அர்னாப் கைது – எமர்ஜென்சி காட்சிகளை மறுபடியும் காங்கிரஸ் அரங்கேற்றுகிறது…

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்து, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அர்னாப் மற்றும் அவர் மகன், போலீசால் தாக்கப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

“காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள், மறுபடியும், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர்.  ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண்.  எமர்ஜென்சி காலத்தில் ஊடகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டது.  ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமியின் கைது நடவடிக்கை எமர்ஜென்சி கால அட்டூழியங்களை நினைவுபடுத்துகிறது” என்கிறார்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.”மகாராஷ்டிரா அரசு இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காட்சிகளை மறு அரங்கேற்றம் செய்கிறதா?” என்று கோவமாக வினவுகிறார் நிர்மலா சீதாராமன்.

ஏகே47 துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்களை அழைத்து வந்து அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.  காவலர்களால் அர்னாப் தாக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என்கிறார் துக்ளக் ஆசிரியர் எஸ் குருமூர்த்தி.இந்த கைது நடவடிக்கை பத்திரிகை ஆசிரியர்களின் கூட்டமைப்பு (Editors Guild Of India) கண்டனம் செய்துள்ளது. அர்னாப் கோஸ்வாமியுடன் கருத்து வேற்றுமைகள் பல இருந்தாலும் அவரது கைது நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று பால்கி ஷர்மா, ராகுல் ஷிவ்சங்கர், நாவிகா குமார், வீர் சங்வி  உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  விநாச காலே விபரீத புத்தி என்று சொல்லுவார்கள். 

\மகாராஷ்டிரா அரசு தனது ஊடக விரோத நடவடிக்கைகளினால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.  மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கைகள் பலருக்கு எமர்ஜென்சி கால அட்டூழியங்களை நினைவுபடுத்தி விட்டன.  காங்கிரஸ் கட்சி பின்னிருந்து இயக்கும்போதே இவ்வளவு அட்டூழியங்களை நிகழ்த்திக் காட்டும்போது, காங்கிரஸ் கட்சி இனிமேல் மக்களின் நம்பிக்கையை பெறுவது என்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.

பத்திரிக்கை சுதந்திரம் என்று வாய் கிழியப் பேசும் பலரும், அர்னாப் கோஸ்வாமி கைது நடவடிக்கைக்கு வாய்மூடி அமைதியாக இருப்பது விந்தையிலும் விந்தை.-கட்டுரை:- பத்மநாபன் நாகராஜன்

Exit mobile version