திமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க ! புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக

மத்திய மோடி அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது. இந்தபுதிய கல்வி கொள்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பல முக்கிய மாற்றங்களுடன் பல கல்வி வல்லுநர்கள் ஆலோசனையின் படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய கல்வி கொள்கையை நாட்டில் பல மாநிலங்கள் புதிய நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளார்கள். சில மாநிலங்கள் அதன் சாதக பாதக அம்சங்களை ஆராய கமிட்டி அமைத்து அதை ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் மாநிலங்கள் மற்றும் மக்களிடையே புதிய கல்விக்கொள்கைக்குஆதரவு தெரிவித்திருந்தாலும்,வழக்கம் போல் நம் தமிழ்நாட்டில் தி.மு.க. இந்த புதிய கல்விக்கொள்கைக்கு தன் பலத்த எதிர்ப்பை தெரிவித்து தினமும் ஓர் அறிக்கை என பிதற்றி கொண்டிருக்கின்றது.

மத்திய மோடி அரசு எதைச் செய்தாலும் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்ப்பது தான் திமுகவின் கொள்க . தி.மு.க.வை தொடர்ந்தது அதிமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது திமுகவிற்கு சாறு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்றும்,புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பிற அமசங்களை ஆராய கமிட்டி அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட போதும்,தமிழகத்தில் மட்டும் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் நடைப்பெற்ற்றது அதை பற்றி இன்னும் பேசி வருகிறார்கள் திராவிட கட்சிகள்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி க்கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு
இருப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. எதிர்கட்சியான திமுக எதிர்ப்பது அவர்களின் வேலை. ஆனால்பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக அரசு எதிர்ப்பதா ல் பாஜக அதிமுக கூட்டணி அவ்வளவு தான் என்று
நினைக்கிறார்கள். ஏனென்றால் அதிமுக வின் இந்த புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு தான் திமுகவுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கேட் போட முடியும். அதனால் தான் அதிமுகவின் புதிய கல்விக்
கொள்கை எதிர்ப்பை பாஜக பெரிதாக எடுத்து கொள்ளாது.

இரு மொழிக்கொள்கை தான் மக்களின் மனதில் உள்ளது என்று மொழிக்கொ ள்கை என்றால் என்னவென்றே தெரியா த சாமான்ய மக்களின் மனதில் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது திராவிட பித்தலாங்ட்டங்களில் ஒன்று.வழக்கமா ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஒன்றை ஆதரிப்பதும் எதிர்க்கட்சியான பிறகு அதனை எதிர்ப்பதும் திமுகவின் சராசரி அரசியலாகும்.ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது மத்திய அரசுடன் மோதாமல் செழித்து இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டை தவிர்த்து இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல,உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கல்வியை அரசியல் களமாக்கியதில்லை.ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே மொழியும் கல்வியும் தான் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு பிரதான ஆடுகளமாகும்.1932,1952,1965-66ல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டங்கள் என மொழியும்,கல்வியுமே பிரதான அரசியல் களங்களாக இருக்கின்றன. தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளும் கல்வியில் மாற்றம் முன்னேற்றம் வர வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாமல் அரசியல் செய்கின்றன.

தமிழகத்தில்,சாதி ஒழிப்பு,சமூக நீதி எனும் விஷயங்களை முன்னிறுத்தி தி.மு.க. ஆட்சியை கைப்பற்றிய பிறகு1970 களின் பிற்பகுதியிலே அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் 1977ல் இந்திரா காங்கிரஸோடு சேர்ந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று முதல்வர் ஆன பிறகு Never fight with Delhi எனும் அணுகுமுறையை கடைபிடித்தார்.

1977,1980,1984 எனத் தொடர்ந்து தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் இருந்த எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது.1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.கவின் ஆட்சி கலைக்கப்பட்டு,1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆனார்.அதன் பிறகு இந்த இரண்டு கழகங்களும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன.2011 மற்றும் 2016 தேர்தல்களில் மட்டும் அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றது.

இரண்டு கழகங்களும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பொதுவான சில பிரச்சனைகளைத் தான் மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகளாக முன்னிறுத்தி வந்திருக்கின்றன.அந்த பிரச்சனைகளை கையாளும் விஷயத்தில் ஒருவர் மற்றவரை சிறந்தவராக காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.

இரு கழகங்களுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து வருகின்றன.ஆனால் டாஸ்மாக்கை ஊக்குவித்துத் தமிழகமெங்கும் சாராயத்தை ஓட விட்டதில் இரு கட்சிகளுக்குமே பங்குள்ளது.மதுபான ஆலைகளின் அதிபர்கள் இரு கழகங்களிலுமே இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க. தரப்புச் சாராயச் சக்ரவர்த்திகளின் வருமானம் குறைகிறதே தவிர,முடக்கப்படுவதில்லை.அதே போலத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. தரப்பும் பாதிக்கப்படுவதில்லை.

தமிழகத்தின் உயிர் நாடிப்பிரச்சனைகளாக மது ஒழிப்பு,கூடங்குளம் அணு உலை,கெயில் எரிவாய் குழாய்,மீத்தேன் வாயு எடுத்தல்,ஸ்டெரிலைட் ஆலை ஆகியவை சரியான புரிதல் இல்லாமல் முன்னிறுத்தப்பட்டு இரு கட்சிகளும் அவற்றிற்கு சொந்தம் கொண்டாடுகின்றன.தமிழ் ஆட்சி மொழி,தமிழ் வழிக்கல்வி,தமிழக மக்களின் பண்பாடு,ஜல்லிக்கட்டு,கச்சத் தீவு,தமிழக மீனவர்கள்பிரச்சனை,முல்லைப்பெரியாறு,காவிரி நதி நீர் பங்கீடு என பல பிரச்சனைகள் முன்னிறுத்தப்பட்டு இரு கழகங்களும் மக்களை குழப்புகின்றன.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் நல்லதொரு மாற்றத்தை மக்கள் கொண்டு வருவார்கள்,, மேலும் புதிய கல்வி கொள்கையில் அதிமுக எடுத்துள்ள முடிவு திமுகவிற்கு செக் வைத்துள்ளது என்று கூறலாம்.

Exit mobile version