக்சபா தேர்தலில் திமுக கா ங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கோபி செட்டி பாளையம்மற்றும் சிவகாசி என இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

அப்பொழுது திமுக கூட்டணி 56 சதவீதம்வாக்குகளும் அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளும் பெற்று இருந்தது.எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவே லோக்சபா தேர்தலில் திமுக காங்கிரஸ்கூட்டணியிடம் படு தோல்வி அடைந்துஇருக்கிறது.

ஆனால் 1980 ஜனவரியில் லோக்சபா தேர்தல் முடிந்து பிப்ரவரியில் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்து விட்டு 1980 மே மா தம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சுமார் 49 சதவீதம் வா க்குகளை பெற்று 162 தொகுதிகளில் வெற்றிபெற்றது.ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி சுமா ர் 44 சதவீத வாக்குகளையே பெற்று 69தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதுபாருங்கள் 1980 லோக்சபா தேர்தலில் 56சதவீதமாக இருந்த திமுக காங்கிரஸ் கூட்ணி 1980 சட்டமன்ற தேர்தலில் 44 சதவீத ம் வாக்குகளையே பெறுகிறது.

அதாவதுலோக்சபா தேர்தலில் பெற்ற 12 சதவீதம் வாக்குகளை சட்டமன்ற தேர்தலில் இழ ந்து விடுகிறது.அதே மாதிரி 2004 லோக்சபா தேர்தலில்அமோக வெற்றி பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி 57 சதவீதம் வாக்குகளை பெற்று 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது.அந்த தேர்தலில் படு தோல்வி அடைந்த அதிமுக பிஜேபி கூட்டணி 35 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.

ஆனால் 2006 சட்டமன்ற தேர்தலில் திமுககாங்கிரஸ் கூட்டணி 45 சதவீத வாக்குகளையே பெற்றது அதிமுக மதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளை பெற்றதுபாருங்கள் 2004 லோக்சபா தேர்தலில் 57 சதவீத வாக்குகளை பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற தேர்தலின் பொழுது 12 சதவீத வாக்குகளை இழந்து 45சதவீத வாக்குகளை மட்டுமே பெறுகிறதுஅதே சமயத்தில் 2004 லோக்சபா தேர்த லில் 35 சதவீத வாக்குகளை பெற்ற அதி முக 2006 சட்டமன்ற தேர்தலில் 40 சதவீதவாக்குகளை பெற்று விடுகிறது.ஆக திமுக காங்கிரஸ் கூட்டணி லோக் சபா தேர்தலின் பொழுது பெறுகின்றவாக்குகளில் சுமார் 12 சதவீத வாக்குகளை சட்டமன்ற தேர்தலின் பொழுது இழந்து விடுகிறது .

அதே சமயத்தில் அதிமு க லோக்சபா தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் சுமார் 5 சதவீதம் வாக்குகளைஅதிகமாக பெறுகிறது.இது தாங்க இந்த சட்டமன்ற தேர்தலிலும்நடைபெற இருக்கிறது. 2019 லோக்சபாதேர்தலில் 52 சதவீத வாக்குகளை பெற்றதிமுக கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பொழுதே சுமார் 12 சதவீ தம் வாக்குகளை இழந்து சுமார் 40 சதவீதவாக்குகளுடன் தான் தேர்தல் களத்தில்நுழைகிறது.

அதே சமயத்தில் அதிமுக கூட்டணி கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பெற்ற 31 சதவீத வாக்குகளை விட இந்த சட்டமன்ற தேர்தல் என்பதால் சுமார் 5 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி இழக்கும் 12 சதவீ த வாக்குகளில் இருந்து பெற்று சுமார் 36 சதவீத வாக்குகளுடன் தேர்தலுக்கு மு ன்பே இருந்தது.ஆக தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுது திமுக கூட்டணி சுமார் 40 சதவீதம் அதிமு க கூட்டணி சுமார் 36 சதவீதம் வாக்குகள்என்றே இருந்து இருக்கும் இதற்கு பிறகு கூட்டணி தொகுதிப் பங்கீ டு வேட்பாளர் தேர்வு தேர்தல் அறிக்கை என்று அதிமுக கூட்டணி சுமார் 5 சதவீதம்வாக்குகளை அதிகமாக பெற்று தேர்தலி ன் பொழுது சுமார்41 சதவீத வாக்குகளு டன் திமுக கூட்டணியை முந்தி விட்டதுகடைசி நேரத்தில் அதிமுக அளித்த பண பட்டுவாடா மூலமாக ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிக்க விரும்பும் 5 சதவீத மக்க ளில் சுமார் 3 சதவீத மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து இருப்பார்கள். இதி ல் 2 சதவீதம் வாக்குகள் திமுகவுக்கு போ கலாம்.ஆக வாக்குப்பதிவு முடிவில் அதிமுக கூட்பணி 43-44 சதவீதம் வாக்குகளுடனும் திமுக கூட்டணி 41-42 சதவீத வாக்குகளு டன் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில்அதிமுக 41 சதவீத வாக்குகளையும் திமு க 40 சதவீத வாக்குகளையும் பெற்று இருந்தது.ஆட்சிக்கு எதிராக ஆன்டி இன்கம்பன்சி இல்லாத இந்த தேர்தலில் அதிமுக கூட்ட ணியில் பாமகவும் இருப்பதால் அதிமுக பிஜேபியி னால் இழக்கும் மைனாரிட்டி ஓட்டுக்களையும் ஈடு செய்து சுமார் 2 சத வீதம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வை வீழ்த்தி ஆட்சியை மீண்டும் கைப்ப ற்றி ஹாட்ரிக் அடிக்க இருக்கிறது.

கட்டுரை எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி .

Exit mobile version