திடீரென அழைத்த அமித்ஷா டெல்லிக்கு பறந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !

சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று, ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.

இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள். ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றி, தற்போது தமிழ்நாடு ஆளுநராக இருப்பவர் ஆர்.என்.இரவி.

தமிழக கவர்னர் ஆர். என்.ரவி  திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் கவர்னர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க இருந்த நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ளார். 

இதுகுறித்து இருவேறு தகவல்கள் வெளி வருகின்றன..

நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் நாகலாந்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என். ரவி,  ஏற்கனவே நாகலாந்து கவர்னராக இருந்துள்ளார். எனவே, நாகலாந்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க உள்துறை அமைச்சகம் கவர்னர் ஆர்.என்.ரவியை  அழைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மற்றோன்று

ஆளுநர் – டி.ஜி.பி., சந்திப்பின் போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்து, முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள அதிகாரிகள், தனக்கு விளக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.கவர்னரின் சார்பில் அவரது செயலாளர் எழுதி உள்ள அந்த கடிதத்தை மேற்கோள் காட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

தமிழக கவர்னர் மாநிலத்தில் உள்ள சில துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய நலத்திட்டங்கள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி அறிய விரும்புகிறார்.கவர்னரிடம் உங்கள் துறையின் மாநிலம் மற்றும் மத்திய அரசு ஆகிய இரண்டின் தற்போதைய நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலே கூறப்பட்ட நோக்கத்திற்காக கம்ப்யூட்டர் பவர் பாயின்ட் விளக்கக் காட்சியும் தயாரித்து வைத்து இருக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட பவர் பாயின்ட் விளக்கக் காட்சிக்கு முன்பு விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி அனைத்து துறை செயலாளர்களும் அவரவருக்கு ஒதுக்கப்படும் நாட்களில் கவர்னர் மாளிகைக்கு சென்று துறை ரீதியாக கவர்னரிடம் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும். விரைவில் ஆளுநர் ரவி அதற்கான ஒப்புதலை தருவார் என நம்புவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் திடீரென ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் ரீதியாக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version